நாளை நமதே விமர்சனம் 3.75/5… தனித் தொகுதி அமுதாவுக்கு மகுடம் சூட்டிய மதுமிதா

நாளை நமதே விமர்சனம் 3.75/5… தனித் தொகுதி அமுதாவுக்கு மகுடம் சூட்டிய மதுமிதா

 

நாளை நமதே விமர்சனம் 3.75/5… தனித் தொகுதி அமுதாவுக்கு மகுடம் சூட்டிய மதுமிதா

 

அம்மா கிரியேஷன்ஸ் T சிவா
வழங்கும் ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கிய படம் *நாளை நமதே*.

ஸ்டோரி…

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதைக்களம் இது.. மேலத்தெரு கீழத்தெரு என்ற இரு பிரிவுகளில் எப்போதும் ஜாதி பிரச்சனை.. ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நர்சாக பணிபுரிந்து வருகிறார் நாயகி மதுமிதா.. இதனால் ஊர் மக்கள் இடையே இவருக்கு நல்ல பெயர் உண்டு..

இந்த சூழ்நிலையில் இந்த ஊராட்சி பகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.. இதனையடுத்து இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது..

எனவே தன் மக்களுக்கும் சேவை செய்ய தேர்தலில் போட்டியிட துணிச்சலான முடிவு எடுக்கிறார்.. இதனால் இவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் இவரை கட்டிக் கொள்ள மறுக்கிறார்.. இதற்கு உறவினர்களும் மேலத்தெரு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..

இதை எல்லாம் வென்று வந்தாரா அல்லது ஜாதி என்ற சாக்கடையில் இவரும் மூழ்கடிக்கப்பட்டாரா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகி – மதுமிதா (கேரக்டர் பெயர் அமுதா)

வேல்முருகன்
ராஜலிங்கம்
செந்தில் குமார்
முருகேசன்
மாரிக்கண்ணு
கோவை உமா,
மற்றும் கிராமத்து மக்கள்.

தமிழ் பேசத் தெரிந்த திறமையான அழகான நடிகை மதுமிதா தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.. காதல் கல்யாணம் செவிலியர் என சராசரி பெண்ணாக இவரது முகச்சாயல் இருந்தாலும் தன் மக்களுக்காக உழைக்கும் இவரது நடிப்பு மகுடம் சூட்டும்..

முக்கியமாக ஒரு காட்சியில் இவர் தேர்தலில் நிற்க முயலும் போது.. சாணியில் செருப்பை முக்கி அதை இவரது முகத்தில் காலால் மிதிக்கும் அந்த காட்சி இவரது நடிப்புக்கு ஒரு சான்று..

இவரது அம்மா கேரக்டர்.. நாயகனின் பெற்றோர், ஜாதி வெறி பிடித்த ஆளுமைகள் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் படத்திற்கு பலம்..


டெக்னீசியன்ஸ்…

இசை – ஹரிகிருஷ்ணன்

ஒளிப்பதிவாளர் – பிரவீன்
எடிட்டர் – ஆனந்த் லிங்ககுமார்
கலை – தாமோதரன்

ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு கலை என அனைத்தும் சிறப்பு.. ஒரு நேர்த்தியான படைப்புக்கு பக்கபலமாக இருந்துள்ளது.. இன்றளவிலும் சில கிராமங்களில் விளக்கு வசதி இருக்காது.. அதைக் கூட நிலா வெளிச்சத்திலேயே ஒளிப்பதிவாளர் பிரவீன் படமாக்கி இருப்பது சிறப்பு..

ஹரி கிருஷ்ணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைத்துள்ளது..

இயக்குநர் வெண்பா கதிரேசன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு.. இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் & சமுத்திரக்கனி நடிப்பில் ‘நந்தன்’ என்ற திரைப்படம் வெளியானது.. அந்தப் பட சாயலில் இந்த படம் வந்திருந்தாலும் அதில் ஸ்டார் வேல்யூ இருந்தது.. ஆனால் இதில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு எதார்த்தமான உணர்வுபூர்வமான வாழ்வியலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன்..

எந்த கேரக்டருமே ஒரு சினிமாத்தனம் இல்லாத யதார்த்த கிராமத்து மனிதர்களை நம் கண் முன் நிறுத்தி இருப்பதால் படத்துடன் ஒன்று ரசிக்க முடிகிறது..

இன்றைய ஜாதி ஒழிந்தால் மட்டுமே நாளைய சமூகம் சாதியற்ற சமூகமாக மாறும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறது.. அவ்வாறு உருவானால் இனி எந்நாளும் நமக்கானதே..

Naalai Namadhae movie review