இளையராஜா குடும்பத்திலிருந்து ஹீரோ..; யுவன் இசையில் வெங்கட் பிரபு கதையில் Rajas Play List

இளையராஜா குடும்பத்திலிருந்து ஹீரோ..; யுவன் இசையில் வெங்கட் பிரபு கதையில் Rajas Play List

இளையராஜா குடும்பத்திலிருந்து ஹீரோ..; யுவன் இசையில் வெங்கட் பிரபு கதையில் Rajas Play List

 

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்

 

*எலிபென்டைன் எக்ஸ் தயாரிப்பில் ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’ என தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது.*

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான *ஆர்.டி.பாஸ்கர்* அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான *ஜெயன்* தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் (Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது..

 

குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்..

தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் *”என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன்”* என்று *ரமணன் பாலகங்காதரன்* அவர்கள் முன்வந்தார்.

தன்‌ தம்பிக்காக இயக்குனர் *வெங்கட் பிரபு*, *”நான் கதை தருகிறேன்”* என்றும், *யுவன் சங்கர் ராஜா* *”நான் இசை அமைக்கிறேன்”* என்றும், இயக்குனர் *சுதா கொங்கரா* *”நான் கிரியேட்டிவ் புரொடியூசராக (Creative Producer) இருக்கிறேன்”* என்றும் தாங்களாகவே முன்வந்து இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்..

முன்னணி திரைப் பிரபலங்கள் அனைவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பிற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரப் பட்டாளமும், பிரம்மாண்ட கூட்டணியும்..

இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் *ஜெயனுடன்* இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..

 

*தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன்* அவர்களின் கூற்று (Producer’s Quote):

“ஜெயனைத் திரையுலகில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான மற்றும் புதிய வடிவிலான மியூசிக்கல் சப்ஜெக்ட் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டன..

அந்த குறையைப் போக்கும் ஒரு சிறந்த படைப்பாக ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ இருக்கும். வெங்கட் பிரபு சாரின் தனித்துவமான கதை, யுவன் சாரின் மேஜிக்கல் இசை மற்றும் சுதா கொங்கரா மேமின் கிரியேட்டிவ் பங்களிப்பு என அனைத்தும் இணைந்து இந்தத் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. உணர்வுப்பூர்வமான காட்சிகளும், பிரம்மாண்டமான இசையும் கலந்த ஒரு தரமான சினிமா அனுபவத்தை எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் வழங்கும்.”

 

மேலும், இப்படத்திற்கு *வெங்கட் பிரபு* கதையெழுத, *யுவன் சங்கர் ராஜா* இசையமைக்கிறார். *சுதா கொங்கரா* கிரியேட்டிவ் புரொடியூசராகப் பொறுப்பேற்றுள்ள இத்திரைப்படத்தை “குடும்பஸ்தன்” படத்தின் ஒளிப்பதிவாளர் *சுஜித் என் சுப்ரமணியம்* இயக்குநராக அறிமுகமாகிறார்..

 

இசை, நட்பு, திறமை என அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவாகும் இந்தத் திரைப்படம் ஜெயனின் திரையுலகப் பயணத்திற்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..

 

திரைப்படக் குழுவினர் விவரம் (CAST AND CREW DETAILS)

முதன்மை நடிகர்கள் (Lead Artistes):

*ஜெயன்*(Jaiyan – அறிமுகம்)

*சோனா ஒலிக்கல்* (Sona Olickal)

*வாகை சந்திரசேகர்* (Vagai Chandrasekhar)

*குரு சோமசுந்தரம்* (Guru Somasundharam)

*ரோஜு* (Roju)

*பிபியன்*(Bibian)

*ஆர்யா லட்சுமி* (Aarya Lakshmi)

பிரகதீஸ்வரன் பூபாலம் (Pragadeeshwaran poobalam)

இந்துமதி (Indhumathy)

ரேஷ்மி (Reshmi)

ரஞ்சித் (Rajinth)

ராம்குமார் (Ramkumar)

மீனா (Meena)

திலகவதி (Thilagavathi)

 

தொழில்நுட்பக் கலைஞர்கள் (CREW DETAILS):

*தயாரிப்பு:* ரமணன் பாலகங்காதரன் (Ramanan
Balagangatharan)

*தயாரிப்பு நிறுவனம்:* எலிபென்டைன் எக்ஸ் (Elephantine X)

*கதை:* வெங்கட் பிரபு (Venkat Prabhu)

*இசை:* யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja)

*கிரியேட்டிவ் புரொடியூசர்:* சுதா கொங்கரா (Sudha Kongara)

*திரைக்கதை & இயக்கம்:* சுஜித் என் சுப்ரமணியம் (Sujith N Subramaniam)

*ஒளிப்பதிவு (Cinematographer):* சாய் முனீஷ் (Sai Munish)

*படத்தொகுப்பு (Editor):* ஸ்ரீ வாட்சன் (Sri Watson)

*கலை இயக்கம் (Art Director):* ஷனு முரளிதரன் (Shanoo Muralidharan)

*ஆடை வடிவமைப்பு (Costume Designer):* பூர்ணிமா ராமசாமி
(Poornima Ramaswamy)

*சண்டைப் பயிற்சி (Stunt):* பிசி ஸ்டண்ட்ஸ் (Pc Stunts)

*ஒலி வடிவமைப்பு (Sound Designer):*
ஆண்டனி பி ஜெயரூபன் (Anthony B Jayaruban)

*விஎஃப்எக்ஸ் (VFX Supervisor):* செந்தில் குமார் (Senthil Kumar)

*நிர்வாக தயாரிப்பு (Executive Producer):* உத்ரா மீனாட்சி (Uttra Meenakshi)

*மக்கள் தொடர்பு (PRO):* ரேகா – ரான் டி ஆர்ட் (Rekha – Raan T Art)

*விளம்பர வடிவமைப்பு (Publicity Design):* வியாக்கி (Viyaki)

 

Jayan debut movie Rajas Play List Yuvan music

 


 

 

Presenting the title look poster of #RajasPlaylist

The first production from #ElephantineX

Every playlist tells a story. This is ours.

🔗https://youtu.be/eZ8Cgvtzt8s

@Ramanan_Ba #Jaiyan #SaiMunish @thisisysr
@sujithnofficial @olickalsona @Elephantinex @DirSat06 @editorsriwat #SaiMunish @sudha_kongara @vp_offl @U1Records @ProRekha @riseandroar_inc

#RajasPlaylist #ElephantineX #TitleReveal #NewBeginnings