தீயவர் குலை நடுங்க விமர்சனம் 3.75/5… கடுமையான தண்டனைகள் மட்டுமே குற்றங்களை குறைக்கும்..

தீயவர் குலை நடுங்க விமர்சனம் 3.75/5… கடுமையான தண்டனைகள் மட்டுமே குற்றங்களை குறைக்கும்..

தீயவர் குலை நடுங்க விமர்சனம் 3.75/5… கடுமையான தண்டனைகள் மட்டுமே குற்றங்களை குறைக்கும்..

 

ஸ்டோரி…

சென்னை சிட்டியில் அடுத்தடுத்து கொலைகளை ஒரு மர்ம நபர் செய்கிறார்.. இதனை விசாரிக்க இறங்குகிறார் போலீஸ் அர்ஜுன்.. இவருக்கு உதவியாளர் தங்கதுரை..

ஒரு கட்டத்தில் ஒருவர் எழுதிய சிறுகதைக்கும் பிரபலமான ஈகிள் டவர் என்ற அப்பார்ட்மென்ட்க்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்கிறார் அர்ஜுன்.. இது பற்றிய விசாரணை இறங்குகிறார்..

அப்போதுதான் அங்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நாயகன் உள்ளிட்ட ஒரு சிலருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்கிறார்..

அதன் பிறகு அர்ஜுனின் அதிரடி திட்டங்கள் என்ன.? இதற்கும் ஐஸ்வர்யாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் தீயவர் குலை நடுங்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன்..

கேரக்டர்ஸ்…

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், வேல.ராமமூர்த்தி, லோகு, அபிராமி

காக்கி உடை அணியாமல் கலர்ஃபுல் உடையில் கம்பீரமாக வருகிறார் அர்ஜுன்.. லிப்டில் போடும் ஃபைட் தெறி ரகம்..

சாந்தமான ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் சரவெடியாக மாறி இருக்கிறார்.. மார்ஷியல் ஆர்ட் பயின்ற இவரின் ஆக்சன் அனல்..

ஸ்பெஷல் குழந்தை அனிகாவின் நடிப்பு சிறப்பு.. நடிப்பில் நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..

ஆதரவு கேரக்டரில் வரும் வேல.ராமமூர்த்தியும் கவனிக்க நிறைகிறார்.. நல்லவேளை இவருக்கு வழக்கமான பாத்திரம் இல்லை.. மாறாக அந்த வேடம் ராம்குமார் கணேசனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது..

விஷால் அப்பா ஜி.கே.ரெட்டி வந்து போகிறார்… ஐஸ்வர்யா காதலன் பிரவீனுக்கு ட்விஸ்ட் கேரக்டர்..

எழுத்தாளராக லோகு, போலீஸ் ஆக தங்கதுரை, குழந்தையின் அம்மா அபிராமி, குழந்தையை கவனிக்கும் பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோரின் பாத்திரங்கள் படத்திற்கு பலம்…

டெக்னீசியன்ஸ்…

இசை : பரத் ஆசீவகன்
ஒளிப்பதிவு : சரவணன் அபிமன்யு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தியாக அமைந்துள்ளது..

தயாரிப்பு : ஜி.எஸ்.ஆர்ட்ஸ்
இயக்கம் : தினேஷ் லட்சுமணன்

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள்.. கயவர்களின் கல்நெஞ்சம் ஆகியவற்றை தீயவர்கள் குலை நடுங்க திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன்..

அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை வெளியே பாதுகாப்பாக காணப்பட்டாலும் அதன் உள்ளே இருக்கும் ஆபத்துகளை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன்..

 

Theeyavar Kulai Nadunga movie review