418 (கன்னடம்) திரை விமர்சனம்

418 (கன்னடம்) திரை விமர்சனம்

 

418 (கன்னடம்) திரை விமர்சனம்

 

ஸ்டோரி…

பெரும்பாலும் இன்றைய காலகட்டத்தில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுப் பகுதியில் தான் அமைக்கப்பட்டுள்ளது..

அதுபோல இதிலும் ஊருக்கு தொடர்பு இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் படிக்கின்றனர் முதலாம் ஆண்டு மாணவர்கள் சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி..

அந்த விடுதியில் இவர்களுக்கு அறை எண் 417.. இந்த அறை அவர்களுக்கு ஒதுக்கபடும்போது அடுத்த அறை 418 ஐ எக்காரணத்தைக் கொண்டு திறக்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்..

இந்த விடுதி வளாகத்தில் எக்காரணத்தைக் கொண்டும் எந்த வயது பெண்கள் இருந்தாலும்… (அன்னையாக இருந்தாலும்) அனுமதியில்லை என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்..

அப்போது… அங்கு எவருக்கும் தெரியாமல் ஒரு சூட்கேஸில் மறைத்து வைத்து தனது தோழியை ஒரு மாணவர் அழைத்து வந்து விடுகிறார்.. அன்று முதல் அவர்களுக்கு பிரச்சனை வருகிறது… அப்படி என்னதான் நடந்தது.? ஏன் பெண்கள் அந்த விடுதி வளாகத்திற்கு வரக்கூடாது? வந்தால் என்னவாகும்? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

கல்லூரி மாணவர்களாக சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி, ஸ்ரீ வைஷ்ணவ், சஷாங் பாட்டில் ஆகியோர் அந்தந்த கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளனர்… அமானுஷ்யத்திற்கு பயந்து பயந்து தனது பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு இருக்கும் ஒரு மாணவனை பிரதிபலிக்கிறார் சூரியராஜ்….

கொரோனா நோயாளியாக.. மாணவர்களின் தோழியாக ப்ரீத்தி பகடலா… கவர்ச்சி உடையில் கவர்கிறார்..

தேவிகா கதாபாத்திரத்தில் சைத்ரா ஆச்சர்.. பார்வையிலும் நடிப்பிலும் ஆச்சரியப்பட வைக்கிறார்.. அவரின் தாலாட்டு பாடல் கூட அச்சத்தை உண்டாக்கும்…

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன்.. அந்த விடுதியை இவர் காட்டும் வித கூட பயத்தை உண்டாக்கும்…

இசையமைப்பாளர் வெங்கி.ஜி.ஜி, சலங்கை.. பின்னணி இசையில் மிரள வைக்கிறார்..

இயக்குநர் கிருத்தன் நடகவுடா.. கொரோனா லாக் டவுன் முடியும் தருவாயில் படத்தின் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.. வழக்கமான பேய் படங்களில் பேய் பங்களா காட்டப்படும்… ஆனால் இதில் மாணவர் விடுதியை வைத்து மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது…

KGF படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த படத்தை வழங்கி இருக்கிறார்,. கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்..

 

418 Kannada movie review in Tamil