டிரோன்ஸ் விமர்சனம்.. குழந்தையாகவே மாறி கொண்டாட குதூகலமான குடும்பப் படம்

டிரோன்ஸ் விமர்சனம்.. குழந்தையாகவே மாறி கொண்டாட குதூகலமான குடும்பப் படம்

 

டிரோன்ஸ் விமர்சனம்.. குழந்தையாகவே மாறி கொண்டாட குதூகலமான குடும்பப் படம்

 

ஸ்டோரி…

டிராவிட் செல்வம் – அஞ்சலி நாயர் – ஆர் ஜே தீபக் இவர்கள் மூவரும் கல்லூரி மாணவர்கள்.. ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சனையால் காலேஜில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்..

இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஆகும் என்பதால் இவர்கள் பிளாக் ஹோல் என்னும் ஆராய்ச்சி கூடத்தில் சில தினங்கள் தங்க திட்டமிடுகின்றனர்… ஆனால் அங்கே உள்ளே சென்ற பின்தான் இவர்களால் வெளியே வர முடியாது என்பதை தெரிந்து கொள்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் அங்கு இருக்கும் ட்ரோன் மூலம் பார்க்கும்போதுதான் அழகிய தேவதை சித்தி இதானியே காண்கிறார் டிராவிட். அவர் மீதும் காதலும் கொள்கிறார். ஆனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் சூனியக்காரி பாட்டி தேவதர்ஷினி..

காணாமல் போன மாணவர்களை தேடி போலீஸ் கேரக்டர் சினிமாவாலா சதீஷும் உள்ளே வருகிறார்.. திருமணம் ஆகாத இவருக்கும் தேவதை மீது காதல்…

சித்தி இத்தாணியை காதலிக்கும் ஆண்களுக்கு பிரச்சனை வருகிறது.. அப்படி என்ன பிரச்சனை? அவர்கள் அந்தக் கூடத்தில் இருந்து மீண்டு வந்தார்களா என்பதெல்லாம் யூகிக்க முடியாத பேண்டஸி ஸ்டோரி..

கேரக்டர்ஸ்…

சித்தி இத்தானி மற்றும் அஞ்சலி நாயர் இரண்டு அழகிய திறமை வாய்ந்த நடிகைகள்.. அழகு ஒரு கட்டத்தில் ஆபத்து என்பது போல சித்தி கேரக்டர் சீறிப் பாய்கிறது.. கன்னக்குழி அழகில் கவர்கிறார்..

அழகால் வசிகரித்த அஞ்சலி நடிப்பாலும் அசத்தியிருக்கிறார்.. நிறம் குறித்த அரசியல் பேசும் வலுவான கேரக்டர் அஞ்சலி நாயருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் என்ற youtube சேனல் மூலம் பிரபலமான டிராவிட் செல்வம் இந்த படத்தின் கதாநாயகன்.. காமெடி பரிதவிப்பு காதல் கலாட்டா எனக் கல்லூரி மாணவர் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்..

சூனியக்காரி பாட்டி வேடத்தில் தேவதர்ஷினி.. மிரட்டி இருக்கிறார்..

மிரட்டலான போலீஸ் கேரக்டரில் சினிமாவாலா சதீஷ்.. சினிமா மீது மட்டுமல்ல அழகிய தேவதை மீதும் காதல்.. என திருமணம் ஆகாத ஆண்களின் உணவை உணர்வை பிரதிபலிக்கிறார்..

குரேஷி வரும் காட்சி ரசிகர்களுக்கு குஷி… காமெடியில் கலக்கல்.. ஆர்.ஜே.தீபக் & சசி செல்வராஜ் ஆகியோரும் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்..

இசையமைப்பாளர் ஹரி.யின் இசையில் பாடல்கள் வண்ண மயம்.. ஃபேண்டஸி படத்திற்கு உரிய இசையை இரைச்சல் இல்லாமல் கொடுத்திருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.. ஒரே இடமானாலும் கேமராவை சுழற்றி சுழற்றி காட்சிகளை கலர்ஃபுல்லாக்கி கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார்…

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர்.கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் ஆகியோரது பணி சிறப்பு..

இன்று செல்போன் உலகத்தில் மூழ்கிவிட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களின் குழந்தைத் தனத்தை சொல்லும் வகையில் மலரும் நினைவுகளை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

 

சின்ன வயதில் பார்த்து.. பாட்டியிடம் கேட்டு வியந்த காமிக்ஸ் கதைகள்.. சூனியக்காரி பாட்டி கதைகள் உள்ளிட்டவைகளை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத்..

நம் வீட்டுக் குழந்தைகளை அழைத்துச் சென்றாலும் நம்மையும் குழந்தையாக மாற்றி நமக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தும் படமாக இந்த ட்ரோன்ஸ் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராகவ் மிர்தாத்..

 

Drones movie review