I Will Miss Vijay.. ‘மதராஸி’ இசை விழாவில் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்த அனிருத்

I Will Miss Vijay.. ‘மதராஸி’ இசை விழாவில் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்த அனிருத்

I Will Miss Vijay.. ‘மதராஸி’ இசை விழாவில் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்த அனிருத்

 

 

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இந்த விழாவில் பங்கேற்க விழாவிற்கு வந்திருந்தார்.. அப்போது ரெட் கார்பெட் அரங்கில் அவர் அளித்துள்ள பேட்டியில்..

“படம் நன்றாக வந்துள்ளது.. இது ஏ ஆர் முருகதாஸுடன் தனக்கு மூன்றாவது படம் எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் விஜய் பற்றியும் ஜனநாயகன் பற்றி கேள்வி கேட்டதற்கு.. ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.. பாடல்களும் விரைவில் வெளியாக உள்ளது..

எப்போதும் என் இசையில் அவர் படத்தில் விஜய்யின் நடனம் ஹைலைட்டாக இருக்கும்.. தற்போது அவர் (அரசியலுக்கு) செல்வதால் இனி அவரை நான் மிஸ் செய்வேன்.. ” என அனிருத் தெரிவித்திருக்கிறார்..

நிகழ்ச்சி அரங்கில் அனிருத் பேசும்போது… இது தனக்கு சிவகார்த்திகேயன் உடன் 8வது படம் என்றும் ஏ ஆர் முருகதாசுடன் தனக்கு 3வது படமும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

எனக்கு 21 வயது ஆன போது என்னை நம்பி கத்தி படத்தில் இசையமைக்க வாய்ப்பை முருகதாஸ் எனக்கு கொடுத்திருந்தார்..

 

Anirudh update about Jananayagan at Madharaasi trailer launch