மாமரம் திரை விமர்சனம்… பழுத்த மரமா.? பட்ட மரமா.?

மாமரம் திரை விமர்சனம்… பழுத்த மரமா.? பட்ட மரமா.?

மாமரம் திரை விமர்சனம்… பழுத்த மரமா.? பட்ட மரமா.?

 

ஸ்டோரி…

இன்ஜினியரிங் படிக்கிறார் நாயகன் ஜெய் ஆகாஷ்.. இவரது காதலி ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. அடிக்கடி ஆபீஸில் ஓவர் டைம் என்கிறார்.. இதனால் காதலி மீது சந்தேகம் கொள்கிறார்..

ஒருநாள் இந்த சந்தேகம் சண்டையில் முடிகிறது.. எனவே ஜெய் ஆகாஷை விட்டு பிரிந்து செல்கிறார் நாயகி.

அதன் பின்னர் மேற்படிப்புக்காக எம்டெக் படிக்க வேறு கல்லூரிக்கு செல்கிறார் ஜெய் ஆகாஷ்.. காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் காதலையும் காதலர்களையும் வெறுக்கிறார்.. எவரும் கல்லூரியில் காதலிக்கக் கூடாது என கட்டளை போடுகிறார்..

இந்த சூழ்நிலையில் அங்கும் இவரை ஒருவர் காதலிக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? காதலை ஏற்றுக் கொண்டாரா.? இந்தக் கதைக்கு மாமரம் என்ற தலைப்புக்கு என்ன சம்பந்தம்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்

Jaiakash as Raja
Meenakshi as Meenakshi
Nisha as Sandhya
Kadhal Suhumar as Rajesh
KPY Diwakar as Master
Rahul Dev as Baswa
Brammaji as Sandhya’s Mama
Arunachalam as MLA
Madurai Sakthivel as Granite factory owner
Brammanandam as Class lecturer
Basha as Soriyan
Sathyam Rajesh as young lecturer
Ramya as Sandhya’s friend

மீனாட்சி அழகிலும் கவர்ச்சியிலும் கவர்கிறார்..

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் இருக்கிறார்.. சிரிக்க வைப்பார் என்றால் ஏமாற்றமே.. அது போல தான் காதல் சுகுமார் கேரக்டரும் வலுவில்லை.. டிவியில் பிரபலமான திவாகரும் இதில் திவால் ஆகிவிட்டார்..

டெக்னீசியன்ஸ்…

Cinematography – Paul Pandi
Music – Nantha
Background Score – Jai Harishanth
Editing – A.C.Manikandan
Written and Directed By Jaiakash
Produced by Jaiakash Films
Release by Heaven Nature Media and A Cube
PRO Hemananth

ஓரிரு பாடல் ரசிக்க வைத்தாலும் தேவையில்லாத இடத்தில் பாடல்கள்.. மேலும் பாடல் வசனங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது பின்னணியில் பாட்டு & இசை தேவையற்றது..

எந்த வருடத்தில் எடுக்கப்பட்ட படம் என்று தெரியவில்லை.. ஜெய் ஆகாஷ் அசல் காலேஜ் பையனாகவே வருகிறார்.. ஆக்ஷன் ரொமான்ஸ் பைட் டான்ஸ் என அனைத்தும் அசத்துகிறார்.. அதன் பின்னர் வரும் இன்றைய காட்சிகளில்தான் நம்மை சோதித்து விடுகிறார் ஜெய் ஆகாஷ்..

முன்பே எடுக்கப்பட்ட படத்தை இன்றைய இவரின் தோற்றத்திற்கு ஏற்ப ஒட்ட வைத்து விட்டாரோ.? அது வேறுபடமா இது வேறுபடமா? என்று குழப்பு விட்டார்.. இவரே தயாரிப்பாளர் & நாயகன் & இயக்குனர் என்பதால் இந்த சதி செய்து விட்டாரோ.?

கிட்டத்தட்ட நான்கைந்து கெட்டப்புகளில் வருகிறார்.. அடிக்கடி இவரது முகம் இவரது கண்கள் (க்ளோசப் ஷாட் ) ஜெயம் ரவியை நினைவுப்படுத்துகிறது..

படம் முடிந்துவிட்டது என்று நினைத்து சீட்டை விட்டு எழுந்திருக்கும் போது.. அந்த மாமரக் கதை ஓடுகிறது.. அதன் பின்னர் அதில் ஒரு கிளை கதையாக 20 நிமிடங்களை ஓட்டிவிட்டார் இயக்குனர் ஜெய் ஆகாஷ்..

 

Jai Akash in Maamaram movie review