கருப்பு விமர்சனம் 3.75/5.. கோர்ட் மாஃபியாவை எதிர்த்து கொடி நாட்டிய கருப்பசாமி

கருப்பு விமர்சனம் 3.75/5.. கோர்ட் மாஃபியாவை எதிர்த்து கொடி நாட்டிய கருப்பசாமி

 

கருப்பு விமர்சனம் 3.75/5.. கோர்ட் மாஃபியாவை எதிர்த்து கொடி நாட்டிய கருப்பசாமி

 

ஸ்டோரி…

சென்னைக்கு தன் மகளின் சிகிச்சைக்காக வருகிறார் மலையாளி இந்திரன்ஸ்.. ஒரு கட்டத்தில் தவறுதலாக தன் 60 பவுன் நகையை பறி கொடுத்து விடுகிறார்.. போலீசில் புகார் அளித்தால் அது 45 பவுன் ஆக மட்டுமே கிடைக்கிறது.. எனவே நீதிமன்றத்தை நாடுகிறார் இந்திரன்ஸ்..

ஆனாலும் பணம் பறிக்கும் வக்கீல் ஆர் ஜே பாலாஜியிடம் மாட்டிக் கொள்கிறார்.. நீதி கிடைக்க தாமதமானதால் தன் மகளையும் பறிகொடுத்து விடுகிறார் இந்திரன்ஸ்..

இதனையடுத்து அந்த கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பு சாமியிடம் தன் பிரச்சனையை ஆவேசமாக முறையிடுகிறார்.. பக்தனின் குரல் கேட்டு (சூர்யா) கருப்பசாமி வந்தாரா.? இவருக்கு உதவினாரா.? என்பதெல்லாம் நீதிக்கதை..

மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று டைட்டில் கார்டில் போடப்படுகிறது…


 

கேரக்டர்ஸ்…

ஹீரோ சூர்யா என்றாலும் கதை நாயகன் ஆர் ஜே பாலாஜி.. படம் தொடங்கி அரை மணி நேரத்திற்கு பிறகு தான் ஹீரோவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் டைரக்டர்..

காவல்துறையை மீறிய நம்பிக்கை நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும்.. ஆனால் நீதித்துறை களங்கத்தையும் தைரியமாக சொன்ன இயக்குனரை பாராட்டிய ஆக வேண்டும்.. அந்தக் களங்கத்தை அழிக்கும் கடவுளாக கருப்பசாமி வருகிறார்..

ஆக்ஷனில் அசத்தி கருப்புசாமிக்கு பில்டப்பும் கொடுத்திருக்கிறார்.. தன் அன்பான ரசிகர்களுக்கு கோடை விருந்து அளித்திருக்கிறார்..

இடைவேளைக் காட்சியில் சூர்யாவும் ஆர் ஜே பாலாஜியும் சந்திக்கும் காட்சி சுவாரஸ்யமானது..

நாயகியாக த்ரிஷா.. வக்கீலாக வருகிறார்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அழகியாக கவர்கிறார்..

நீதிபதியாக நட்டி நடராஜ்.. திருட்டுத்தனம் செய்யும் வக்கீல் – நீதிபதி இவர்களை பார்க்கும்போது நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க வாய்ப்புண்டு..

மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் அவரது மகள் சென்டிமென்ட் கண்கலங்க வைக்கும்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த திறமையான மலையாள நடிகர் இந்திரன்ஸ்.. இனி இவருக்கும் வாய்ப்புகள் தமிழில் குவியும்..

டெக்னீசியன்ஸ்…

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.. பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல் ராகம் கருப்பசாமி பாடல் அனல் தெறிக்கும் ரகம்..

ஒளிப்பதிவு கலர்ஃபுல்.. ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கருப்பசாமியாக சூர்யா மாறும் போது தியேட்டரில் திருவிழா கோலம்…

படத்தொகுப்பாளரும் தன் பணியில் சிறப்பு..

இயக்குனர் கதையின் நாயகன் என அசத்தியிருக்கிறார்.. மூக்குத்தி அம்மன் படத்தில் தனக்கான கதைக்களம் அமைத்தது போல இதிலும் அந்த வித்தையை கையாண்டிருக்கிறார் ஆர் ஜே பாலாஜி..

கடவுள் நம்பிக்கை இருக்கோ. இல்லையோ.. ஆனால் கடவுளை நம்பும் பக்தர்கள் ஏதாவது ரூபத்தில் கடவுள் வந்து உதவ செய்வார் என நினைப்பார்கள்.. அவர்களுக்கு இந்த கருப்பசாமி வரம் தரும் கருணை சாமி..

‘நீதிமன்றத்திற்கு வந்தால் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துவிடும்.. ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதே தண்டனையாக மாறிவிட்டது என்னும் வசனம்..’ நீதி கிடைக்காத தாமதத்தை சொல்லும்..

கோர்ட் என்றால் கருப்பு உடை தான்.. கருப்பசாமி இரண்டையும் இணைத்து கருப்பு என்று பெயர் வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்..

பெரும்பாலும் ஹிட் படங்களில் இடைவேளைக்கு முன்பு கமர்சியல்.. அதன் பின்னர் எமோஷனலாக இருக்கும்.. ஆனால் இதில் முதல் பாதியில் எமோஷனல் கொடுத்து இரண்டாம் பாதியில் கமர்சியல் கலந்து ஹிட்டடித்து இருக்கிறார் இயக்குனர் RJB என்ற ஆர் ஜே பாலாஜி..

 

Suriyas Karuppu movie review