மகாசேனா விமர்சனம்… யானைக்கும் அடி சறுக்கும்
மகாசேனா விமர்சனம்… யானைக்கும் அடி சறுக்கும்
ஸ்டோரி..
சேனா என்ற யானை வளர்த்து வருகிறார் பழங்குடியினர் மக்களில் ஒருவரான விமல்.. இவரின் மனைவி சிருஷ்டி டாங்கே.. இதனிடையில் மதம் பிடித்த யானை மகளை தாக்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்று விடுகிறது.. இதனை தேடி விமல் குழுவினர் அலைகின்றனர்..
இது ஒரு புறம் இருக்க வனத்துறை அதிகாரி ஜான்விஜய் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு சிலையை திருட முயல்கிறார்.. இதற்காக வில்லன் கபீர் உடன் கூட்டணி அமைக்கிறார்..
மற்றொரு பக்கம் காட்டுப் பகுதியில் வந்த சில இளைஞர்கள் பெண்கள் காட்டுப் பகுதியில் வழி தவறி யோகிபாபு உடன் சிக்கிக் கொண்டு பரிதவிக்கின்றனர்..
இறுதியில் என்ன நடந்தது.? வழித்தவறிய இளைஞர்களுக்கு வழி கிடைத்ததா.? சாமி சிலை திருடப்பட்டதா.? சேனா என்ற யானை கிடைத்ததா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
வித்தியாசமான கதை களத்தில் விமல்.. ஆனால் அதில் மெனக்கெட்டு இருக்கலாம்.. விமலின் தங்கையை ஒருவர் கொல்லும்போது எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அவர் இருப்பது நமக்கே எரிச்சல் வருகிறது..
நாயகியாக சிருஷ்டி டாங்கே.. அழகாக வருகிறார் அளவான நடிப்பில்..
யோகி பாபு & ஜான்விஜய் இருவரும் கிடைத்த கேப்பில் எல்லாம் வசனங்கள் பேசியே ஆக வேண்டும் என ஏதேதோ பேசுகிறார்கள்.. இதில் எக்ஸ்ட்ரா வில்லத்தனம் சிரிப்பு வேற..
வில்லனாக கபிர் சிங்.. பல படங்களில் வில்லனாக மிரட்டிய கபீருக்கு இதில் வேலையில்லை..
கங்காவாக மஹிமா குப்தா, இடும்பன் ஆக விஜய் சேயோன், பேராசிரியராக அல்ஃப்ரெட் ஜோஸ், சிவகிருஷ்ணா, சுபாங்கி ஜா, விமலின் மகளாக இலக்கியா ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர்.. மகாசேனா & கோயில் திருவிழா உணர்வுப்பூர்வமான பெருவிழா..
இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமார்.. – பாடல்கள் ரசிக்கும் ரகமே.. உதய் பிரகாஷ் பின்னணி உயிரோட்டம்..
மூன்று விதமான கிளைக் கதைகளை இயக்குனருக்கு ஏற்ப தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்.. கிளைமாக்ஸ் காட்சியில் விமலுக்கு பெரிய எக்ஸ்பிரஷன் எதுவும் இல்லை.. அது இயக்குனர் வேண்டுகோளா அல்லது எடிட்டர் கைவண்ணமா என்று தெரியவில்லை.. விமல் ஏதாவது பேசுவார் என ரசிகர்கள் காத்திருந்தால் அது ஏமாற்றமே..

இயக்குனர் – தினேஷ் கலைச்செல்வன்.. மகசேனா – யானை பற்றிய கதை.. அது அது காணாமல் போன கதை.. சுற்றுலா வந்தவர்கள் தொலைந்த கதை.. யோகி பாபுவின் நகைச்சுவை இப்படியாக நாம் எண்ணிக் கொண்டே இருக்கையில் திடீரென கதைகளும் வேறு ரூட்டில் பயணிக்கிறது.. ஆனால் அதற்கும் தெளிவான முடிவில்லாமல் முடிகிறது..
கோயில் சாமி சிலை மூன்று முறை திருடப்பட்டு இருக்கிறது.. ஆனால் ஒவ்வொரு முறையும் மரணம் நிகழ்ந்திருக்கிறது என விமல் சொல்கிறார்.. அப்படி என்றால் அதை அடுத்தவர்கள் எப்படி திருட நினைப்பார்கள் என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லை.. விமலுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் யாருக்கும் தெரியாதா என்ன.??
மலைவாழ் மக்களின் கதையாக இருந்தால் அதில் விமல் மற்றும் ஸ்ருட்டி இருவரும் தனித்து தெரிகின்றனர்.. அந்தப் பகுதி மக்களிடம் இவர்களின் பேச்சும் நிறமும் ஒன்றிணைய மறுக்கிறது
பல மொழிகளில் வெளியிட நினைத்து பிரம்மாண்டமாக எடுக்க நினைத்து திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார் இயக்குனர் தினேஷ்..
Mahasenha movie review

