பிடி செல்வகுமார் நன்றியை மறந்த விஜய்.; PTS பாராட்டு விழாவில் பிரபலங்கள் விளாசல்
பிடி செல்வகுமார் நன்றியை மறந்த விஜய்.; PTS பாராட்டு விழாவில் பிரபலங்கள் விளாசல்
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டவர் பிடி செல்வகுமார்.
அதன் பின்னர் ஒரு கட்டத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘புலி’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தால் பிடி செல்வக்குமார். இந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதிலிருந்து மீண்டு வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து தற்போது சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிடி செல்வகுமார்..
மேலும் ஒன்பதுல குரு என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார்..
திரைத்துறை மட்டுமல்லாமல் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் பிடி செல்வகுமார்.. கொரோனா லாக்டவுன் காலத்தில் பல்வேறு சமூக பணிகளையும் செய்து இருக்கிறார்.. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து நூறு அரிசி மூட்டைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறார்..
மேலும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் தொடர்ந்து நடத்து நடத்தி வருகிறார்.
இவை இல்லாமல் கடந்த 5 வருடங்களாக கன்னியாகுமரியில் இவரது சமூக சேவைகள் ஏராளம்.. ஒரு அழகான கட்டமைப்பை உருவாக்கி கன்னியாகுமரி மக்களின் வாழ்வாதாரத்திற்கு இவர் உதவி வருகிறார்..

சமூக சேவைகளை தொடர்ந்து 125 படங்களை வெளியிட்ட பிடி செல்வக்குமாருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பிடித்து செல்வக்குமாரை வாழ்த்தி பேசினர்..
இவரை வாழ்த்திய பிரபலங்கள் பலரும்.. நடிகர் விஜய்யின் அசுர வளர்ச்சியில் பி டி செல்வக்குமாரின் பங்கு மிகப் பெரியது.. விஜய் இவரை மறந்துவிட்டார். பிடி செல்லக்குமாரை கைவிட்டு விட்டார்.. விஜய் அப்படி செய்திருக்கக் கூடாது என்று பேசினார்கள்..
மேலும் கலப்பை மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் ஒரு கட்டத்தில் அரசியல் இயக்கமாக மாற நேரிடலாம் என தெரிவித்து இருந்தார் PT Selvakumar..
Dr PT Selvakumar Kalappai Makkal iyakkam will enter in politics

