தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்..; பெயருக்கு ஏற்ற போல தூள் கிளப்பும் திரில்லர்
தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்..; பெயருக்கு ஏற்ற போல தூள் கிளப்பும் திரில்லர்
ஸ்டோரி…
தூள் பேட் காவல் நிலையம்.. அங்கு ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.. இப்படியாக தொடங்குகிறது. இதில் நாயகி பாடினி கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார்.. அவரது கனவில் / நினைவில் ஏதாவது வந்தால் அது நிச்சயம் பலித்து விடும் என்பது அங்குள்ள காவலர்களின் நம்பிக்கை..
இந்த நிலையில் பாடினியின் கனவில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டு அவர்களின் தலை மட்டும் துண்டாக கிடப்பதாக அறியப்படுகிறது.. இந்த சம்பவம் காலை விடிவதற்குள் நடக்கும் என அவர் உயரதிகாரியிடம் தெரிவிக்கிறார்..
இதனால் காவலர்கள் பயம் கொண்டாலும் அடுத்த நாள் இவர்களது தூள் பேட் காவல் நிலையத்திற்கு புதிதாக கமிஷனர் (அஸ்வின்குமார்) வரவிருப்பதால் இவர்கள் அந்த வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த சூழ்நிலையில் காவல் நிலையத்திற்கு மாற்றல் ஆகி வரும் அஸ்வின் நேரடியாக ஸ்டேஷனுக்கு வராமல் அங்கு உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்குகிறார்.. அப்போது இரவு நேரத்தில் ஆட்டோவில் எங்கோ பயணிக்கிறார்.. கையில் துப்பாக்கியும் எடுத்து செல்கிறார்.. இதனை பார்க்கும் சிறுவன் பயம் கொள்கிறான்.
அன்று காலை விடிந்ததும் பாடினி கனவில் கண்டது போல மூன்று சம்பவங்கள் நடந்திருக்கிறது.. ஒரு தலை வெட்டப்பட்டு குப்பை கிடங்கில் கிடைக்கிறது.. மற்றொரு தலை ரவுடிகளால் வெட்டப்பட்டு காவல் நிலையத்திற்கு வருகிறது.. ரவுடி பழியை தீர்த்துக் கொண்டதாக இருவர் சரண் அடைகின்றனர்.
மூன்றாவது பெண் தலை.. ஒரு ஐஸ் பேக்டரி முதலாளியின் மகள் காதல் கதை சம்பந்தப்பட்டது…
அடுத்து நடந்தது என்ன.? பாடினி கனவில் கண்ட கனவுகள் மீண்டும் தொடர்ந்ததா.? நாயகன் அஸ்வின் இரவு நேரத்தில் ஆட்டோவில் எங்கு சென்றார்? மற்றொரு போலீஸ் குரு லக்ஷ்மன் என்ன செய்தார்.? என்ற விறுவிறுப்புடன் இந்த மூன்று எபிசோடுகள் தொடர்கிறது..
இனி ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்த எபிசோடுகள் தொடரும் என நம்பலாம்..

கேரக்டர்ஸ்…
அஸ்வின்குமார், குரு லக்ஷ்மணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், ப்ரீத்தி ஷர்மா, சௌந்தர்யா, ஷியமனந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விசுவாமித்திரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலைமான், லிங்கா கார்த்திக், வைஷு & பலர்..
இதுவரை நாம் பார்த்த மூன்று எபிசோடுகளில் அஸ்வின் மற்றும் பாடினி இருவரும் நடிப்பு ரசிக்கத்தக்கது.. பயம் பதட்டம் என உணர்வுகளை நுட்பமாக கொடுத்திருக்கிறார் நாயகி பாடினிகுமார்.. என்னதான் போலீசாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு உரித்தான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
பல சர்ச்சைகளுக்கு பின்னர் இந்தப் வெப் செரீஸ் அஸ்வினுக்கு பெரிய பெயரை பெற்று தரும். கம்பீரமான தோற்றத்துடன் போலீஸ் பாடி லாங்குவேஜ்ஜில் அசத்தியிருக்கிறார்.. அவரது உயரம் அவரது பார்வை என அனைத்தும் பிளஸ்.. நிச்சயம் இவரது செய்கைகள் இனிவரும் எபிசோடுகளில் வேறலெவல் ஆக இருக்கும்..
கூடுதல் துணை கமிஷனர் அர்ஜுனாவாக குரு லக்ஷ்மணன்.. இவரது கேரக்டர் இவரது நடிப்பு இனி அடுத்த எபிசோடுகளில் காணலாம்..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு : என். எஸ். சதீஷ்குமார்.. பெரும்பாலும் இரவு நேரத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.. இரவு நேரம் என்றாலும் அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து கலர்ஃபுல் இரவாக மாற்றி இருக்கிறார்..
கலை இயக்கம் – எஸ். ஜெயச்சந்திரன்
இசை – அஷ்வத்
படத்தொகுப்பு – சாம் ஆர் டி எக்ஸ்
பாடல்கள் – மஷூக் ரஹ்மான்
ஜெயச்சந்திரன் கலைப்பணி ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.. போலீஸ் ஸ்டேஷன் அவர்களின் உடை என அனைத்தும் கச்சிதம். தலைகள் வெட்டப்பட்டது கிராபிக்ஸ் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது..
அஸ்வத் இசை அசத்தல்.. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. ஒரு திரில்லருக்கான எதிர்பார்ப்பை தனது இசையில் கோர்த்து இருக்கிறார்..
டைட்டிலில் ஒலிக்கும் ‘கொலைவெறி மாறா கொலைக்களம், ஆணவம் செய்யும் ரணகளம் ‘என்ற பாடல் அனல் ரகம்..

பேரபிள் பிக்சர்ஸ் சார்பில் தேவன் சார்லஸ், பி .பிரவீன் குமார், சரண்யா வீரமணி தயாரித்துள்ளனர்.
டைரக்டர் – ஜே.ஜெஸ்வினி
கதை, திரைக்கதை – ரமணகிரி வாசன்
திரைக்கதை அமைந்த விதம்.. கதை சொல்லும் போக்கு என அனைத்தும் சிறப்பு.
ஜெஸ்வினி ஒரு திரில்லர் பயணத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.. ஒவ்வொரு எபிசோடு முடிவிலும் அடுத்தது என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார்.. இனி வரும் தொடர்கள் நிச்சயம் ஒரு தரமான சம்பவத்தை கொடுக்கும் என நம்பலாம்..
ரசிகர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தை கொடுத்த பல வெப் தொடர்கள் வரிசையில் இந்த தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் நிச்சயம் இணையும் என சொல்லலாம்..
மொத்தத்தில் 8 அத்தியாயங்கள் கொண்ட இந்த இணையத் தொடர் க்ரைம் திரில்லர் விறுவிறுப்பான அனுபவத்தைக் கொடுக்கும்..
தமிழிலும் தெலுங்கிலும் உருவாகி இதுவரை 3 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளது.. இத்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 7 மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது..
Dhool Pet Police Station review

