Yellow விமர்சனம்… எல்லை தாண்டி என்னைத் தேடி ஒரு பயணம்
Yellow விமர்சனம்… எல்லைத் தாண்டி என்னைத் தேடி ஒரு பயணம்
ஸ்டோரி…
காதல் தோல்வியால் மனம் உடைந்த நாயகி பூர்ணிமா ரவி நிம்மதியின்றி தவிக்கிறார்.. தன் பழைய நண்பர்களை சந்தித்தால் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களை தேடி செல்கிறார்..
ஒவ்வொருவரும் வேலை குடும்பம் காரணமாக எங்கெங்கோ தொலைந்து இருக்க அவர்களைத் தேடி இவரின் பயணம் தொடர்கிறது.. இந்த தேடலில் நாயகிக்கு கரம் கொடுக்கிறார் நாயகன் வைபவ் முருகேசன்,
இவர்களின் தேடல் மனநிறைவு பெற்றதா.? தேடியவர்கள் கிடைத்தார்களா.? இவர்களின் பயணம் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
யூடியூபில் பிரபலமான பூர்ணிமா இந்த படத்தின் மூலம் கதை நாயகியாக மாறி இருக்கிறார்.. இவரை சுற்றியே முதல் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது பூர்ணிமாவுக்கு கிடைத்த பூர்வ புண்ணியம் என்றே சொல்லலாம்.. அதை உணர்ந்து அவரும் யதார்த்த நடிப்பில் கவர்கிறார்.. ஆனால் ஒரு சில இடங்களில் ஓவர் மேக்கப் சில இடங்களில் மேக்கப் இல்லாதது குறையே..
திடீர் தோழனாக வைபவ் முருகேசன்.. பக்கத்து வீட்டுப் பையன் போல பக்காவாக பொருந்தி இருக்கிறார்.. சாய் பாத்திரத்திற்கு சரியான தேர்வே..
இவர்களுடன் சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் உண்டு..
இயக்குனர் பிரபு சாலமன் இந்த வேடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரோ என தெரியவில்லை.. அவரின் கேரக்டர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..

டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் இனிமை..
மனசே நலம்தானே… மனசே சுகம் தானே…
கண்மணியே கண் அழகே.. வந்திடவா உன் அருகே… உள்ளிட்ட பாடலும் வரிகளும் காதலர்களுக்கு பிடித்த வரிகளாக அமைந்திருக்கிறது..
ரயிலில் பயணித்துக் கொண்டு இயற்கை ரசிப்பது அழகோ அழகு.. அதை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
மேலும் ட்ரெக்கிங்.. அருவி.. வானவில் என இயற்கையோடு பேசும் இதமான அனுபவத்தை ஒளிப்பதிவில் கொடுத்திருக்கிறார் அபி ஆத்விக்..
ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை இயற்கையோடு நம்மை இணைத்து பயணிக்க செய்துள்ளது..

பெரும்பாலும் வசனங்கள் பேசும் பாணி மணிரத்னம் & கவுதம் மேனன் படங்களை நினைவுப்படுத்துகிறது.. அதற்கு ஏற்றார் போல் படத்தொகுப்பு செய்திருக்கிறார் ஸ்ரீ வத்சன்..
தெளிவான திரைக்கதை.. எளிமையான வசனங்கள்.. எதார்த்தமான பாத்திரப்படைப்பு என நம்மை இயற்கையோடு ஒன்றை வைத்து கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன்..
Yellow movie review

