Heartin – ஹார்டின் விமர்சனம்

Heartin – ஹார்டின் விமர்சனம்

Heartin – ஹார்டின் விமர்சனம்.. நம் ஹார்ட்டில் ஒட்டவில்லை

 

ஸ்டோரி…

சனந்த்.. ஜெய்ப்பூரில் தன் நண்பர் மணியுடன் ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளராக வருகிறார் இமையா.. ஒரு கட்டத்தில் சனந்த் திறமையை கண்டு இமையா இவரை காதலிக்க.. எனக்கு ஏற்கனவே காதல் வலி அதிகம்.. என சொல்லி காதலை ஏற்க மறுக்கிறார் சனந்த்..

பின்னர் ஒரு கட்டத்தில் காதலையும் ஏற்கிறார்.. (அதற்கு போதுமான காரணம் இல்லை..) அந்த சூழ்நிலையில் தலையில் ஒரு விபத்து ஏற்படவே திடீரென ஐந்து வருடங்கள் நினைவை இழக்கிறார்..

முன்னாள் காதலி மடோனாவின் காதல் நினைவுகள் மட்டுமே இருக்க இமையாவின் காதலை மறக்கிறார்.. இப்படியான சூழ்நிலையில் மடோனாவையும் அழைத்து வந்து நண்பன் சிகிச்சைக்கு உதவி கேட்கிறார் மணி.

அதன் பிறகு என்ன நடந்தது? முதல் காதலியுடன் இணைந்தாரா.? இரண்டாவது காதலியை கரம் பிடித்தாரா?

கேரக்டர்ஸ்…

Sananth as Shiva
Madonna Sebastian as Sahitya
Emaya T. as Sadhana
Whatsapp Mani as Mani
உமா பத்மநாபன் — வரலக்ஷ்மி
மேத்யூ வர்கீஸ் — ஸ்ரீனிவாஸ்
டெப்னிடா கர்
பிரகதி மகாவாடி
அஜித் கோஷி

சனந்த் – மடோனா – இமையா.. மூவரை வைத்து முக்கோண காதல் கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்.. ஆனால் மூவரின் நடிப்பிலும் மெச்சூரிட்டி இல்லை..

மடோனா சனந்த்தை காதலிக்கவில்லை என்பது நமக்கே தெரிகிறது.. ஹீரோக்கு ஏன் தெரியவில்லை..?

இமையாவின் காதலை ஏற்க மறுக்கும் சனந்த் திடீரென மீண்டும் காதலிக்க காரணம் இல்லை.. நினைவு திரும்ப நினைவு மறக்க இப்படியான முக்கியத்துவம் வாய்ந்தது காட்சிகளுக்கு போதுமான நடிப்பு இல்லை..

சீரியஸான இந்தப் படத்தில் கொஞ்சம் கவுண்டர் கொடுத்து ரசிக்க வைக்கிறார் நண்பன் மணி கேரக்டர்..

டெக்னீசியன்ஸ்…

இசை : ராஜேஷ் முருகேசன் (‘பிரேமம்’ பட புகழ்)

விழியோடு உறவாட இமையாக உனை கேக்கிறேன்…

சொந்தமெல்லாம் கூடியாச்சே..
சந்தோசம் தான் கோடியாச்சே… ஆகிய பாடல்களும் பாடல் வரிகளும் ரசிக்க வைத்து வசியம் செய்கிறது..

ஒளிப்பதிவு: முகேஷ்.. ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி காட்சிகளை கலர்ஃபுல்லாக்கி கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.. அந்த ஹோட்டலில் கலை இயக்குனரின் பணி வெகு சிறப்பு.. ரசித்து வடிவமைத்திருக்கிறார்..

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்..

கிஷோர் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.. முக்கோண காதல் கதையை சொல்ல முற்பட்டு எந்த காதலும் முடிவில்லாத பாணயில் சொல்லி இருக்கிறார்..

காதலை பிடிக்காதவர்களை காதலில் விழ வைத்தால் என்ன ரியாக்ஷன் இருக்குமோ? அதுவாகவே நடிகர்கள் உள்ளனர்.. இதனால் இந்த ஹார்டின் நம் ஹார்ட்டில் ஒட்டவில்லை

 

Heartin movie review