சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம்… சட்டத்திற்கு 100 சாட்சி… நீதிக்கு மனசாட்சி.!
சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம்… சட்டத்திற்கு 100 சாட்சி… நீதிக்கு மனசாட்சி.!
ஸ்டோரி…
காவலர்கள் வைத்த ஒரு விருந்தில் போலீஸ்கார் இன்ஸ்பெக்டர் பிரேம் சுட்டுக் கொல்லப்படுகிறார்… அவர் குடும்ப பிரச்சனையால்தற்கொலை செய்து கொண்டார் என அவருடன் உடன் இருந்த நான்கு காவலர்கள் சொல்கின்றனர்..
ஆனால் அந்த நான்கு காவலர்கள் தான் தன் கணவரின் கொலைக்கு காரணம் என வாதிடுகிறார் வக்கீல் வரலட்சுமி..
இந்த நிலையில் வக்கீல் சரவணன் சந்திக்கும் நான்கு காவலர்களின் மனைவிகள் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.. பிரேம் தற்கொலை தான் செய்து கொண்டார் என்கின்றனர்.. எனவே அதன்படி வழக்கை விசாரித்து நீதிமன்றத்தில் வாதாடுகிறார் சரவணன்..
பிரேம் தற்கொலை செய்து கொண்டாரா சுட்டுக் கொல்லப்பட்டாரா.? தற்கொலை செய்து கொண்டார் என வாதாடும் சரவணன் ஜெயித்தாரா.? நான்கு காவலர்கள் தான் தன் கணவரை சுட்டுக் கொன்றனர் என்று வாதாடும் வரலட்சுமி வெற்றி பெற்றாரா.? என்பதெல்லாம் அதிரடியான வழக்கின் இறுதி தீர்ப்பு…

கேரக்டர்ஸ்…
ஒரு எளிமையான திறமையான ஒரு வழக்கறிஞரை நேரில் பார்த்த உணர்வை தன் நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார் சித்தப்பு சரவணன்.. நீதிமன்றத்தில் நீதிக்காக அவர் வாதாடும் ஒவ்வொரு குறிப்பும்.. அவரின் உடல் மொழியும் சிறப்பு சேர்க்கின்றன.. (இந்த நீளமான வசனங்களை சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு பிராம்ட் செய்த சினேகாவை அவர் நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது..)
பொதுவாகவே வரலட்சுமி வேகத்தில் பேசும் கேரக்டர்.. ஆனால் இதில் நிறுத்தி நிதானமாக தன்னுடைய குறிப்புகளை அவர் வைத்து வாதாடும்போது வரலட்சுமிக்கு பாராட்டுகள் குவியும்..
வரலட்சுமி கணவராக பிரேம்குமார், சரவணனின் ஜூனியராக லாவண்யா, குற்றவாளி போலீஸ்காரர்களாக கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட அனைவரும் தங்களது கேரக்டர்களில் குற்றவாளி காவலர்களின் குற்ற உணர்வை காட்டி இருக்கின்றனர்..
அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் கல்லூரி வினோத்தின் நடிப்பு எதிர்பாராத ட்விஸ்ட்…

டெக்னீசியன்ஸ்…
கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. பெரும்பாலும் கோர்ட்டு காட்சிகள் என்றாலும் அதற்கு கலை இயக்குனரின் கைவண்ணம் சிறப்பு…
விபின் பாஸ்கர் இசையமைத்திருக்கிறார் பின்னணி இசை படத்தின் கோர்ட்டு காட்சிகளுக்கு வேகத்திற்கு ஈடு கொடுத்துள்ளது… கிளைமாக்ஸ் காட்சியில் மோகன் ராஜா எழுதிய பாடல் வரிகள் சிறப்பு. அதிலும் சட்டத்திற்கு 100 சாட்சிகள் தேவை… ஆனால் நீதிக்கு மனசாட்சி ஒன்று போதும் என்ற வரிகள் நீதிமன்றத்திற்கு தேவையான நீதியாகும்..
பாலாஜி செல்வராஜ் என்பவர் இயக்கி இருக்கிறார்.. சட்டமும் நீதியும் முதல் பாகம் சிறப்பாக அமைந்திருந்தது.. இதில் அதைவிட விவேகமாக அமைந்துள்ளது… மூன்றாம் பாகத்திற்கான தொடக்கத்தையும் இதன் கிளைமாக்ஸ் இல் வைத்து அடுத்த பாதத்தை விரைவில் எதிர்பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறார்…
போலீசை கொன்றது யார்.? அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று பரபரப்பான பதைப்பதைக்கும் காட்சிகளை ஒவ்வொரு எபிசோடிலும் கொடுத்து ஏழு எபிசோடுகளையும் எகிற வைத்து விட்டார் டைரக்டர் பாலாஜி செல்வராஜ்..
Zee5 Sattamum Needhiyum 2 web series review

