கடைசி தோட்டா விமர்சனம் 3.5/5..  படக்குழு வச்ச குறி தப்பவில்லை

கடைசி தோட்டா விமர்சனம் 3.5/5..  படக்குழு வச்ச குறி தப்பவில்லை

 

கடைசி தோட்டா விமர்சனம் 3.5/5..  படக்குழு வச்ச குறி தப்பவில்லை

 

ஸ்டோரி…

தமிழக எம்எல்ஏ ஒருவர் தன்னிட உள்ள கருப்பு பணத்தை வருமானத் துறைக்கு பயந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (ரிசார்ட்டில்) பதுக்கி வைக்கிறார்.. இந்த ரகசியத்தை அறிந்த சிலர் சுற்றுலாவாசிகளைப் போல அங்கு தங்கி கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராதாரவி, தேன் நிலவு வந்த ஸ்ரீகுமார் தம்பதி, கள்ளக்காதலியுடன் வந்த வையாபுரி, தனியாக வந்த சுவாமிநாதன் ராஜேஷ், மகனின் சிகிச்சைக்காக வந்த கொட்டாச்சி & மனைவி, யூடியுப் வீடியோ எடுக்கும் நண்பர்கள் ஆகியோர் அங்கு தங்குகின்றனர்..

இதனிடையில் ஒரு இளம் பெண் ஒருவர் அந்த விடுதி அருகே சுட்டுக் கொல்லப்படுகிறார்.. அவர் யார் அவர் விடுதிக்கு வந்த நோக்கம் என்ன? அவரை கொன்ற கொலையாளி யார்? அவரது நோக்கம் என்ன? அவர்களுக்கும் இந்த குழுவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பதை பற்றிய விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி வனிதா.

அதன் பிறகு நடந்தது என்ன.? என்பதே மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கதையின் நாயகனாக ராதாரவி.. அனுபவ நடிப்பால் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் இவரது மனைவியாக ஸ்ரீஜா இவர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் படியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வனிதா எப்படி விசாரித்தார் என்பதை விட எத்தனை சிகரெட் பிடித்தார் என்பதை கணக்கு போடலாம் போல.. உடைகளில் தூக்கலான கவர்ச்சி கொடுத்திருக்கிறார்..

இவர்களுடன் ஸ்ரீகுமார்.. கொட்டாச்சி, வையாபுரி, சுவாமிநாதன் ராஜேஷ் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

Music By : VR Suwaminathan Rajesh

Produced By : RVR Studios – VR Suwaminathan Rajesh

ஒரு திரில்லர் படத்திற்கு ஏற்ற விறுவிறுப்பை தன் திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் டைரக்டர் நவீன்.. அவர் வைத்த நம்பிக்கையை தங்கள் பணியில் கொடுத்து இருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் மோகன் குமார் எடிட்டர் லோகேஷ்வர் மற்றும் இசையமைப்பாளர் வி ஆர் சுவாமிநாதன்.. கானா பாடல் தாளம் போட வைக்கிறது.. பின்னணி இசை விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது..

ஒளிப்பதிவாளர் மோகன் குமார்.. இரவு நேர சீன்களுக்கு தேவையான லைட்டிங் கொடுத்து படமாக்கியிருப்பது சிறப்பு..

பெரும்பாலும் திரில்லர் படங்களில் எடிட்டிங் புரியாத புதிராகவே இருக்கும்.. ஆனால் இதில் ரசிகர்கள் யூகிக்க முடியாவிட்டாலும் புரியும் வகையில் எடிட்டிங் செய்திருக்கிறார் லோகேஷ்வர்..

வழக்கமான திரில்லர் கதை என்றாலும் அதில் சென்டிமென்ட்க்கு ராதாரவி – ஸ்ரீஜா ரவி காட்சிகள் அழகு.. அம்மா ஸ்ரீஜா கொஞ்ச நேரமே என்றாலும் சிறப்பு..

இயக்குனர் நவீனை பாராட்டியாக வேண்டும்.. 1980 களில் ராதாரவி நாயகனாக நடித்திருந்தாலும் அவரை 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார்.. இது கதையின் மீது இயக்குனர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது..

கொலை செய்தது யார் ? என்பது முன்பே தெரிந்தாலும், கொலை பின்னணி.. சாட்சிகளின் தடுமாற்றம் ஆகியவற்றை போர் அடிக்காமல் கொடுத்திருப்பது இயக்குனர் நவீனின் டச்..

ஆக இந்த கடைசி தோட்டா… இயக்குனர் நவீன் வச்ச குறி தப்பவில்லை

Kadaisi Thotta movie review