நிழல் விமர்சனம்… சட்டம் என் கையில்…
நிழல் விமர்சனம்… சட்டம் என் கையில்…
ஸ்டோரி…
ரமேஷ் கண்ணா – மஞ்சுவின் மகள்கள் ஜனனி.. (ஒரே நாயகி இரட்டையர் தோற்றத்தில் ரம்யா & சரண்யா என நடித்துள்ளார்..) இவர்கள் ட்வின்ஸ் என்பதால் சில நேரங்களில் இவர்களை பெற்றோருக்கே யார் என்பது தெரியாது.
இந்த சூழ்நிலையில் இவர்கள் ஆள்மாறாட்டம் செய்து விளையாடுவது உண்டு..
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ரம்யா தான் வேலை செய்யும் இடத்தில் சரண்யாவை அனுப்பி விடுகிறார்.. அப்போது வில்லன் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.. தான் செய்த ஒரு தவறால் தன்னுடன் ஒட்டிப் பிறந்தவள் பாதிக்கப்படுகின்றாள் என்பதால் ஜனனி வில்லன்களை பழிவாங்க துடிக்கிறாள்.
அதன் பிறகு என்ன நடந்தது? ஜனனியால் தான் நினைத்ததை சாதிக்க முடிந்ததா.? அவர்கள் ஜனனியை கொல்ல காரணம் என்ன? இவர்களுக்கு ஏதேனும் முன் விரோதம் இருந்ததா என்பதெல்லாம் கதை..

கேரக்டர்ஸ்..
Heroine – Janany
Hero – Vishakan
Second Hero – Kaushick
Villain – Hari Vijay (Hariharan Raju)
இரட்டைக் குழந்தைகளாக ஜனனி.. இரு வேடமேற்று நடிப்பில் அசத்தியுள்ளார்.. ட்வின்ஸ் என்பதால் பெரிய வேறுபாடு காட்டாமல் கொஞ்சம் குறும்பு கொஞ்சம் அமைதி என மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. வசீகரிக்கும் கண்களால் கவருகிறார்..
விசாகன் போலீஸ் தோற்றத்தில் கம்பீரமாக காணப்படுகிறார்.. ரொமான்ஸிலும் தேர்ச்சி பெறுகிறார்.. மற்றொரு நாயகனாக கௌஷிக். இடைவேளை வரை இவருக்கு பெரிய காட்சிகள் இல்லை.. ஆனால் கோர்ட் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்..
வில்லனாக நடித்துள்ள ஹரி விஜய்யும் தன் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்..
இவர்களுடன் நாம் பல youtube சேனல்களில் பார்த்த பல முகங்களை இதில் காண முடிகிறது.. மஞ்சு சாரதா அம்மா பிரபாகரன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய பங்களிப்பை சரியான விகிதத்தில் கொடுத்துள்ளனர்..
1. Ramesh Khanna
2. Divya Krishnan
3. Abhishek Shankar
4. Sabitha Anand
5. Kalai Maamani Sivan Srinivasan
6. Dhilipan
7. Boys Rajan
8. Yuvashree Shanmugam
9. Deepika (Deedoll)
10. Kavya Amira
11. Aranthangi Manjula
12. Padmini
13. S.K.Guru
14.G.Vignesh
15. Orange Mittai Prabakaran
16. Rajakumari

டெக்னீசியன்ஸ்…
Director : A.K.Kumar
Dop : Mohankumar
Music Director : M.Abubakkar
Editor – Dinesh
Art Director – Dass
மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய அபூபக்கர் இசையமைத்திருக்கிறார்.. இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..
ஏ கே குமார் என்பவர் இயக்கியிருக்கிறார்.. ஒருவரது நிழல் அவரை பின்தொடரும்.. அதுபோல ஒரு திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்… இரட்டையராக பிறந்தவர்கள் நிழல் போல தொடர்வார்கள் என்பதையும் அர்த்தம் கொள்ளலாம்..
இடைவெளி வரை கதை எதை நோக்கி பயணிக்கிறது… ரம்யா யார சரண்யா யார் என்று மனநிலை நீடிக்கும் போது திடீரென இருவரையும் இணைத்து திரைக்கதையில் திருப்புமுனை கொடுத்திருக்கிறார்..
பாலியல் குற்றங்களுக்கு எதிராக பெண்களுக்கு ஆதரவாக ஒரு சோசியல் மெசேஜும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்..
அதற்காக ஜனனிக்கு மருத்துவத்துறையில் வேலை… விசாகனுக்கு காவல்துறை கவுசிக்கு நீதித்துறை என அனைத்தையும் முடிச்சு போட்டிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் சட்டத்தையும் நீதித்துறையும் மீறி ஹீரோ செய்யும் செயல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டலை அள்ளும்… குற்றவாளிகளுக்கு இதுதான் சரியான தண்டனை என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ கே குமார்..
Nizhal Movie Review

