GK2 – 1000 தியேட்டர்ஸ்.. ரெட்ஜெயன்ட் பழக்கம்.. TVK ஆன்லைன் வன்மம்.. ₹100 கோடி வரனும்… – விஷ்ணு விஷால்

GK2 – 1000 தியேட்டர்ஸ்.. ரெட்ஜெயன்ட் பழக்கம்.. TVK ஆன்லைன் வன்மம்.. ₹100 கோடி வரனும்… – விஷ்ணு விஷால்

 

 

GK2 – 1000 தியேட்டர்ஸ்.. ரெட்ஜெயன்ட் பழக்கம்.. TVK ஆன்லைன் வன்மம்.. ₹100 கோடி வரனும்… – விஷ்ணு விஷால்

 

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’.. .செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்

இந்த படத்தில் விஷ்ணுவுடன் ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா, கருணாஸ், கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன், காளி வெங்கட், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ரிலீஸ் நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துள்ளன..

ஜூலை மூன்றாம் தேதி 1000+ திரையரங்குகளில் மேல் வெளியானது.. மேலும் இன்ஸ்டாகிராமில் இந்த படத்தில் இடம்பெற்ற சம்பவக்காரி என்ற பாடலுக்கு இதுவரை 10,000+ மேற்பட்ட ரிலீஸ் வீடியோக்கள் வெளியாகியுள்ளன..

மேலும் ஆன்லைனில் புக் மை ஷோவில் 300K+ அதிகமான டிக்கெட் விற்பனை ஆகியுள்ளன..

இதனால் இந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.. மேலும் மதுரை தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களுக்கு சென்று தியேட்டர் விசிட் அடித்து வருகின்றனர்.

www.rightnewsraja.com

மதுரைக்கு சென்றபோது அங்கு நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் படக்குழுவினர் மதிய உணவு அருந்தினர்.. அப்போது வீடியோ காலில் தொடர்பு கொண்ட நடிகர் சூரி வாழ்த்தி பாராட்டினார்.. மேலும் ஊரே சொல்லுது படம் சூப்பர் என்று நானும் பார்க்க காத்திருக்கிறேன் என்று வாழ்த்தினார்…

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் விஷ்ணு விஷால் பேசும்போது..

தவெக கட்சி சிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர் என்று கேள்வி கேட்கப்பட்ட போது.. நெகட்டிவ் வன்மம் கூடாது.. எனக்கு இந்த ஆன்லைன் வன்மம் சுத்தமா பிடிக்கவில்லை.. அந்த அரசியலுக்குள் நான் போக விரும்பல.. அதை அரசியல் ஆக்க விரும்பல..

இந்த சமூகத்தை மாற்றுவதற்கு நாம் எல்லோரும் நினைத்து வருகிறோம்… ஆனால் சோசியல் மீடியா தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

எனக்கு ரெட் ஜியான்ட் நிறுவனம் 13 வருட பழக்கம். எனவே இந்த கட்டா குஸ்தி 2 படத்தையும் ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிட வேண்டும் என நினைத்தேன். அவர்கள் நல்ல முறையில் வெளியிட்டுள்ளார்கள்.

www.rightnewsraja.com

இந்த படம் தற்போது முழுக்க முழுக்க குடும்பங்களின் ஆதரவுடன் பாசிட்டிவான வசூலை கொடுத்து வருகிறது..

(இதுவரை 22 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது) 100 கோடி வசூலித்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம்.. எதிர்பார்க்கிறேன். அதில் பாதில் வந்தால் கூட சந்தோஷம்தான்” என்று பேசினார் விஷ்ணு விஷால்…

 

Vishnu Vishal happy with Gatta kusthi 2 response and he hate social media negativity