ராம் அண்ட் லீலா விமர்சனம்… மாலை 6 மணி ரகசியம்

ராம் அண்ட் லீலா விமர்சனம்… மாலை 6 மணி ரகசியம்

 

ராம் அண்ட் லீலா விமர்சனம்… மாலை 6 மணி ரகசியம்

 

ஸ்டோரி…

திருமண வயதாகியும் பெண் கிடைக்காமல் அவதிப்படும் நாயகன் ரியோ ராஜ்.. ஒரு கட்டத்தில் இவரையும் ஒரு பெண் காதலிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார்.. ஆனால் பெண் போடும் கண்டிஷன் தான் இவருக்கு அதிர்ச்சி.. மாலை 6 மணிக்கு மேல் தன்னை சந்திக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார்.. இதனால் அதிர்ச்சியடையும் ராஜ் அப்படி என்னதான் ஆகும்.?

ஆறு மணிக்கு மேல் சந்தித்துப் பார்ப்போம் என்று நினைக்கையில் அவரின் முயற்சி பலித்ததா என்பதெல்லாம் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

சீரியஸ் மற்றும் காமெடி என இரண்டையும் அசால்டாக டீல் செய்திருக்கிறார் நாயகன் ரியோ ராஜ்.. ரசிகர்களை கவரும் வகையில் உடல் மொழியில் கலக்கியிருக்கிறார்..

வர்டிகா அழகிலும் நடிப்பிலும் வடிவான நடிகை.. வலுவான கேரக்டரில் ஸ்கோர் செய்து இருக்கிறார்

பல படங்களில் பல வேடங்களில் கலக்கியவர் சேத்தன்.. சமீபத்தில் வந்த அன்பே டயானா படத்தில் ரோஜாவின் கணவராக நடித்திருந்தார்.. இதிலும் கலக்கியிருக்கிறார்

நாயகனின் அம்மாவாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக முனீஷ்காந்த், நண்பராக பாலாஜி..

நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட், மாமனாக மாகாபா, தாத்தா ஆகியோர் பொருத்தமான தேர்வு..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன்.. படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா.. இருவரும் இவர்களின் பணியில் மெனக்கடல் தெரிகிறது.. நிறைவாக செய்துள்ளனர்.

அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் இதமாய் ஒலிக்கிறது..

நடிகை குஷ்பு மகள் தயாரிப்பில் சமீபத்தில் வந்த திரைப்படம் டபுள் ஆக்குபஞ்சி.. அந்த பட சாயலில் இந்த படமும் வந்திருக்கிறது..

நாயகியின் பிரச்சனை தெரிந்த பிறகு அதை நாயகன் எதிர் கொண்டு அவர் சமாளிக்கும் விதம் அவரின் உணர்வுகள் என அனைத்தையும் எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்..

முதலில் இந்தப் படத்திற்கு ராம் இன் லீலா என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.. சில காரணங்கள் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு RAM and Leela என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

 

Ram and Leela movie review