மனு விமர்சனம்… சாதிச் செடியில் காதல் பூ

மனு விமர்சனம்… சாதிச் செடியில் காதல் பூ

 

மனு விமர்சனம்… சாதிச் செடியில் காதல் பூ

 

ஸ்டோரி…

ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார் நாயகியின் அப்பா.. தான் துன்புறுத்துவதை தன் மகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன் உறவுக்கார வீட்டுக்கு அனுப்பி அங்கு படிக்க வைக்கிறார்.. ஒரு கட்டத்தில் படிப்பை முடித்துவிட்டு சொந்த கிராமத்திற்கு வருகிறார் மகள்..

அப்போது நாயகன் செய்யும் நற்பணிகளை கண்டு அவர் மீது காதல் கொள்கிறாள்.. 150 கோடிக்கு வாரிசு ஆன ஒரே மகள் ஒரு கீழ் சாதி பையனை காதலிப்பதா என்று மீண்டும் தன் வில்லன் அவதாரத்தை எடுக்கிறார்..

இதனால் மகள் வீட்டை விட்டு ஓடி போக நினைக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் ரசிகர்களே யூகிக்கும் மீதிக்கதை

கேரக்டர்…

நாயகன் ஸ்ரீயூத்.. நாயகி ரேஷ்மா லிங்கராஜப்பா..

விஜய் மன்ற தலைவராக நற்பணி நாயகனாக உயர்ந்து நிற்கிறார் ஸ்ரீயூத்.. ஆட்டம் ஆக்சன் என இரண்டிலும் ஓகே.. ரொமான்ஸ் இன்னும் மெச்சூரிட்டி தேவை..

நாயகி ரேஷ்மா லிங்க ராஜப்பா.. பணக்கார பெண்ணாக இருந்தாலும் எளிய மனதுக்காரராக திகழ்கிறார்.. காதலுக்காக உருகும் காட்சிகளில் கவர்கிறார்..

ஒரு கட்டத்தில் ஊரை விட்டு ஓடும் ஐயப்பன் ஜெய்.. காதலர்களுக்கு.. முக்கியமாக ஊர் காரர்களுக்கு உதவும் காட்சிகளில் கவர்கிறார்..

நாயகியின் அப்பா & சித்தப்பா இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவிலும் டி.ஐ கலர் கரசனிலும் கூடுதல் மெனக்கெட்டு இருக்கலாம்.. படத்தின் லோ பட்ஜெட்டை இது வெளிக்காட்டுகிறது

அப்பா அப்பா பாட்டு…

என் மனதில்.. என் உயிரில்…
இசையினா நிறைந்தவள் நீ…

அன்பே அன்பே.. ஆயுள் முழுக்க நீ வேணும்.. ஆனால் ஒரு காதல் தோல்வி பாடலுக்கு குத்து பாட்டு தேவையா.?

உள்ளமெல்லாம் தளபதி டா… நாளைய முதல்வன் டா….
விஜய்யை புகழ வேண்டும் என்பதற்காகவே ஒரு பாட்டு திணிக்கப்பட்டிருக்கிறது.. அதையாவது சரியாக பயன்படுத்தி இருக்கலாம்..

பலித்ததே கனவு… பாடல் வரிகள் சிறப்பு…

துர்கா பிரசாத் என்பவர் இயக்கியிருக்கிறார்.. வழக்கமான காதல் டெம்ப்ளேட் அதற்கு வழக்கமான ஆணவ படுகொலை உள்ளிட்டவைகளை கொடுத்திருக்கிறார்.. 150 கோடி மதிப்புமிக்க நாயகி குடும்பத்தை இன்னும் பணக்காரர்களாக காட்டி இருக்கலாம்..

இவர் விஜய் ரசிகரா அல்லது நாயகன் விஜய் ரசிகர் என்பதால் காட்சிகள் வைத்தாரே என்று தெரியவில்லை கில்லி படத்திலிருந்து ஒரு காட்சியை ரீ கிரியேட் செய்து இருக்கிறார்.. அதற்கு முன்பே நாயகிக்கு புல்லட் ஓட்ட தெரியும் என்ற காட்சியை வைத்திருப்பது சிறப்பு..

ஆணவ படுகொலை என்பது தீர்வு அல்ல.. அது அவசரத்தில் எடுத்த முடிவு.. ஆனால் அந்த குற்ற உணர்ச்சி நம்மை கொன்றுவிடும் என்ற சோசியல் மெசேஜ் கொடுத்து இருக்கிறார்..

இடைவேளைக்கு முன்பு வரை இருந்தது இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சுவாரசியம் குறைவு..

Manu movie review