Madharaasi Trailer Punch.. துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான் டா..!

Madharaasi Trailer Punch.. துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான் டா..!

 

Madharaasi Trailer Punch.. துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான் டா..!

 

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மதராஸி’.

இவர்களுடன் விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது..

இன்று டிரைலர் வெளியாகி உள்ளது.. மதராஸி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது நடைபெற்று வருகிறது.. இதனை முன்னிட்டு இதன் ட்ரெய்லர் வெளியானது.

இந்த ட்ரெய்லர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது எனலாம்.. முக்கியமாக படத்தில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்..

பெரும்பாலும் இந்த படத்தில் ரொமான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது..

இந்த ட்ரைலர் தொடக்கத்தில்…

அனைவரையும் நேசி எல்லோரையும் உன் குடும்பமாக நினை.. இதை தான் எல்லா மதங்களும் கடவுளும் சொல்கின்றன.. ” என்ற பெண் பேசும் வசனம் இடம் பெறுகிறது

உள்ளிட்ட வசனங்கள் இடம் பெறுகிறது.. இதனைத் தொடர்ந்து வில்லன் வித்யூத் ஜம்வால் பேசும் ஒரு டயலாக் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது..

 

அந்த வசனத்தில்.. “துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான் டா..’ என்ற வசனம் இடம் பெறுகிறது.. இது விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் அஜித் நடித்த வில்லன் பட டைட்டில் கனெக்ட் செய்வதாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 15 நொடிகள் இடம் பெறுகிறது.. இறுதியாக.. “இது என் ஊரு சார்.. நான் கூட நிப்பேன்..” என்ற சிவகார்த்திகேயன் பேசும் வசனமும் இடம் பெறுகிறது.

ஆக.. ஏ ஆர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணியில் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.. செப்டம்பர் 5ஆம் தேதி மதராஸி படமும் ரிலீஸாகி அசத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்..

Sivakarthikeyans Madharaasi Trailer punch dialogue goes viral

 

 

Straight into our hearts ❤️

#Madharaasi trailer and audio launch!

#MadharaasiTrailer out now : https://bit.ly/MadharaasiTrailer

#MadharaasiFromSep5