மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸ் விமர்சனம்.. கிறுக்கு பிடித்த கிரிக்-கெட்(டான்ஸ்)
மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸ் விமர்சனம்.. கிறுக்கு பிடித்த கிரிக்-கெட்(டான்ஸ்)
ஸ்டோரி…
தமிழக தென் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில்.. 4 நண்பர்கள் (ஒரு பெண் உட்பட) கிரிக்கெட் வெறியர்களாக இருக்கிறார்கள்.. கிரிக்கெட் பார்க்கவும் விளையாடவும் எதையும் செய்ய தயாராக உள்ளனர்..
ஒரு கட்டத்தில் இவர்களின் ஃபேவரிட் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விளையாடும் கடைசி மேட்ச் பார்க்க சென்னைக்கு செல்ல விரும்புகின்றனர்.. ஆனால் இவர்களிடம் டிக்கெட் கட்டணத்திற்கான பணம் இல்லாததால் ஊரில் ஒரு முக்கிய பிரபலத்திடம் பணத்தை திருடி அங்கிருந்து சென்னை கிளம்புகின்றனர்..
ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் எடுத்த டிக்கெட் டூப்ளிகேட் என்பது தெரிய வந்ததால் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலை..
அதன் பிறகு என்ன நடந்தது.? இவர்கள் விரும்பிய கிரிக்கெட் வீரரை சந்தித்தார்களா.? ஊரில் திருடிய பணத்தை திரும்பிக் கொடுக்க முடிந்ததா.? பணத்தையும் மானத்தையும் இழந்த இவர்கள் என்ன செய்தனர் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜெகபர் சாதிக்.. இந்த நால்வரை சுற்றியே கதை .. நட்பில் இருந்த நம்பகத்தன்மை காதலில் இல்லை… சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருக்கலாம்..
இவர்களுக்கு உறுதுணையாகவும் விவேக் பிரசன்னா, விஜய் சத்யா, நான் கடவுள் ராஜேந்திரன், சம்பத் ராம் & சரத் ரவி உள்ளிட்டோர் உண்டு..
இதில் அதிகமாக ஸ்கோர் செய்பவர் சம்பத்ராம்.. கிரிக்கெட் மேட்ச் பெட்டிங் கட்டி விட்டு அதில் ஜெயித்த பிறகு அவர் போடும் ஆட்டம் அவர் இதுவரை போடாத ஆட்டம்..

டெக்னீசியன்ஸ்…
மச்சான்… வெடிகாட்டா.. பாடல் தாளம் போட்டு ரசிக்க முடிகிறது.. ஆனால் நிறைய இடங்களில் இரைச்சல் இசையை கேட்க முடிகிறது.. மேலும் அடுத்தடுத்து கானா பாடல் வருவது நம் பொறுமையை சோதிக்கிறது..
ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார்.. வில்லேஜ் கிரிக்கெட்…சிட்டி கிரிக்கெட் என இரண்டும் வேறுபாடுகளை உணர்ந்து அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து படமாக்கி இருப்பது சிறப்பு
பரத் தனசேகரின் பின்னணி இசை பல இடங்களில் இரைச்சல்.. கானா பாடல்கள் அடுத்தடுத்து வருவது எரிச்சல்…
கிரிக்கெட் கிரிக்கெட் என்று படம் முழுக்க கிரிக்கெட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கிறது.. அதில் நட்பு ரொமான்ஸ் குடும்ப செண்டிமெண்ட் கொடுத்திருந்தால் படம் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக்கி இருக்கும்..
இன்றைய ஜென்சி கிட்ஸ்களை மையப்படுத்தி படத்தை எடுத்திருந்தாலும் மம்பட்டியான் ஸ்டார் என்பது என்பதற்கான படத்தின் தலைப்புகளை நினைவு படுத்துகிறது..
தொடரை இயக்கியிருக்கும் சவிர் சுதாகர்.. கிரிக்கெட் என்றாலே கிறுக்கு பிடித்து அலையும் நபர்களுக்காக இந்த வெப் தொடரை கொடுத்திருக்கிறார்..
ஒவ்வொரு வெப் தொடர் முடியும் போது அடுத்தது என்ன நடக்கும் என்ற உணர்வு ஏற்படுத்தி இருந்தால் நமக்கு ஆர்வம் அதிகரித்து இருக்கும்..
ஆனால் எந்த எபிசோடும் அதன் முடிவும் அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்..
Mammatiyaan stars web series review

