DARK GIANT டார்க் ஜெயண்ட் விமர்சனம்

DARK GIANT டார்க் ஜெயண்ட் விமர்சனம்

 

DARK GIANT டார்க் ஜெயண்ட் விமர்சனம்

 

ஸ்டோரி…

நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த்.. பெற்றோரை இழந்த இவர் தன் தங்கை மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார்.. கடன் தொல்லையால் வாழ்க்கையை நடத்த முடியாமல் சிரமப்படுகிறார்..

அப்போது எதிர்ப்பாராமல் இவருக்கு ஒரு அழைப்பு வருகிறது.. உங்கள் ஊரில் உங்கள் தாத்தாவின் சொத்துக்கள் இருக்கிறது. அதற்கான வாரிசுகள் நீங்கள்தான்.. அவர்களை சென்று பார்த்தால் உங்களுக்காக உதவி கிடைக்கும் என்ற அழைப்பு சொல்கிறது..

அப்படி ஒரு ஊர்.. அப்படி ஒரு தாத்தா இருப்பதாக நம் அம்மா கூட சொல்லவில்லையே என்று குழப்பத்தில் தவிக்கிறார்.. இருந்தாலும் உதவி கிடைக்கும் சொத்துக்கள் கிடைத்தால் தன் பிரச்சனை தீர்ந்து விடும் என்பதால் அங்கு கிராமத்திற்கு மனைவி மற்றும் தங்கையுடன் செல்கிறார்..

அங்கு தாத்தா இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் தங்குகிறார்.. ஆனால் அவருக்கான முழு விவரங்கள் கிடைக்கவில்லை.. அங்கு பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. இதனால் தங்கை மற்றும் மனைவி இருவரும் இங்க இரு தங்க வேண்டாம் என்று வாதாடுகிறார்கள்..

அந்த அமானுஷ்யங்கள் பின்னணி என்ன?
இவர் எதிர்பார்த்து சொத்துக்கள் கிடைத்ததா.? அங்கு நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஆதர்ஷ் மதிகாந்த்.. இவரது குரல் உச்சரிப்பு கேரக்டருக்கு பெரிய பலம்.. பதட்டம் பயம் அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.. ஆனால் இவர் தலை விக் இவருக்கு செட்டாகவில்லை..

நாயகனின் மனைவியாக ஜோவிதா (நடிகர் லிவிங்ஸ்டன் மகள்).. குடும்ப போன் தானே கேரக்டரில் ஜொலிக்கிறார்.. வசீகரிக்கும் கண்கள் இவரது பிளஸ்..

அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால்.. இவர்களை சுற்றி தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

நாயகனின் தங்கையாக அழகியலுக்கு நடிப்பிலும் கவருகிறார் பதட்டத்தை தன் கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. மாடரன் உடைகளில் மார்கழி குளிர் போல சூடேற்றி இருக்கிறார்..

நாயகனின் நண்பராக அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதை பயணிப்பதற்கு பக்கபலமாக உள்ளனர்

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால்.. கேமரா ஓட்டத்தை பதட்ட உணர்வு ஏற்படுத்தும் வகையில் பயணிக்க வைத்திருக்கிறார்..

விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை.. ஒரு திரில்லர் படத்திற்கான பயத்தை இசை மூலம் உயிரூட்டிருக்கிறார்..

படத்தொகுப்பாளர் ஜி.ஜெ.திருச்செல்வம்.. இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்..

எழுதி இயக்கியிருக்கிறார் கே.எஸ்.கிஷான்.. தீய சக்தி என்றாலே அது சாத்தான் தான்.. சாத்தானுக்கு ஒரு வித்தியாசமான திரைக்கதை மூலம் ஒரு புது வடிவம் கொடுத்திருக்கிறார்..

 

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் & கிளைமாக்ஸ் பேய் கெட்டப் சூப்பர்.. மிரட்டல் ரகம்

சாத்தான் கர்ப்பிணி பெண் தொடர்பு.. நாயகி அந்த பங்களாவிற்கு வரவழைக்கப்பட்டதும் அதற்கு பின்னணியில் ஒரு கதையை சொல்லி வித்தியாசமான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் கே.எஸ்.கிஷான்..

 

Dark Giant movie review