தேசிய விருது வென்ற ‘டூலெட்’ பட இயக்குநர்.. பிரபல ஒளிப்பதிவாளர்  செழியன் மரணம்..; சில குறிப்புகள்..

தேசிய விருது வென்ற ‘டூலெட்’ பட இயக்குநர்.. பிரபல ஒளிப்பதிவாளர்  செழியன் மரணம்..; சில குறிப்புகள்..

தேசிய விருது வென்ற ‘டூலெட்’ பட இயக்குநர்.. பிரபல ஒளிப்பதிவாளர்  செழியன் மரணம்..; சில குறிப்புகள்..

 

 

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். செழியன் இயக்கிய Tolet என்ற படத்திற்காக தேசிய விருதை வென்றனர். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செழியன் திடீரென காலமானதாக

முக்கிய அறிவிப்பு. திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் இன்று (10/07/2026) காலை உயிரிழந்தார். தற்போது இவருக்கு வயது 50..

அவரின் உடல் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காலை 10 மணி அளவில் வைக்கப்பட உள்ளது…

 

ஒளிப்பதிவாளர் செழியன் சில குறிப்புகள்..

இரா.செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்த முன்னணி ஒளிப்பதிவாளர், தேசிய விருது பெற்ற இயக்குநர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். கட்டடப் பொறியியல் படிப்பை முடித்த இவர், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகத் தன் சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ (2007) திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

‘டூலெட்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மிலன் சர்வதேச திரைப்பட விழாவில் இதற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் கிடைத்தது..

 

அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார்..

 

ஆனந்த விகடன் இதழில் உலகத் திரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய தொடர், பின்னர் ‘உலக சினிமா’ என்ற பபுத்தகத் தொகுப்பாக வெளியானது. இது தவிர ‘கார்மோனியம்’ என்ற சிறுகதைக்காக கதா விருதும் பெற்றுள்ளார்..

தி ஃபிலிம் ஸ்கூல் புதிய தலைமுறை சினிமா ஆர்வலர்களுக்காகத் திரைப்படப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இப்பள்ளியின் மூலம் பயின்ற 34 மாணவர்கள் ஒரே நேரத்தில் 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்கும் புதிய முயற்சியை சமீபத்தில் தொடங்கினார்..

 

தமிழ் சினிமாவின் அறிவுசார் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர். சம்பள விஷயத்தல் கறாராக இருக்க மாட்டார். பல படங்களில் சம்பளம் வாங்காமலேயே பணியாற்றி உள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

 

Tolet movie director Cameraman Chezhiyan passed away

 

Related articles