மக்கள் தலைவா விமர்சனம்.. காமராஜரை தோற்கடித்த மக்களுக்கு ஓர் அரசியல் பாடம்
மக்கள் தலைவா விமர்சனம்.. காமராஜரை தோற்கடித்த மக்களுக்கு ஓர் அரசியல் பாடம்
60 ஆண்டு கால தமிழக அரசியல் நடந்த சம்பவங்களின் நகைச்சுவை தொகுப்பு தான் இந்த ‘மக்கள் தலைவா’..
ஸ்டோரி…
வேலைக்கு செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றுகிறார் ரவி மரியா.. இவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை இருக்கிறது.. ஆனால் மிகப் பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இருப்பதால் சமூகம் சார்ந்த செயல்கலில் ஈடுபட்டு வருகிறார்..
அதாவது மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதை வைத்து போராட்டம் நடத்தி அரசியல்வாதிகளிடம் ஆளுங்கட்சியிடம் பணம் பறித்து அதில் குளிர் காய்வது தான் இவரது வேலை..
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் கேட்டாலும் அதை வைத்து குடிகாரர்கள் போராட்டம் நடத்தி அதில் வெற்றி காண்கிறார்.. இப்படியாக மணல் கொள்ளை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி ஆதாயம் தேடி பிழைப்பு நடத்துவார்..
இவரின் செய்கைகளை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி இவரை சந்திக்க வருகிறார்..
நீ ஒரு கட்சி தொடங்கு உனக்கு நான் எல்லாம் செய்கிறேன் என்கிறார்.. அதன்படி முதல் அட்வான்ஸாக ஒரு பங்களாவை எழுதி வைக்கிறார்..
ஒரு கட்டத்தில் உள்ளே வெளியே கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து அதன்படி அரசியலில் நுழைகிறார் ரவி மரியா..
அதன் பிறகு என்ன நடந்தது.? ரவி மரியாவை அழைத்து அரசியல் கட்சி நடத்த ராதாரவி போடும் திட்ட என்ன.? யாரோ ஒருவரை அழைத்து அவரது பெயரில் சொத்துக்களை எழுதி வைக்க என்ன காரணம்.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான காமெடி கலாட்டா..

கேரக்டர்ஸ்…
இயக்குனராக அடையாளம் காணப்பட்ட ரவி மரியா ஒரு கட்டத்தில் குணச்சித்திர கேரக்டர் வில்லன் காமெடியன் என பல்வேறு வேடங்களில் நடித்து பிரபலமான இவர் முதல்முறையாக கதை நாயகனாக நடித்திருக்கிறார்..
நிஜ வாழ்க்கையில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாக இருக்கிறார்.. எனவே அவருக்கு அரசியல் கைவந்த கலை தான் இந்த படத்திலும் அரசியலில் வைத்து நையாண்டி செய்து நாயகனாக ஸ்கோர் செய்து இருக்கிறார்..
வேலை இல்லாதவராக இடைவேளை வரை வந்த ரவி மரியா இடைவேளைக்கு பிறகு அரசியலில் தன் விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறார்.. கட்சி பொதுக்கூட்டம் மேடைப் பேச்சு காட்சிளில் பக்காஅரசியல்வாதியை தன் நடிப்பில் பிரதிபலிக்கிறார் ரவி மரியா..
ரவி மரியாவுடன் வருண் என்பவரும் தன் பங்குக்கு நடிப்பு அரசியல் செய்திருக்கிறார்..
பல இடங்களில் துணை நடிகர்களைப் போல வருபவர்கள் உதட்டில் கூட வார்த்தைகள் ஒட்டவில்லை.. அதை இயக்குனர் கவனித்திருக்கலாம்…
படத்தில் நாயகிக்கு பெரிய வேலை இல்லை.. ஒரு பாட்டு கொஞ்சம் காட்சி என பயன்படுத்தியிருக்கிறார்..
பழ கருப்பையா ஒரு பக்க அரசியல்வாதியாக அந்த கேரக்டருக்கு பொருந்தி இருக்கிறார்.. நாஞ்சில் சம்பத் சில காட்சிகள் வந்தாலும் வழக்கம் போல பேசிப் பேசியே கவர்கிறார்..
பேரரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் தங்களுக்கான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் நகைச்சுவை படத்திற்கு ஓகே ரதம் தான்.. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
அரசியல் படம் என்பதால் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் 100 – 50 மக்கள் தேவைப்படும்.. ஆனால் கொஞ்சம் கூட்டம் மட்டுமே கூட்டி ஒரு சின்ன பட்ஜெட் படம் தான் என்பதை காட்டி இருக்கிறார்கள்..
அரசியலில் ஜெயித்த ஜெயிக்காத தலைவர்களை நையாண்டி செய்து அடடா அவரா… அடடா இவரா என்ற ரசிகர்களை கேள்வி கேட்க வைக்கிறார்..
படத்திற்கு கதை வசனம் எழுதி ஜெயித்து முதலமைச்சர் என்ற கருணாநிதியை கிண்டல் அடித்திருக்கிறார்.. டீ விற்று முதல்வரானவர் என்று ஓ பன்னீர் செல்வத்தை கிண்டல் அடித்திருக்கிறார்..
கரூர் சம்பவத்தில் 40 பேரை பலி வாங்கிய விஜய்யும் விட்டு வைக்கவில்லை.. இப்படியாக பல அரசியல் கட்சிகளை கிண்டல் அடித்திருக்கிறார்..
நீ தனியா திருடுனா திருடன்… கூட்டமா சேர்ந்து திருடனா நீ தலைவன்…
டிவி உடைத்த கமல்…
மூஞ்சி நல்லா இல்ல சொன்னாங்க.. ஆனா இன்னைக்கு அந்த முகம் தமிழகத்தின் முகவரி ஆகிவிட்டது.. இப்படி பல வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது..
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனை காட்டாமல் கதையை முடித்திருக்கிறார் இயக்குனர்..
ஓட்டுக்கு பணம் பிரியாணிக்கு ஓட்டு குவாட்டருக்கு ஓட்டு என்று மாறிவிட்ட மக்கள் மனநிலையை வைத்து இறுதியாக ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்..
தமிழகத்தின் பொற்காலம.. இந்தியாவின் அரசியல் கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்டவர் பெருந்தலைவர் காமராஜர்.
அவரது ஆட்சிக்குப் பிறகு பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தை ஆண்டாலும் இன்று வரை காமராஜர் ஆட்சியை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..
தமிழகத்திற்கு எத்தனையோ நலத்திட்டங்களை கொண்டு வந்த பெருந்தலைவர் காமராஜரை ஒரு கட்டத்தில் மக்கள் தோற்கடித்தார்கள்.. அந்த மக்களுக்கு பாடம் புகட்ட ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருக்கிறார். இயக்குனர் ராம்தேவ்..
கார்ப்பரேட் முதலாளி ராதாரவி போடும் அரசியல் திட்டங்கள் பலே பலே. காமராஜரால் வாழ்க்கை பெற்ற இவர் ஆடும் சதுரங்க வேட்டை தான் இந்த அரசியல் ஆட்டம்..
Makkal Thalaiva movie review
——–

