மாண்புமிகு பறை விமர்சனம்…

மாண்புமிகு பறை விமர்சனம்…

 

மாண்புமிகு பறை விமர்சனம்…

 

பறை இசை தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று.. உன்னதமான இசையை கௌரவிக்கும் வகையில் மாண்புமிகு பறை என தலைப்பு வைத்துள்ளனர்..

 

ஸ்டோரி..

லியோ சிவகுமார் & ஆர்யன் இருவரும் பறை இசை கலைஞர்கள்.. பறை இசை என்பது மரணத்திற்கு என அடையாளப்படுத்தப்பட்டாலும் இவர்கள் சாவுக்கும் சாமிக்கும் இசை வாசிக்க மாட்டார்கள் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள்..

மேலும் இந்தப் பறை இசை கலையை வளர்க்க இவர்கள் ஊர் ஊராக சென்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர்.. ஆனால் உயர் சாதியை சேர்த்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாய் இருப்பதால் இவர்களை பிரிக்க முயற்சி செய்கின்றனர்..

இந்த சூழலில் ஒரு நாள் ஆரியனை கடத்தி விடுகின்றனர்.. இதனால் ஜியோ சிவகுமார் செய்வது தெரியாமல் திணறுகிறார்.. நண்பனை பிரிந்த லியோ என்ன செய்தார்.? கடத்தியது யார்..? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் தான் இந்த லியோ சிவகுமார்.. கதையின் நாயகன்.. கொடுத்த பாத்திரத்தில் வெற்றிக்கொடி நட்டு இருக்கிறார்.. பறை இசைக்காக இவர் பேசும் வசனங்கள் அந்த இசையைப் போல ஓங்கி ஒலித்து இருக்கிறது..

லியோ-வுக்கு நிகரான வேடத்தில் ஆரியன் கலக்கியிருக்கிறார்.. ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. இவருக்கும் ஒரு ஜோடி கொடுத்திருக்கலாம்..

நாயகியாக காயத்ரி ரெமா.. காதல் காட்சியில் வலு வில்லை. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் காயத்ரி கலக்கல் தெறியாக மாறி இருக்கிறார்..

இவர்களுடன் கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோரும் உண்டு.. இன்னும் பல கிராமங்களில் சாதி தீண்டாமை இருப்பதை இவர்களின் கேரக்டர்கள் பிரதிபலிக்கிறது..

டெக்னீசியன்ஸ்…

தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் ஒவ்வொரு பாட்டும் தேன் இசை தான்.. பறை இசையில் பட்டைய கிளப்பியிருக்கிறார்..

ஆர்.கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள்அழகு..

சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு..

 

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.விஜய் சுகுமார், பறை இசையின் பெருமையையும், அந்த இசைக் கருவியை வாசிப்பவர்கள்

 

Maanbumigu Parai movie review