வானரன் விமர்சனம் 3.75/5.. கடவுள் வேஷமிட்டவனை விட வேஷமிட்டு கடவுளாக வாழ்ந்தவன்
வானரன் விமர்சனம் 3.75/5.. கடவுள் வேஷமிட்டவனை விட வேஷமிட்டு கடவுளாக வாழ்ந்தவன்
நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாயகனாக (அறிமுகம்) நடித்த’வானரன்’..
ஸ்டோரி…
கோயில் திருவிழாக்களில் ஆஞ்சநேயர் வேஷம் போட்டு ஆடும் நாயகன் பிஜேஷ்.. திருவிழா இல்லாத நாட்களில் தெருக்களில் வேஷம் போட்டு தர்மம் தர்மம் கேட்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார்..
இவரது மனைவி காலமான நிலையில் தான் ஒரே மகள் வர்ஷாவை பாசமாக வளர்த்து வருகிறார்.. வர்ஷா கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கும் சூழ்நிலை இல்லை என்றாலும் முடிந்தவரை முயற்சிக்கிறார்..
ஒரு நாள் வர்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு நோய் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.. அந்த சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கின்றனர்..
மகள் கேட்கும் ₹1000/- செருப்பை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் பிஜேஷ் ₹4 லட்ச ரூபாய்க்கு என்ன செய்தார்.? அவரால் மகளை காப்பாற்ற முடிந்ததா.? அவருக்கு ஆஞ்சநேயர் உதவினாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
பிஜேஷ் நாகேஷ் – அனுமந்த ராவ்
அக்க்ஷயா – சுமதி
பேபி வர்ஷினி – அம்மு
ஜீவா தங்கவேல் – சம்சுதின் பாய்
நாமக்கல் விஜயகாந்த் – விஜயகாந் குமார்
நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் நாயகனாக அறிமுகம்.. எதார்த்த அப்பாவி இளைஞனாக கவர்கிறார்.. காதலியிடம் மெல்ல கடலை போடும் காட்சியிலும் கவர்கிறார்..
அக்ஷயா நாயகி.. கொஞ்ச நேரம் என்றாலும் கவனம் பெறுகிறார்.. இவர்களுடன் லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்..

மழை மொழி பேசும் குட்டி வர்ஷினி.. கொள்ளை அழகு.. இவரை நீங்கள் சூப்பர் சிங்க நிகழ்ச்சியில் பார்த்து இருக்கலாம்.. அவரது பேச்சை கேட்டாலே தூக்கி கொஞ்ச தோன்றும்.. நடிப்பிலும் குழந்தை சுட்டி..
பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்திலும் ஆதேஷ் பாலா திருடனாக நடித்திருப்பார்.. இவருக்கு எப்போதும் இந்த கேரக்டர் தானா? என நாம் நினைக்கையில் இவரது கேரக்டர் தான் படத்தின் கிளைமாக்ஸ் ஹைலைட்..
டெக்னீசியன்ஸ்….
ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் & சுஜாதா ராஜேஷ்
தயாரித்திருக்கிறார்கள்..
ஒளிப்பதிவு-
நிரன் சந்தர்
படத்தொகுப்பு-
வித்து ஜீவா
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தி.. குறையில்லை..
மக்கள் தொடர்பு – வெங்கட் – உதயா
பாடல்களும் வசனங்களும் கைதட்டலை பெற வைக்கிறது.. முக்கியமாக விஜேஷ் அக்ஷயாவின் காதல் பாட்டு ‘யாரோ என் நெஞ்சில் கூடு கட்டி..’ இனி அடிக்கடி கேட்கத் தோண்டும்..
ஷாஜகான் இசையமைத்து பாடிய நீதான் என் உலகம் பாட்டு ரசிக்க வைக்கிறது.. ஆஞ்சநேயர் பாட்டும் ஆச்சரிய பாட்டு தான்..

கொள்ளைக்காரனை கைது செய்யும் போது அவனுக்கு உடந்தையாக இருந்தவனை கைது செய்வார்கள்.. ஆனால் விபச்சாரியை கைது செயயும் போது எந்த ஆணையும் கைது செய்வதில்லை என்ற வசனங்கள் கைதட்டல் பெற வைக்கிறது..
ஒரு பெண் 5 மாத கர்ப்பிணியாக வந்து கருவை கலைக்க சொல்லும்போது.. ஏன் என்று டாக்டர் கேட்க.. இந்த விஷயம் தெரிந்தால் என் அப்பா என்னை கொன்னுடுவாரு என்பார் அந்தப் பெண்.. உன் அப்பா உன்னை கொல்லக்கூடாது.. நீ உன் கருவை கொல்லலாமா என்ற வசனம் செம..
இங்க.. காசு இல்லாம பொறக்கவும் முடியாது.. காசு இல்லாம புதைக்கவும் முடியாது.. உள்ளிட்ட வசனங்கள் ரசிக்க வைக்கிறது..
கடவுள் வேஷம் போட்டு ஆடுபவர்களை விட வேஷம் போட்டு கடவுளாக வாழ்ந்தவர்கள் என்று சோசியல் மெசேஜுடன் உணர்வுப்பூர்வமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன்..
ஆஞ்சநேயர் வேடமிட்டவனுக்கு உதவும் இஸ்லாமிய நண்பர்களை காட்டி மத நல்லிணக்கத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன்..
Vaanaran movie review

