வள்ளுவன் விமர்சனம்… திருவள்ளுவர் வரிகளில் தீர்ப்பு எழுதும் சாமானியன்
வள்ளுவன் விமர்சனம்… திருவள்ளுவர் வரிகளில் தீர்ப்பு எழுதும் சாமானியன்
ஸ்டோரி…
நாயகன் சேத்தன் சீனு.. நாயகி அஸ்னா சாவேரியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. அவள் செய்யும் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி அவளிடம் நன்மதிப்பை பெற்று காதலிக்க வைக்கிறார்..
இது ஒரு புறம் இருக்க இவர்கள் வசிக்கும் பகுதியில் திடீரென அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.. அந்த கொலைகளை செய்துவிட்டு உடலில் திருக்குறளை எழுதி வைக்கிறான்..
அப்படி என்றால் அவன் கூலிக்கு குற்றம் செய்பவன் அல்ல.. சம்பந்தப்பட்டவரால் பாதிக்கப்பட்டவன் என்பதை காவல்துறை கண்டுபிடிக்கிறது.. அவன் யாரால் எப்படி பாதிக்கப்பட்டான்.? அவனின் நோக்கம் என்ன.? அடுத்தடுத்து கொலைகள் செய்யும் அவனின் சிந்தனை என்ன.? திருக்குறள் மூலம் அவன் இந்த சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்து என்ன.? என்பதை சொல்லும் திரைக்கதை தான் இந்த வள்ளுவன்..

கேரக்டர்ஸ்…
சேத்தன் சீனு நாயகனாக நடித்திருக்கிறார்.. செம ஸ்மார்ட்டாக ஆக்ஷன் காட்சிகளில் அசத்திருக்கிறார்.. ஆஸ்னாவுடன் இன்னும் ரொமான்ஸ் செய்திருக்கலாம்.. தங்கையை பறிகொடுத்த காட்சியில் கண்கலங்க வைத்து விட்டார்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகியாக ஆஸ்னா சாவேரி.. அழகிலும் நடிப்பிலும் கவர்ந்து இழுக்கிறார்.. தன்னைவிட சமூகம்தான் முக்கியம் என்று சொல்லு நாயகனுக்கு இவர் உதவும் காட்சியில் ஆஷ்னா அசத்தல் நாயகி..

மறைந்த மனோபாலா நடித்திருக்கிறார்.. நான்கு வருடங்களுக்கு முன்பே இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் போல.. ஆனால் அவருக்கு வேறு ஒருவர் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார்.. குரல் செட் ஆகவில்லை.. மிமிக்கிரி கலைஞர் கொடுத்திருக்கலாம்..
சாய் தீனா, பிரேம்குமார், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய அஸ்வத் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷைல் குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார்.
விழுதுகள் வெறுத்த வேறுர்கள் இல்லம்.. என்ற வித்தியாசமான பெயரில் முதியோர் இல்லத்தை காட்டுவது வித்தியாசமான சிந்தனை..
சின்னஞ்சிறு கூட்டில் சாமியை காட்டுற… என்ற பாடலும் வரிகளும் ரசிக்க வைக்கிறது.
சங்கர் சாரதி என்பவர் இயக்கியிருக்கிறார்.. குற்றவாளிகளுக்கு வாதாடும் வக்கீல்கள் இருக்கும் வரை குற்றங்கள் குறையாது.. அது போல தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்..

பெண்களை பாலியல் சீண்டல் செய்து அவர்களை சித்திரவதை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிடும் கும்பல் பற்றி நாம் தினம் பார்த்து வருகிறோம்.. ஆனால் இவையெல்லாம் நாம் செய்தியாகவே கடந்து போகிறோம்.. நம் குடும்பத்தில் ஒரு பாதிப்பு வந்தால் மட்டுமே அதன் வலி நமக்கு புரியும் என்பதை வலி மிகுந்த காட்சிகளாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சங்கர் சாரதி..
திருவள்ளுவர் எழுதிய குரலை வைத்து அதன் சொல்படி நடந்து சமூகத்தை மாற்ற நினைக்கும் ஒரு மனிதனின் மனிதநேயத்தை காட்டும் இந்த படம் நிச்சயம் ரசிக்க தகுந்த படமே..
வேந்தொறுத்தல் என்பது கொடுமை செய்வோரை அரசன் தண்டிப்பதைக் குறிக்கும். இது திருக்குறளின் 550-வது குறளில் இடம்பெற்றுள்ள “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்” என கூறப்பட்டுள்ளது..
ஆயிரம் சட்டதிட்டங்கள் இருந்தாலும் சட்டத்தின் ஓட்டை வழியே வெளியே வந்து மீண்டும் குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு இந்த படம் ஒரு எச்சரிக்கை பதிவாகும்.. சமூக மட்டுமல்ல நாமும்.. நாம் மாறினால் மட்டுமே மாற்றங்கள் உருவாகும் என்பதையும் இந்த வள்ளுவன் சொல்லி இருக்கிறான்..
Valluvan movie review
—

