தக் லைஃப் விமர்சனம் 3/5.. மணிரத்னம் கமல் கூட்டணியில் ‘கேங்ஸ்டர் லைஃப்’

தக் லைஃப் விமர்சனம் 3/5.. மணிரத்னம் கமல் கூட்டணியில் ‘கேங்ஸ்டர் லைஃப்’

தக் லைஃப் விமர்சனம் 3/5.. மணிரத்னம் கமல் கூட்டணியில் ‘கேங்ஸ்டர் லைஃப்’

 

ஸ்டோரி…

ஒரு கலவரத்தில் தன் தந்தை இறந்து விட தன் தங்கை தொலைந்து விட ஆதரவற்று நிற்கிறார் 14 வயது சிம்பு.. இவரை தத்தெடுத்து தன் கேங்ஸ்டர் குழுவில் வளர்த்து வருகிறார் கமல்.. (சிம்பு இவருக்கு மகனா தம்பியா என்ற விவரம் இல்ல.)

ஒரு கட்டத்தில் கேங்ஸ்டர் தொழிலை பெரிய அளவில் செய்ய சிம்பு திட்டம் போடுகிறார்.. கமலின் அண்ணன் நாசர், ஜோஜு ஜார்ஜ் பக்ஸ் பகவதி பெருமாள் உள்ளிட்ட ஆதரவு கொடுக்கின்றனர.. ஆனால் கமல் இருப்பது போதும் என்கிறார்.. இப்படியான சூழ்நிலையில் கமலை கொல்ல சில திட்டம் போட சிம்பு மீது சந்தேகம் கொள்கிறார்..

ஒரு கட்டத்தில் உன் தந்தையை கொன்றது கமல்தான் என்கிறார் நாசர்.. எனவே கமல் மீது கோபம் கொள்கிறார் சிம்பு.

அதன் பிறகு என்ன நடந்தது.? தன் தந்தையை தீர்த்து கட்டிய கமலை பழி வாங்கினாரா.? இவர்களின் கேங்ஸ்டர் குழு பிரிந்ததா.? என்பதை மணிரத்னம் தன் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்.

கேரக்டர்ஸ்…

நாயகன் & மருதநாயகம் உள்ளிட்ட பல கெட்டப் களில் வந்து அசத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.. தன்னை ரொமான்ஸிலும் மிஞ்ச இன்றுவரை ஆள் இல்லை என அபிராமி & த்ரிஷாவிடம் மய்யம் கொள்கிறார்..

சிம்பு – திரிஷா ரொமான்சை விட கமல் – திரிஷா ரொமான்ஸ் சூப்பர் கெமிஸ்ட்ரி..

சிம்புவுக்கு தன் படத்தில் மாஸ் இன்டரோ கொடுத்திருப்பது கமலின் பெருந்தன்மையை காட்டுகிறது.. சிம்புவும் தன் பங்களிப்பில் அப்ளஸ் அள்ளுகிறார்.. சிம்பு & கமல் மோதும் ஃபைட் சீன் தெறி..

திரிஷாவின் கேரக்டர் வித்தியாசமான ஒன்று.. அதிலும் மணிரத்னம் டச்.. அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்..

வடிவுக்கரசி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலரும் அனுபவ நடிப்பில் அசத்தல்.. கமலுக்கு போட்டியாக தங்களின் பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

காலம் காலமாக நாம் பார்த்து பழகிப்போன கேங்ஸ்டர் கதையை மணிரத்னம் இயக்கியிருக்கிறார்.. அதில் மேக்கிங் படத்தின் தரத்தை உயர்த்தும.. முக்கியமாக கமல்ஹாசன் சிலம்பரசனின் கூட்டணி சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது.. முக்கியமாக காத்மண்டு நேபாளம் பகுதிகள் கண்களுக்கு விருந்து.. படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

கலை இயக்குனரும் சண்டை இயக்குனரும் தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்து படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமானின் பின்னனி இசையும் பாடலும் படத்திற்கு பலம.. ஜிங்குச்சா பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.. ஆனால் பெரிதும் எதிர்பார்த்த ‘விண்வெளி நாயகா..’ பாடல் இடம் பெற்ற சீன் பொருந்தவில்லை.. அது போல ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘முத்த மழை..’ பாடல் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம்.

நாயகன் படத்தின் ஆணிவேர் போல இந்தப் படத்தின் முதல் ஆரம்பக் காட்சி ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிறது..

ஆனால் கமல் திரிஷாவின் உறவுடன் சிம்பு – திரிஷாவின் உறவு தொடர்வதை ஏற்கும் படியாக இல்லை..

படத்தின் மேக்கிங் கில் காணப்பட்ட பிரம்மாண்டத்தை திரைக்கதையில் கமலும் மணிரத்னமும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

கமல் மீது ஐந்து குண்டுகள் தாக்கப்பட்ட நிலையிலும் அவர் உயிரோடு இருப்பதும் சிம்பு மீது ஒரு குண்டு பட்டு அவர் இறக்கும் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை..

பெரும்பாலும் கேங்ஸ்டர் படம் என்றாலே தமிழ் இயக்குனர்களுக்கு டெல்லி பாம்பே உள்ளிட்ட வட மாநிலங்கள் தான் தோன்றும் போல.. இதிலும் டெல்லியை மையப்படுத்தி கதையை நகர்த்தி முகலாய பேரரசு உதாரணங்களையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.. எனவே நிறைய காட்சிகளில் ஹிந்தி படத்தை பார்க்கும் உணர்வையும் தருகிறது..

Thug Life movie review