Heartiley Battery வெப் தொடர் விமர்சனம்.. சார்ஜ் இல்லாத பேட்டரி
Heartiley Battery வெப் தொடர் விமர்சனம்.. சார்ஜ் இல்லாத பேட்டரி
ஸ்டோரி…
நாயகி பாடினி குமார் லவ் மீட்டர் என்ற ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார்.. இதன் மூலம் தன்னுடைய நண்பர்கள் தோழிகள் நிஜமாக காதலிக்கிறார்களா.? பொய்யாக காதலிக்கிறார்களா? என்ற உண்மையை இந்த கருவி கண்டுபிடித்து விடும் என்கிறார்.
இதனால் இவர் பல சிக்கல்களை சந்திக்கிறார்.. ஒரு சில காதல் முறிவு சந்திக்கிறது.. ஒரு கட்டத்தில் இவர் மீது காதல் கொள்கிறார் நாயகன் குரு லக்ஷ்மன்..
அதன் பிறகு என்ன நடந்தது இந்த காதல் விளையாட்டில் யார் ஜெயித்தார்கள் ? லவ் மீட்டர் சொல்வது உண்மையா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
குரு லக்ஷ்மன், பாடினிகுமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா மற்றும் சீனு..
கலைஞர்கள் தேர்வு சரியாக அமையவில்லை என்றால் அந்த கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்..

டெக்னீசியன்ஸ்…
‘வேடுவன்’ மற்றும் ‘ரேகை’ போன்ற கிரைம் வெப் தொடர்களை வெளியிட்ட பிறகு ஜீ5 இந்த முறை ’ஹார்ட்டிலே பேட்டரி’ என்ற காதல் தொடருடன் களமிறங்கி இருக்கிறது..
’ஹார்ட்டிலே பேட்டரி’ வெப் தொடர் வருகிற 16 -ம் தேதி ஜீ 5 இல் வெளியாக உள்ளது. இந்தத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.. இது ஆறு எபிசோடுகளை கொண்டுள்ளது.
பொதுவாக ஜி தமிழ் தளத்தில் வரும் வெப் தொடர்கள் அனைத்தும் சுவாரசியமாக ரசிக்கத்தக்க வகையாக இருக்கும்.. ஆனால் இதை எப்படி அவர்கள் வாங்கினார்கள் என்று தெரியவில்லை.. காதல் மீட்டர் பேட்டரி என்றெல்லாம் காதில் பூ சுற்றி ரசிகர்களை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளனர்..
இதில் இடையே இடையே கிராபிக்ஸ் காட்சிகளில் பழங்கால கேரக்டர்கள் வந்து செல்கிறது.. ஆனால் அது எல்லாம் ஏனோ என்று புரியவில்லை..

காதல் என்பது உணர்வா அல்லது ஹார்மோன் விஞ்ஞானமா.? என்பதை சொல்ல முயற்சித்து திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார்..
சௌந்தரராஜனின் ஓளிப்பதிவு தொடருக்கு பலம். மைக்கேல் ஆகாஷின் பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.. ஆனால் திரைக்கதை மற்றும் கலைஞர்கள் தேர்வு சரியாக இல்லாத காரணத்தினால் இந்த ஹார்ட்லி பேட்டரி வீக்காக இருக்கிறது..
Heartiley Battery web series review
–

