Sing Geetham – சிங் கீதம் விமர்சனம்.. எல்லாமே பாட்டாவே மாறி போச்சு..
Sing Geetham – சிங் கீதம் விமர்சனம்.. எல்லாமே பாட்டாவே மாறி போச்சு..
ஸ்டோரி…
கிராமத்தின் இயற்கை வளங்களை நேசிக்கும் பெண் நாயகி கௌரி.. அந்தப் பகுதியில் தங்க சுரங்கம் இருப்பதால் மக்கள் எல்லாம் பேராசைப்பட்டு கொண்டிருக்க இவர் மட்டும் இயற்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்..
இந்த சூழ்நிலையில் அவர் பாதுகாத்து வளர்க்கும் ஒரு மரமும் வெட்டி சாய்க்கப்படவே கடவுளிடம் முறையிடுகிறார்..
இவரை வேண்டுகோளை ஏற்ற கடவுள் அந்த ஊர் மக்களின் பேச்சை தடை செய்து பாடல் பாட செய்கிறார்.. உதாரணத்திற்கு நீ இங்கே வா என்று பேசினால் கூட அது பாட்டாகவே ஒலிக்கிறது..
இப்படியான சூழ்நிலையில் அந்த மக்கள் என்ன செய்தனர்.? அவர்களால் இனி பேசவே முடியாதா.? இயற்கை அழிக்க நினைத்த மக்களுக்கு கடவுள் கொடுத்த சாபம் முடிந்ததா.? இதன் மூலம் மக்களுக்கு அவர் சொல்லும் பாடம் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…
அஹல்யா பம்ரூ – கௌரி
மரமே சுவாசம்.. மரமே அழகு.. அதுவே தன் ஆயுள் என கௌரியாக கலக்கி இருக்கிறார் அஹல்யா.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்..
அயான்– பிரதாப்.. அறிமுகப்படம் என்றாலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.. பேராசைப்பட்டு ஒரு கட்டத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் இவரை எதார்த்த நடிப்பு ரசிக்க வைக்கிறது…
ஷாலினி கொண்டேபூடி – ரேணு.. கொஞ்சம் பணம்.. கொஞ்சம் அழகு.. கொஞ்சம் திமிர் என வெரைட்டி கொடுத்திருக்கிறார் ஷாலினி..
நிவேதா பெத்துராஜ் – சைலஜம்மா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவான நடிப்பில் நிவேதா.. பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் வந்தாலும் கண்கலங்க வைக்கிறார்..

தொழில்நுட்பக் கலைஞர்கள்…
இயக்குநர்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
தயாரிப்பாளர்: நாக் அஸ்வின்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
நிர்வாக இயக்குநர்: சங்கல்ப் கோரா
ஒளிப்பதிவாளர்: அங்கூர் சி
கலை இயக்குநர்: அரவிந்த் மூலே
ஒலி பதிவாளர்கள்: கிரண் எஸ், சின்னா கே, (பாடல்கள்) நாக்ரா, ரவி தேஜா ஜி.
மக்கள் தொடர்பு: யுவராஜ்

இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ்.. இவருக்கு தற்போது வயது 95..
வித்தியாசமான வேடங்களுக்கு பேசப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.. கமல்ஹாசனை அப்படியெல்லாம் பேச வைத்தவர் தான் இந்த சிங்கீதம்.. குள்ள மனிதராக கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள்… நான்கு வேடங்களில் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன்… வசனமே இல்லாமல் கமல் நடித்த பேசும் படம் ஆகிய படங்களை இயக்கியவர் தான் சிங்கீதம்..
தற்போது மக்களை மகிழ்விக்க மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கி இருக்கிறார்.. வசனமே இல்லாமல் ஒவ்வொரு வசனங்களும் பாடலாக ஒலிக்கப்பட்டால் அதில் சுவாரஸ்யம் எப்படி இருக்கும் என்பதை சிறந்த பாடகர் பாடகிகளைக் கொண்டு ரசித்து சிரித்து மகிழ இந்த சிங்கீதம் படத்தை கொடுத்திருக்கிறார் இந்த சிங்கீதம்..
அதற்கு உறுதுணையாக இருந்து சிங்கீத மழையை சங்கீத மழையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. ஒரு கட்டத்தில் பாடல்கள் அயற்சியைத் தர வழக்கமாக கேட்கும் பாடல்களையும் இடை இடையே சொருகி அதிலும் சுவாரசியம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
Sing Geetham movie review

