பிரஜின் நடித்த அந்தரன் (HUNTER) விமர்சனம்

பிரஜின் நடித்த அந்தரன் (HUNTER) விமர்சனம்

 

பிரஜின் நடித்த அந்தரன் (HUNTER) விமர்சனம்

 

ஸ்டோரி…

நாயகி இவானா வருண்.. இவர் ஆட்டோ டிரைவரை காதலிக்கிறார்.. இவரது காதலுக்கு அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. அதன் பின்னர் ஓகே சொல்கிறார்.. ஆனாலும் காதலன் ஒருவரால் செய்ய கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்..

இதனால் காதலன் நினைவாகவே இருக்கிறார் நாயகி இவானா…. நீ இப்படியே இருந்தால் என்ன செய்வது மனம் மாறி திருமணம் செய்து கொள் என்கின்றனர் பெற்றோர்.. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரிந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள ரெடி ஆகிறார். இவானா ஆனால் அவரும் சில மணி நேரங்களில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்..

அதன் பின்னர் வேறு ஒரு உறவினர் பையனை பார்த்து வைத்தாலும் அவரும் தற்கொலை செய்து கொள்கிறார்.. இந்த வித்தியாசமான கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் நாயகன் பிரஜின்.

இந்த பெண்ணை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்ய ஆசைப்பட்டாலோ அவர்கள் கொல்லப்படுவதன் காரணம் என்ன? அவர்களை கொன்றவர் யார்.? அவர்களின் நோக்கம் என்ன.? இதன் பின்னணியில் நடப்பது என்ன? என்பதெல்லாம் சுவாரசியமான ஒரு க்ரைம் திர்ல்லர் பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் இராவணன்…

கேரக்டர்ஸ்…

அந்தரன்’ படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்..

நாயகி மையப்படுத்திய படம் முழுவதும் நகர்த்தியுள்ளனர்.. அதற்கு ஏற்றவாறு அழகான நடிப்பாலும் கண்களாலும் நம்மை காந்தமாய் ஈர்த்து விடுகிறார் நாயகி இவானா.. (லவ் டுடே நாயகி அல்ல புதுவரவு..) இந்த அழகான பெண்ணுக்கு ஆசைப்பட்டால் தப்பே இல்லை என்கிற கொள்ளை அழகில் கவர்கிறார்.. வசனங்களை சொல்லும்போது ஏதோ மனப்பாடம் செய்து பேசுவது போல சொல்கிறார்.. அதை கொஞ்சம் இயக்குனர் கவனித்திருக்கலாம்.. (காரணம் தமிழ் தெரியாத நாயகி இவர்.)

அலட்டிக் கொள்ளாத கம்பீர போலீஸ் கதாபாத்திரத்தில் பிரஜின்… ஒரு கட்டத்தில் இவரே இவானா மீது காதல் கொள்கிறார்.. உன்னை காதலித்தால் தானே கொலை செய்வார்கள்.. நான் கட்டிக் கொள்கிறேன் என துணிச்சல் முடிவை எடுக்கிறார்..

இவருக்கு கொஞ்சம் ஆக்ஷன் கொடுத்திருக்கலாம்.. விசாரணை என்ற பெயரில் டயலாக்குகளை பக்கம் பக்கமாக பேசுகிறார்..

டாக்டர் அனுபமா உள்ளிட்ட பல கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியாய் இருந்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்..

படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணிகளில் கச்சிதம்..

பரபரப்பான கிரைம் திரில்லராக தயாரான இப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்..

ஒரே உருவம் பல பரிமாணங்கள்.. அதாவது மல்டி பர்சனாலிட்டி.. ஒரே உருவத்தில் பல ரூபங்கள் வந்து செல்லும் உதாரணத்திற்கு அந்நியன் படத்தில் அம்பி – ரெமோ கேரக்டர்களில் வந்து செல்வார் விக்ரம்.. இதை வைத்து வித்தியாசமான பாணியில் கதை சொல்லி ரசிகர்களுக்கு அந்திரன் படத்தை இன்ப அதிர்ச்சியாக கொடுத்துள்ளார் இயக்குனர்..

கொலையாளி யார் கொலையாளி யார் என்ற தேடல் படம் முழுவதும் இருந்தாலும் வித்தியாசமான கிளைமாக்ஸ் கொடுத்து கொடுத்துள்ளார் சந்தோஷ் இராவணன்.. அதற்கு வித்தியாசமான பிளாஷ்பேக் காட்சிகளும் கொடுத்து கதையுடன் கனெக்ட் செய்து இருக்கிறார் இயக்குனர்…

 

Andharan movie review