50 வருஷத்துல எத்தனையோ…; ரஜினியின் ரியல் லைஃப் பஞ்ச் டயலாக்கை ‘ஜெயிலர் 2’ படத்தில் வைத்த நெல்சன்
50 வருஷத்துல எத்தனையோ…; ரஜினியின் ரியல் லைஃப் பஞ்ச் டயலாக்கை ‘ஜெயிலர் 2’ படத்தில் வைத்த நெல்சன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘ஜெய்லர் 2’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது..
இந்தப் படத்தில் ரிலீஸ்க்கு முன்பு டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ₹ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது..
இந்தப் படம் இன்று வெளியானாலும் நேற்று சென்னை காசி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம் நடைபெற்றது..
இதில் ரஜினியின் மகளும் இயக்குனருனமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பங்கேற்று ரசிகர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்து ஜெயிலர் 2 படத்தை வரவேற்றார்.
இன்றும் சென்னையில் பல திரையரங்குகளில் ரஜினி குடும்பம் மற்றும் நெல்சன் அனிருத், தனுஷ் சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட வரும் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்..
படம் வெளியாகி முதல் காட்சி தமிழகத்தில் திரையிட்ட பிறகு பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்..
முக்கியமாக மீடியா பத்திரிக்கை நண்பர்கள் படத்தை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி உள்ளிட்டருடன் ரஜினிகாந்த் நடந்து வருவது போல காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் அலப்பறையை கிளப்பியுள்ளது என்றும் சொல்லலாம்.
இந்த காட்சியில் எஸ் ஜே சூர்யா ஒரு டயலாக் சொல்லுவார்.. உனக்கு என்ன பிரச்சனை கொடுத்தாலும் தாண்டி தாண்டி தாண்டி தாண்டி எப்படியா வர.? என்பார்..
அதற்கு ரஜினிகாந்த்… 50 வருஷத்துல எத்தனையோ பேர பாத்து இருக்கேன்.. என்று ஒரு பஞ்ச் டயலாக் சொல்வார் இது ரஜினியின் ரியல் லைஃப் கேரக்டருக்கு பக்காவாக பொருத்தமாக இருப்பதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த டயலாக் வரும்போது விசில் அடித்துக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்..
Nelson used Rajini real life punch dialogue in Jailer 2 movie

