பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் 4/5.. சாதி வெறிக்கு சாணியடி

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் 4/5.. சாதி வெறிக்கு சாணியடி

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் 4/5.. சாதி வெறிக்கு சாணியடி

ஸ்டோரி…

தமிழக அரசு மருத்துவமனையில் ஆண் நர்சாக வேலை பார்க்கிறார் விஜித் பச்சான்.. அங்கு நடக்கும் மருத்துவ ஊழல்களை தன் பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் தெரிவித்து மீடியாக்களில் தெரிவிக்கிறார்.. இதன் மூலம் இவருக்கும் தொகுதி அமைச்சருக்கும் பிரச்சனை வருகிறது..

அந்த ஆஸ்பத்திரி நடந்த குழந்தை கடத்தலில் இவரை சிக்கலில் மாட்டி விட்டு கைது செய்ய சொல்கிறார் அமைச்சர்.. அதன்படி இவரும் சிறை கைதியாகி அங்கிருந்து சில சம்பவங்களை செய்கிறார்..

இதன் மூலம் தமிழகளவில் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வருகிறது.. அது என்ன இதன் பின்னணியில் ஜீவா உடன் இருப்பவர் யார்.? ஜீவா செய்ய நினைக்கும் சமூக மாற்றம் என்ன.? என்பதை பேரன்புடன் பெரும் கோவத்துடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர்..

கேரக்டர்ஸ்…

விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ்..

இயக்குனர் தங்கர் பச்சானின் இரு மகன்களில் ஒருவரான விஜித் மச்சான் இந்த படத்தில் கதை நாயகனாக அறிமுகம்.. படத்தின் டைட்டில் கார்டே அப்படித்தான்.. அதற்கு ஏற்ப கதைக்கு பக்காவாக பொருந்துகிறார் விஜித்..

முதல் படத்திலேயே 50 வயதை எட்டும் ஒரு நபராக அவர் நடித்திருப்பது கேரக்டர் மீதான நம்பிக்கையை காட்டி இருக்கிறது.. ஜீவா கேரக்டரில் ஜொலிக்கிறார் விஜய் பச்சான்.. இவரது குரல் இவருக்கு பலம்.. முக்கியமாக குரல் நடிகர் ஆர்கே சுரேஷை நினைவுபடுத்துகிறது..

ஒருவரை பழிவாங்க திட்டமிட்டு அதற்காக 20 வருடங்களாக காத்திருந்து ஜீவா வில்லன்களை பழி வாங்கும் கதை படையப்பா-வை நினைவுப்படுத்துகிறது..

நாயகி ஷாலி நிவேகா.. மலையாளமும் தமிழும் கலந்த இவர் பேசும் அழகு அழகே.. சாதிய மோதலால் காதலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தன் உணர்வில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..

மைம் கோபி & அருள்தாஸ் இருவரும் சாதி வெறியில் ஊறிப்போன சாத்தான்களாக மிரட்டி இருக்கின்றனர்..

தீபா, கீதா கைலாசம், சாய் வினோத், சுபத்ரா ராபர்ட், லோகு, பாவா சந்திரசேகர் ஆகியோர் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

சாதிவெறி பிடித்து ஆடும் வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கும் படம் இது பேரன்பும் பெருங்கோபமும்.. எங்க வாரிசு எங்க சாதி.. எங்க ஆளு.. என்று நினைப்பவருக்கு அந்த நினைப்பே வராத அளவிற்கு ஓர் அருமையான தீர்ப்பு எழுதி இருக்கிறார் இயக்குனர் சிவப்பிரகாஷ்..

தேனி மற்றும் கேரளாவின் அழகை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே பி..

இளையராஜா இசையில் பாடல்கள் அருமை.. அதுபோல பின்னணி இசையிலும் நானே என்றும் ராஜா என நிரூபித்திருக்கிறார்.. முக்கியமான கிராமத்து சாமி பாடலில் அசத்தல்..

ஒரு காட்சியில் ஒரு கிராமத்து பெண் கௌரவ கொலை என்று சொல்லும் போது கொலையில் என்னமா கௌரவ? அது ஆணவக் கொலை என்று போலீஸ் பேசும் வசனங்கள் பளிச்சிடுகின்றன..

இன்றும் சில கிராமங்களில் ஊறிக் கிடக்கும் சாதிய உணர்வுகளுக்கும் ஆணவக் கொலைகளுக்கும் சாட்டையடி சாணியடி கொடுக்கும் விதமாக இந்த படம் வந்திருக்கிறது..

Peranbumum Perungobamum movie review