பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்.. மாமியார் வீட்டில் சிக்கிய மருமகன்

பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்.. மாமியார் வீட்டில் சிக்கிய மருமகன்

பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்.. மாமியார் வீட்டில் சிக்கிய மருமகன்

 

ஸ்டோரி…

இளன் & சான்வீ மேக்னா..
ஹீரோ & ஹீரோயின்

திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்வது மணமகளின் சம்பிரதாயம்.. ஆனால் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் இந்த சம்பிரதாயத்தை மாற்ற நினைக்கிறார் நாயகி.. உன் வீட்டிற்கு நான் வரமாட்டேன்.. என் வீட்டிற்கு நீ வந்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து விடு என கண்டிஷன் போடுகிறார்.. அதுவும் திருமணம் முடிந்த பிறகு தான் இந்த கண்டிஷனை விதிக்கிறார் நாயகி.. அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்?

மனைவியை வீட்டுக்கு அழைத்து வர முயற்சித்தாரா அல்லது வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாரா என்பதெல்லாம் சுவாரசியமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்..

பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கியவர் இளன்.. இந்த படத்தில் தானே இயக்குனர் தானே ஹீரோ என புது அவதாரம் எடுத்திருக்கிறார்.. தன்னுடைய முதல் பட தலைப்பை கொஞ்சம் மாற்றி பியார் பிரேமா கல்யாணம் என வைத்திருக்கிறார்..

வீட்டோடு மாப்பிள்ளையாக சென்றால் மணமகனின் விதி என்ன.? அதிலும் வேலை இல்லாத வெட்டி மாப்பிள்ளை என்றால் அவரின் நிலை பரிதாபம் என்பதையும் நடிப்பில் பிரதிபலிக்கிறார் இளன்.. தனக்கு ஆக்சன் எல்லாம் ஒத்து வராது என்பதை அறிந்து கொண்டாரா என்
னவோ சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் படத்தை சுவாரஸ்யமாக தனக்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறார்..

கொஞ்சம் அழகு நிறைய நடிப்பு என ரசிகர்களை ஜாலி மூடில் வைத்திருக்கிறார் நாயகி சான்வீ.. நூடுல்ஸ் சிக்கல் நிறைந்த ஹேர் ஸ்டைல்.. ஸ்லிம் உடல்.. அதற்கு ஏற்ப காஸ்ட்யூம் என கவர்ச்சியிலும் கலக்கி இருக்கிறார்..

மணமகனை மிரட்டும் மாமியாராக வெளுத்து கட்டி இருக்கிறார் ராதிகா..

எம் எஸ் பாஸ்கர் மற்றும் கீதா கைலாசம்.. நாயகனின் பெற்றோர்களாக நடித்துள்ளனர்.. அது போல சான்வீயின் பெற்றோர்களாக ராதிகா மற்றும் குமரவேல்.. அனுபவ நடிப்பில் கலக்கியிருக்கின்றனர்…

 

செந்தில் மற்றும் யோகி பாபு கேரக்டரில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

டெக்னீசியன்ஸ்…

இயக்கம் மற்றும் நடிப்பு: இளன்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒரு சில இயக்குனர்களுக்கு இசை அமைப்பாளர் உடன் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்.. அது யுவன் & இளனுக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது.. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்… முக்கியமாக பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்து இருக்கிறார் யுவன்.. பத்துக்கு மேற்பட்ட பாடல்களை கொடுத்திருக்கிறார்..

பியார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ ஆகிய படங்​களை இயக்​கியவர் இளன்.. இந்த முறை இவரே ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படம் மூலம் நாயக​னாக அறி​முக​மாகிறார்..

காலங்காலமாக நாம் பார்த்து பழகிய மாமியார் மருமகள் சண்டைகள் இனி மாமியார் (மாமனார்) மருமகன் சண்டையாக மாறக்கூடும் என்பது போல காட்சி அமைத்திருக்கிறார்.. சொல்லப்போனால் அதுவும் நடக்கலாம்..

 

அப்படியானால் ஆண்மகனை பெற்ற பெற்றோர்களின் நிலை என்ன.? இனிவரும் காலங்களில் அதுபோல திரைப்படங்களும் வரக்கூடும்..

இந்தப்​படம் நெட்ஃப்​ளிக்ஸ் தளத்​தில் (ஆகஸ்ட் 21) ரிலீஸ் ஆகிறது…

 

Pyar Prema Kalyanam movie review