மிடில் கிளாஸ் விமர்சனம்.. 3.5/5.. பணம் பகிர்ந்தால் பன்மடங்கு சந்தோஷம்
மிடில் கிளாஸ் விமர்சனம்.. 3.5/5.. பணம் பகிர்ந்தால் பன்மடங்கு சந்தோஷம்
ஸ்டோரி…
மிடில் கிளாஸ் தம்பதி முனிஷ்காந்த் & விஜயலட்சுமி.. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள்.. ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ₹ 15,000 ரூபாய்க்கு வேலை பார்க்கிறார் முனிஷ்காந்த்.. போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது..
இந்த சூழ்நிலையில் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் ஒரு கோடி கிடைக்கிறது.. ஆனால் அது கையில் கிடைப்பதற்குள் அதை தவற விட்டு விடுகிறார்.. இதனால் குடும்பத்திற்கு பிரச்சினை வருகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது.? தவறவிட்ட அதிர்ஷ்டம் மீண்டும் கிடைத்ததா.? கணவன் மனைவி மீண்டும் இணைந்தார்களா.? மிடில் கிளாஸ் வாழ்க்கை என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
முனிஷ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்..
கதாநாயகன் என்பதை விட கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் முனிஷ்காந்த். இவரது அப்பாவித்தனமான நடிப்பு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.. மனைவிக்கு கட்டுப்பட்ட கணவனை கண் முன் நிறுத்தி இருக்கிறார்..
கணவனை கண்ட்ரோல் செய்யும் மனைவி கேரக்டரில் விஜயலட்சுமி.. எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ஆனால் பணம் வந்தால் எப்படி எல்லாம் பெண்கள் மாறுவார்கள் என்பதையும் தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார்..
நண்பனுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் காளி வெங்கட்..
ராதா ரவி,, மாளவிகா, அவினாஷ், வேல ராமமூர்த்தி ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பளிச்சசிடுக்கின்றனர்.
இதில் குரேஷி & கோடங்கியின் ஒன் லைனர் காமெடிக்கு கேரண்டி..
டெக்னீசியன்ஸ்…
சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.. மூவரும் இந்த மிடில் கிளாசுக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர்..
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த மிடில் கிளாஸ்..
DEV மற்றும் KV துரை தயாரித்துள்ளனர்..
மிடில் கிளாஸ் வாழ்க்கையை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் அதே சமயம் பணம் வந்தாலும் மிடில் கிளாஸின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இருக்காது.. அது அவர்களின் குணாதிசயத்தை பொறுத்தது..
பெரும் தொகை கிடைத்தாலும் மிடில் கிளாஸ் குணம் மாறாது என்று சொல்லப்பட்டாலும் இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா? சினிமாவில் மட்டுமே இது சாத்தியம் என்ற நினைப்பே நமக்கு வருகிறது..
மனிதர்கள் காக்கையின் குணத்தை கற்க வேண்டும் என்ற மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம்..
Middle Class movie review

