ARM ஏஆர்எம் (அஜயண்டே ரெண்டாம் மோஷனம்) விமர்சனம் 3.75/5

ARM ஏஆர்எம் (அஜயண்டே ரெண்டாம் மோஷனம்) விமர்சனம் 3.75/5

 

 

ARM ஏஆர்எம் (அஜயண்டே ரெண்டாம் மோஷனம்) விமர்சனம் 3.75/5

 

அஜயனின் ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் ARM

ஸ்டோரி…

கேரளாவில் வசிக்கும் நாயகன் டோவினோ தோமஸ் களரி வித்தையில் செம கில்லாடி.. இத்துடன் தன் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பணிகளையும் செய்து வருகிறார்..

முன்னொரு காலத்தில் இவரது தாத்தா அந்த ஊரில் இருந்த விலைமதிப்பில்லாத சியோதி விளக்கை திருடி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் அந்த குற்றச்சாட்டு உடன் இவர்கள் தலைமுறை வாழ்ந்து வருகிறது.. எத்தனை வருடங்கள் ஆனாலும் திருட்டு பட்டத்தை இவர்களால் தீர்க்க முடியவில்லை..

இந்த நிலையில் கிராமத்து கோயிலைப் ஆவண படமெடுக்க வந்திருக்கும் ஹரிஷ் உத்தமன் அற்புத விளக்கை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.. தான் கொள்ளையடித்தால் பிரச்சனை வரும் என்பதால் நாயகன் டோவினோ தாமஸ் மூலம் அதனை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்.

ஹரிஷின் சதித்திட்டத்திற்கு டோவினா ஒத்துக்கொண்டாரா? ஏற்கனவே இவர் குடும்பத்தின் மீதும் இருக்கும் திருட்டு பட்டத்தை ஒழிக்க என்ன செய்தார்.? அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Tovino Thomas, Krithi Shetty, Aishwarya Rajesh, Surabhi Lakshmi, Basil Joseph, Rohini, Harish Uthaman Nisthar Sait, Jagadish, Pramod Shetty, Aju Varghese, Sudheesh

தாத்தா மகன் பேரன் என மூன்று பாத்திரங்களை சுமந்து ஏ ஆர் எம் படத்திற்காக முழு அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்.. அதிலும் அஜயன் மற்றும் மணியன் இரண்டு பாத்திரங்களிலும் அவரது நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது..

மணியன் கேரக்டர் வீரமான விவேகமான கேரக்டர்.. ஆனால் அஜயன் கேரக்டர் மிகவும் சாதுவான நிதானமான கேரக்டர்.. அதே சமயத்தில் பணக்கார குடும்பத்து கீர்த்தியை (பெண்ணை) காதலிக்கும் கீழ் ஜாதி வாலிபர் கேரக்டர்.. அதையும் உணர்ந்து அழகாக்கி இருக்கிறார் நாயகன்..

நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, கீர்த்தி ஷெட்டி மூவரும் நடித்துள்ளனர்.. இதில் ஐஸ்வர்யா ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்..

பணக்கார வீட்டு பெண்ணாக கீர்த்தி ஷேட்டி.. 1990-களில் மேக்கப் இல்லாத பெண்களின் பிரதிபலிப்பை கொடுத்திருக்கிறார்… தன் கண்களால் அழகான மொழி பேசி ரசிகர்களை கவர்கிறார்..

சுரபி லட்சுமி மணியனின் மனைவியாக எதார்த்த குடும்பத்து பெண்ணாக நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..

வில்லனாக ஹரீஷ் உத்தமன், பொற்கொல்லனாக ஜெகதீஷ், நாயகனின் தாயாக ரோகினி, நண்பனாக ஜோசப் கதையுடன் ஒன்றி பயணிப்பது சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

டைரக்டர் : Jithin Laal
மியூசிக் : Dhibu Ninan Thomas
Producer : Magic Frames – Listin Stephen, Dr. Zachariah Thomas

கலை இயக்குநர் கோகுல் தாஸ்… ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான்…

கலை இயக்குனர் கோகுல்தாசின் பணியை பாராட்டாமல் இந்த பட விமர்சனத்தை முடிக்க முடியாது.. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் மூன்று காலகட்டங்களில் தாத்தா மகன் பேரன் என அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு ஏற்ப கலைப் பொருள்களை வடிவமைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் கைவண்ணத்தில் காட்சிகள் ஜொலிக்கிறது..

திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல் செம… பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார்.. திரை தீ பிடிக்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப திரையை அலற விட்டிருக்கிறார்..

மக்களை யார் ஏமாற்றினாலும் அது ஏமாற்று வேலை தான்.. தாத்தாவிற்கு அற்புத விளக்கை கொடுக்காமல் அரசன் ஏமாற்றும் வேலையை ராஜதந்திரம் என்று சொல்வது ஏற்புடையதல்ல என்றாலும் இது போல நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டிருப்பது தானே..

ஒரு பாடல் காட்சியில் நாயகன் நாயகி தவிர அனைவரும் கதகளி ஒப்பனை போட்டு ஆடும் ஆட்டம் டான்ஸ் மாஸ்டரின் கற்பனையை காட்டுகிறது..

இத்துடன் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே படத்தை இன்னொரு முறை கூட பார்க்கலாம் என்கிற அளவில் வியக்க வைக்கும் காட்சிகளை அற்புதமாக கொடுத்திருக்கின்றனர..

ஒரு அற்புத சிலையை வைத்து 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பதற்காக இயக்குனர் ஜித்தன் லாலை பாராட்டலாம்..

இது போன்ற படங்களுக்கு நல்ல ப்ரமோஷன் தேவை.. ஆனால் இதுவரை இந்தப் படக்குழுவினர் தமிழ்நாட்டில் முக்கியமாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.. சந்தித்து ப்ரமோஷன் செய்திருந்தால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இந்த படத்தின் பற்றிய தகவலும் ரசிகர்களை நிச்சயம் சென்று அடைந்து இருக்கும்.. நடவடிக்கை எடுப்பார்களா காத்திருப்போம்.?!!

ARM malayalam movie review in tamil