மெட்ராஸ் மேட்னி விமர்சனம் 3.75/5.. மிடில் கிளாஸ் மெசேஜ் மீட்டர்..

மெட்ராஸ் மேட்னி விமர்சனம் 3.75/5.. மிடில் கிளாஸ் மெசேஜ் மீட்டர்..

மெட்ராஸ் மேட்னி விமர்சனம் 3.75/5.. மிடில் கிளாஸ் மெசேஜ் மீட்டர்..

 

ஸ்டோரி…

எழுத்தாளர்கள் கதை எழுதும்போது யதார்த்தத்திற்கு மாறுபட்டு வேறு கதைகளை அமைப்பார்கள்.. ஆனால் ஒருவேளை ஒரு எழுத்தாளர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை உணர்வு பூர்வமாக சொல்லி இருந்தால் எத்தகைய உணர்வுகள் வெளிப்பட்டிருக்கும் என்பதுதான் இந்த மெட்ராஸ் மேட்னி.

சத்யராஜ் கதை சொல்ல சொல்ல காளி வெங்கட்டின் கதை நகர்கிறது.. காளி வெங்கட் – ஷெலி இருவரும் தம்பதியர்.. இவர்களுக்கு ஒரு மகள் (ரோஷினி) ஒரு மகன் உள்ளனர்..

பாசமான அப்பாவாக இருக்கும் காளி வெங்கட் வாழ்நாள் முழுதும் ஆட்டோ ஓட்டிக் கொண்டே இருக்கிறார்.. குடும்பத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில் காளி வெங்கட்டி மகனே அவரைக் கேள்வி கேட்கிறான்.

ஆனால் மகளோ அப்பாவின் சூழ்நிலை புரிந்து கொண்டு திருமணம் கூட செய்து கொள்ளாமல் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்..

இறுதியில் என்ன ஆனது..? காளி வெங்கட் குடும்பம் முன்னேறியதா.? அதற்கான சூழ்நிலை அமைந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிபிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, சுனில் சுகதா, அர்ச்சனா..

‘அநீதி’ படத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்க புள்ளையாக ஜொலித்தவர் காளி வெங்கட.. இதிலும் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவை நம் கண் முன் கொண்டு வருகிறார…. ஒரு ஆட்டோக்காரன் ஆக தன் குடும்ப பாரதி சுமக்கும் காளி ஒரு காலத்தில் குப்பை பொறுக்கியவர் நிலையில் இருந்தவர்.. அதன் பின் முன்னேறி இந்த கால நிலையை அடைந்திருக்கிறார் என்ற காட்சிகள் ரசிகர்கள் மனதை வருடும்.

மலையாள நடிகை ஷெல்லி தன் நடிப்பில் சிலிர்க்க வைக்கிறார்.. பொறுப்பான மனைவி.. பாசமான அம்மா என சிறப்பு சேர்க்கிறார்..

டிவி சீரியல்கள் பார்த்து ரசித்த ரோஷினி ஐடி பெண்ணாக அசத்தியிருக்கிறார்.. இவர் மாப்பிள்ளையை பார்க்க செல்லும் காட்சியில்.. உங்க அப்பா கீழ் ஜாதியா.? என்று கேட்கும்போது ஒரு மகளாக ரோஷினி ரோசக்காரியாக மாறுகிறார்.

ஊறுகாய் விற்கும் சாம்ஸ் கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஊறுகாயைப் போல அட்வைஸை உளறிக் கொண்டிருக்கிறார்..

காளி மகனாக நடித்தவர் இன்றைய 2k கிட்ஸ்கள் அப்பாவை எதிர்த்துப் பேசும் மகனாக அதேசமயம் அம்மாவுக்கு பிடித்த மகனாக அப்ளாஸ் அள்ளுகிறார்..

இந்தப் படம் முடிந்த பிறகு இந்த படத்தை சத்யராஜிடம் போட்டு காட்டி அவரது வாய்ஸ் ஓவரின் கதையை நகர்த்தியதாக இயக்குனர் தெரிவித்து இருந்தார்..

ஒரு படம் என்பது காட்சிப்படுத்தப்படும் போது அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியும்.. அதுதான் ஒரு இயக்குனரின் சாமர்த்தியம்.. அதையும் ஒருவர் வாய்ஸ் ஓவரில் சொல்லிக் கொண்டே இருந்தால் அது திரைக்கதை சுவாரஸ்யத்தை குறைக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.. முதலில் கேரக்டர்களை சத்யராஜ் அறிமுகப்படுத்தும் விதம் ஓகே.. ஆனால் நிமிடங்கள் நிமிடங்கள் செல்ல சத்யராஜின் வாய்ஸ் ஓவர் போரடிக்கிறது..

நாங்களே சீன்ஸ் புரிஞ்சுகிட்டோம்.. நீங்க ஏன் சார் சொல்லிக்கிட்டே இருக்கீங்க.! என்று சத்யராஜை பார்த்து கேட்க தோணுது.

டெக்னீசியன்ஸ்…

கே.சி.பாலசாரங்கன் இசை அருமை.. எமோஷன் காட்சிகளை அழகாக தன் இசை மூலம் அழகாக ரசிகர் மனதில் கடத்தியிருக்கிறார்.. ஆனந்த் ஜி.கே.வின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது…

அப்பாவின் பின்னணி என்ன என்பது கூட தெரியாமல் வளரும் குழந்தைகள் அப்பாவை புரிந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திகேயன் மணி.. இது அவரது அறிமுகப்படம் என்றாலும் தரமான படத்தை கொடுத்திருக்கிறார்..

மிடில் கிளாஸ் வாழ்க்கை எத்தனை அட்வெஞ்சர்ஸ் நிறைந்தது.. அதை எப்படி கையாள்வது என்பதை அழகாக உணர்ச்சி குவியலாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி.

Madras Matinee movie review