தனுசுக்கு நடிக்கவே பிடிக்கல.. செல்வா அப்படியில்ல..; பவிஷ் – நம்ம வீட்ல மூணு VisCom இருக்கோம்.. – கஸ்தூரிராஜா
தனுசுக்கு நடிக்கவே பிடிக்கல.. செல்வா அப்படியில்ல..; பவிஷ் – நம்ம வீட்ல மூணு VisCom இருக்கோம்.. – கஸ்தூரிராஜா
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் நடித்துள்ள திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.
ஆந்திராவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் நாகதுர்கா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகிறார்..
இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாக்ஸ்ன் என்ற பெயரில் வலம் வரும் இரு இசையமைப்பாளர்கள் இதற்கு இசையமைத்துள்ளனர்..
ஜென்சி கிட்ஸ்க்கு பிடித்த படமாக இந்த படம் உருவாகியுள்ளது..
இந்தப் படத்தின் டிரைலரில்.. நாலு வருஷம் நான் காதலுக்காக செஞ்சத நாலு மாசம் அவளால் செய்ய முடியுமா என்று பவிஷ் கேட்கிறார்.. காதலுக்காக பசங்க செய்றதையெல்லாம் பொண்ணுங்க நம்மளால செய்ய முடியாது என வனிதா கூறுவதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது..

இந்தப் படத்தில் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கஸ்தூரிராஜா பேசும் போது..
“நான் ஒரு பெரும் பாக்கியசாலியாக கருதுகிறேன்… என்னை போன்ற ஒரு வாய்ப்பு உங்களில் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் என தெரியாது.. என் அருகில் என் மூத்த மகன் செல்வராகவன் இருக்கிறார்.. எங்கள் கூடவே எங்களின் மூத்த பேரன் பவிஷ் இருக்கிறான்.. ஒரே மேடையில் நாங்கள் மூன்று தலைமுறை அமர்ந்திருப்பது எனக்கு பெருமை..
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானாலும் அவர் கிட்டத்தட்ட 4-5 படங்கள் நடிக்கும் வரை அவருக்கு நடிக்கவே பிடிக்கவில்லை.. வீட்டிற்கு வந்து அழுது கொண்டே இருப்பான்..
ஆனால் செல்வராகவன் அப்படி இல்லை அவனுக்கு எப்போதும் சினிமா தான்.. கல்லூரி படிப்பை கூட அவன் படிக்க விரும்பவில்லை.. நாங்கள் வற்புறுத்தி தான் அவர் படித்தார்.. என் காலத்திற்கு முன்பு சினிமா இருந்தது… உன் காலத்திற்குப் பிறகும் சினிமா இருக்கும்.. சினிமா எங்கும் ஓடி விடாது.. ஆனால் படிப்பு முக்கியம் என்று சொல்லி சொல்லி தான் செல்வராகவனை படிக்க வைத்தோம்..
ஒரு நாள் எனது மூத்த மகள் விமலா ஒரு அருமையான திரைக்கதையை சொன்னார் அதுதான் காதல் கொண்டேன்.. அந்த கதையை உனக்கு சொன்னது யார் என்று கேட்டபோது செல்வராகவன் என்று சொன்னார்..
அந்தக் கதையில் தனுஷை நடிக்க வைக்கலாம் என்றும் நாங்களே படத்தை தயாரிப்பது எனவும் முடிவு எடுத்தோம்..
அப்போது எனது மனைவி நமக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று கேட்டார்.. ஏற்கனவே ரெண்டு கோடி கடன் இருக்கு என்று சொன்னேன் இந்த படம் எடுக்க எத்தனை கோடி வேண்டும் என்றார் ஒரு 3-4 கோடி வேண்டும்” என்றேன்..
நம் பிள்ளைகளுக்காக நாம் கடன் வாங்கி செய்யக்கூடாதா என்று கேட்டார்.. எங்கள் வீட்டில் முக்கியமான முடிவுகளை எடுப்பது எல்லாம் பெண்கள்தான்.. பெரும்பாலும் பலர் வீட்டிலும் பெண்கள் தான் முடிவெடுக்கிறார்கள்.. அதன்படி என் மனைவி சொன்னபடி தான் அந்த படத்தை தயாரித்தோம்…படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்.. அதை போல் எங்களது மூத்த பேரன் பவிஷ் நடிக்க ஆசை என்று சொன்னபோது.. நாங்கள் ஓகே சொன்னோம். அவன் விஸ்காம் படிக்க வேண்டும் என்றார்.. நீ எதற்கு கல்லூரியில் சென்று விஸ்காம் படிக்கனும்.. நம்ம வீட்டில் மூன்று விஸ்காம் இருக்கிறோம்..
அதன் பிறகு தான் தனுசு உடன் திருச்சிற்றம்பலம் &:கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை உதவி இயக்குனராக பணிபுரிந்தான்… அதன் பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் பவிசை நாயகனாக நடிக்க வைத்தார் தனுஷ்.
இப்போது மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொண்டிருக்கிறார் பவிஷ்.. அவன் சினிமாவில் பெரிய இடத்தில் வளர வேண்டும்.. அதற்கு மீடியாவின் ஆதரவு எப்போது வேண்டும் ரசிகர்களின் ஆதரவு வேண்டும்.
சினிமா என்பது நாம் வேண்டாம் என்று விலகி சென்றாலும் நம்மை தேடி வரும்.. நாம் தேடி தேடி வந்தாலும் நம்முடன் நெருங்கி வராது.. ஆனால் நல்ல சினிமா என்பது அதற்கான கலைஞர்களை அதுவே தானாக தேடிக் கொள்ளும்..’ என்று படக் குழுவினரை வாழ்த்தி பேசினார் கஸ்தூரிராஜா..
நாயகன் பவிஷ் பேசும்போது.. ஹீரோயின் நாகதுர்காவுடன் நடிக்கும்போது கூட ஒரு யூத் பீலிங் வரவில்லை.. வனிதா செட்டுக்கு வந்த பிறகுதான் ஒரு யூத் பீலிங் எனக்கு கிடைத்தது..
இதுவரை லவ் ஓ லவ் படத்திற்கு மூன்று நிகழ்ச்சிகள் நடத்திவிட்டோம்.. அதனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை.. படம் நன்றாக வந்துள்ளது.. மீடியா மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்… உங்கள் ஆதரவு வேண்டும் ள்..” என்று பேசினார் நடிகர் பவிஷ்..
இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் நாளை(10.07.2026) வெளியாகவுள்ளது.
Dhanush not interested in Acting says his father Kasthuri Raja

