இட்லி கடை விமர்சனம் 4/5.. இட்லி உடம்புக்கு நல்லது.. இட்லி கடை உள்ளத்துக்கு நல்லது

இட்லி கடை விமர்சனம் 4/5.. இட்லி உடம்புக்கு நல்லது.. இட்லி கடை உள்ளத்துக்கு நல்லது

 

இட்லி கடை விமர்சனம் 4/5.. இட்லி உடம்புக்கு நல்லது.. இட்லி கடை உள்ளத்துக்கு நல்லது

 

ஸ்டோரி…

தனுஷின் தந்தை ராஜ்கிரண்.. இவர் சிவநேசன் என்ற பெயரில் மதுரையில் ஒரு கிராமத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார்.. தந்தையின் தொழிலை பார்த்து வளரும் தனுஷ் அந்த ஆர்வத்தில் கேட்டரிங் கல்வி படிக்கிறார்.. இதனையடுத்து அவருக்கு பாங்காக் நாட்டில் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.. அங்கு சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.. இவரின் திறமையை பார்த்து சத்யராஜ் தன் மகள் ஷாலினியை மணமுடிக்க ஆசைப்படுகிறார்..

ஒரு வேலைக்காரனுக்கு தன் தங்கையை கொடுப்பதா என அருண் விஜய் மறுக்கிறார்.. ஆனாலும் வேறு வழியின்றி மௌனம் காக்கிறார்.. இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ள சூழ்நிலையில் தனுஷின் தந்தை இறந்து விட்டதாக தகவல் வருகிறது..

இதனையடுத்து ஊருக்கு செல்கிறார் தனுஷ்.. தந்தையை இழந்த சில தினங்களில் தாயையும் இழக்கிறார்.. இதனால் திருமணத்தை தள்ளி போட சொல்கிறார்.. ஆனால் இதை சத்யராஜ் அருண் விஜய் குடும்பத்தினர் தங்களது ஈகோ பிரச்சினையாக பார்க்கின்றனர்..

இதனால் இரு குடும்பத்திற்கு பிரச்சினை வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? மதுரையில் அந்த கிராமத்தின் அடையாளமாக கருதப்படும் இட்லி கடையை தனுஷ் நடத்தினாரா.? தங்கள் குடும்ப திருமணத்தை நிறுத்திய தனுஷை சத்யராஜ் & அருண் விஜய் என்ன செய்தனர் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

வில்லன் என்றால் மிரட்டலான தோற்றம் கொடூர முகம் என்றில்லாமல் ஸ்டைலிஷ் வில்லனாக அருண் விஜய் கேரக்டரை வடிவமைத்திருக்கிறார் டைரக்டர் தனுஷ்.. தனுஷ் அறிமுக காட்சியை விட அருண் விஜய் அறிமுகக் காட்சி அசத்தல்.. முக்கியமாக இட்லி கடை முன்பு தனுஷ் & அருண் மோதும் காட்சி இட்லி ஆவியை விட அனல் பறக்கும் சீன்..

தனுஷ் தன்னை அடிக்கவில்லையே.. அடிக்கவிட்டாரே என்று அருண் விஜய் சொல்லும் சீன்ஸ் சுவாரஸ்யம்..

தனுஷ் நித்யாவின் கிராமத்து காதல் கொள்ளை அழகு..

பார்த்திபன் கேரக்டரில் பாரத்தை கொடுக்காமல் ஆனாலும் திருப்புமுனையை கொடுத்து பரவசப்படுத்தி இருக்கிறார்..

சமுத்திரக்கனி கேரக்டரில் வலு இல்லை.. இவர்களுடன் சத்யராஜ் இளவரசு உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு..

தனுஷ் இயக்கும் படம் என்றால் ராஜ்கிரண் தான் 2வது நாயகன்.. நடிப்பில் தனித்துவம் பெறுகிறார்.. சிவநேசனின் தொழில் பக்தி, சமையல் கைப்பக்குவம் பல கிராமத்து அப்பாக்களை நினைவுப்படுத்தும்..

தனுஷின் அம்மாவாக கீதா கைலாசம் மன நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சின்ன வயது ராஜ்கிரணாக தமிழ், பிரிகிடா ஜோடி காட்சிகளும் அழகு.. பாட்டி வடிவுக்கரசி கிராமத்து அப்பத்தாவை நினைவுபடுத்துகிறார்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு: கிரண் கவுசிக்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

தேனியில் முதல் பாங்காக் வரை அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.. என் பாட்டன்.. & என்ன சுகம்.. இரண்டு பாடல்களும் இதயத்திற்கு இதமான இசை..

நாயகன், கதை திரைக்கதை வசனம் இயக்கம் இணை தயாரிப்பு பாடல் ஆசிரியர் பாடகர் என ஒட்டுமொத்த இட்லி கடையை தன் தோளில் சுமந்து சுமந்திருக்கிறார் தனுஷ்.. எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் மணக்க சுவைக்க ரசிகர்களுக்கு பரிமாறி இருக்கிறார்..

ஆனால் தந்தை தாயை இழந்த தனுஷ் மொட்டை அடிக்கவில்லை.. மீசையை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.??

தனுஷுக்கு நண்பன் என்ற பெயரில் எந்த கேரக்டரையும் நுழைக்காமல்  தேவையான கேரக்டரை கொடுத்திருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்..

வசனங்கள் படத்திற்கு பிளஸ்.. ஷாலினி பாண்டேவை பார்த்து தனுஷ் கேட்கும் ஒரு காட்சி.. என் அப்பா உசுரை விட உன் அப்பா உசுரு எந்த விதத்தில் உயர்ந்தது.?

மீண்டும் இளவரசு வெளிநாடு செல்லவில்லையா என்ற கேள்விக்கு.. “பெத்த தாயே என்னை யார் என்று கேட்கும் சூழலில் வெளிநாட்டு வாழ்க்கை இனி தேவை இல்லை.. ” என்று அவர் எடுக்க முடிவு ரசிக்க வைக்கிறது..

முக்கியமாக.. மக்கள் மறந்து போன ஆட்டுக்கல் அம்மிக்கல் கண்ணு குட்டி ஆகிய சின்ன விஷயங்களை வைத்து இதயத்திற்கு நெருக்கமாக இட்லி கடை-யை கொடுத்து இருக்கிறார் தனுஷ்..

வில்லனை பழிவாங்க வித்தியாசமான கிளைமாக்ஸ் அமைத்திருக்கிறார்.. அகிம்சை வழியில் தீர்வு சொல்லியிருப்பது டைரக்ஷன் டச்.. சபாஷ் தனுஷ்.. ஒரு இயக்குனராக நான்காவது முறையும் வெற்றி பெற்று விட்டார் தனுஷ்..

டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தன்னுடைய முதல் படைப்பாக கொடுத்திருக்கிறார்.. இட்லி கடை அவருக்கு இனிய அறிமுகத்தை கொடுத்திருக்கிறது.. ஆகாஷ் ஹேப்பி அண்ணாச்சி..!

 

Idli Kadai movie review