அங்கீகாரம் விமர்சனம்.. 4.25/5… இந்திய அரசை ஓட விட்ட ஒடுக்கப்பட்ட (ஓட்டப்)பந்தய வீரன்
அங்கீகாரம் விமர்சனம்.. 4.25/5… இந்திய அரசை ஓட விட்ட ஒடுக்கப்பட்ட (ஓட்டப்)பந்தய வீரன்
ஸ்டோரி…
தூய்மை பணியாளர் ரமா (பானுமதி)… கணவனை இழந்த இவருக்கு ஒரு மகன் – ஒரு மகள்.. பல தலைமுறைகளாக தூய்மை பணி செய்து வரும் தாய்… தன் மகனுக்கு எப்போதும் நல்வழியை காட்டுகிறார்.. உன்னால் மட்டும் தான் நம் தலைமுறை மாற்ற முடியும்.. நீ மாற்றினால் அடுத்த தலைமுறைகள் அடுத்த நிலையை அடைய முடியும் உயர முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மகனை மகளை வளர்த்து வருகிறார்..
அதன்படி ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்ட நாயகன் கே ஜே ராஜேஷ்.. KJR.. ஓடி நேஷனல் லெவலில் சாதனை புரிகிறார் ஒரு கட்டத்தில் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இருக்கும் சூழ்நிலையில் இவருக்கு காலில் அடிபட்டு விடுகிறது.. இதனால் இவரை நிராகரித்து விடுகின்றனர்..
ஆனாலும் தன்னால் முடியும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சி கேட்கிறார்.. பல அதிகார திமிர் பிடித்தவர்கள் இவரை நிராகரித்து விடுகின்றனர்.. பாலியல் இச்சைக்காக பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர் ஆனாலும் சில வீராங்கனை பெண்கள் இவர்களை நிராகரிக்கின்றனர்..
ஒரு கட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சந்தித்து மனுவும் கொடுக்கிறார்… ஆனாலும் அமைச்சர் இவரை மதிக்கவில்லை..
எனவே ஒரு கட்டத்தில் காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தக்கூடாது என மத்திய அரசுக்கு தடை விதிக்க வழக்கு போடுகிறார் நாயகன் கே ஜே ஆர்.
ஒரு மத்திய அரசை ஒரு சாமானியன் எதிர்கொள்ள முடிந்ததா.? நீதிமன்றம் தீர்ப்பு எப்படி இருந்தது? இதனால் இவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன? என்பதெல்லாம் அதிர வைக்கும் அதிரடியான கோர்ட்டு டிராமா…

கேரக்டர்ஸ்….
‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் நாயகனாக அறிமுகமாகிறார்.. ஒரு தயாரிப்பாளர் நடிகராக அறிமுகம் ஆகிறார் என்றால் ஏதோ வெறுமனே வந்து செல்வார்.
ஆனால் முழுக்க முழுக்க தன்னை ஒரு நாயகனாக மெருகேற்றி அதற்காக அர்ப்பணிப்புடன் தன்னை செதுக்கியிருக்கிறார் இந்த கே.ஜே.ஆர்.. தனக்காக வாதாட எந்த வக்கீலும் இல்லாத நிலையில் இவரை வசனங்களை பேசி கோர்ட்டை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர வைக்கிறார்.. யாரு சாமி இவன் என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்ல..
காலில் இருக்கும் நரம்பு கூட விளையாட்டு வீரனின் வலியை உணர்த்தும் நடித்திருக்கிறது என கே.ஜெ.ராஜேஷின் கால் நரம்பு கூட சொல்கிறது..
இவரின் பயிற்சியாளராக வசுந்தரா தன் முழு அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார்.. மற்றொரு பயிற்சியாளராக நடன இயக்குனர் ராம்ஜி நடித்த அசால்டாக நடித்திருக்கிறார்..
மேலும், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..
பெண் வக்கீலாக நடித்துள்ளவர் விஜி சக்கை போடு போட்டிருக்கிறார்.. அடடா இப்படி ஒரு வக்கீல் நம்ம பிரச்சனைக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’…
ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்களின் வலியை இசை மூலம் சொல்லி இருக்கிறார். அவர்களின் வலிக்கு உணர்வு கொடுத்து நம்மில் அதை கடத்தி இருக்கிறார்.. எனவே நம்மாலும் அந்த வலியை உணர முடியும்..
விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. கூவம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் போலீஸ் செல்லும் போது எப்படி தான் இங்க வாழ்றாங்களோ என சொல்லும்போது அந்த மக்களின் வாழ்க்கையை சொல்லும் காட்சியாக அமைந்துள்ளது.. அந்தக் குழுவிலான இடங்களில் தன் கேமராவை நுழைத்து காட்சியை ரம்யமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்..
இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜே.பி. தென்பாதியான்..
ஓட்டப்பந்தய அத்தலெடிக்ஸ் தடகள வீரர்களின் வலி வாழ்க்கையில் முன்னேற அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.. வாழ்வியல் சவால்கள் மற்றும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்..
இடைவேளைக்கு முன்பு வரை ஓட்டப்பந்தயமாக இருந்த காட்சிகள் அதன் பின்னர் கோர்ட்டில் வரும்போது ஓட்டப்பந்தயத்தை விட அதிக வேகம் எடுத்து நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து ஒவ்வொரு வசனங்களையும் ரசித்து நம்மை அறியாமல் கைதட்ட வைக்கிறது..
படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத முடிவாக இருந்தாலும் அதிகார வர்க்கத்தை ஒடுக்க வீரர்கள் புரட்சி உருவாக வேண்டும் என எதார்த்த நிலவரத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தென்பாதியான்.
Angikaaram movie review

