மீண்டும் விஷாலுடன் இணைந்த அஞ்சலி..; சூப்பர் குட் ஃபிலிம்ஸ் & ரவி அரசு கூட்டணி

மீண்டும் விஷாலுடன் இணைந்த அஞ்சலி..; சூப்பர் குட் ஃபிலிம்ஸ் & ரவி அரசு கூட்டணி

 

மீண்டும் விஷாலுடன் இணைந்த அஞ்சலி..; சூப்பர் குட் ஃபிலிம்ஸ் & ரவி அரசு கூட்டணி

 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 99 படத்தை தயாரித்து வருகிறது.. தனது அடுத்த படைப்பாக நூறாவது படத்தையும் தயாரிக்க தயாராகி வருகிறது.

இது சூர்யவம்சம் 2 எனக் கூறப்படுகிறது.. மேலும் இதில் சரத்குமார் ஜீவா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 99 ஆவது படத்தை
ரவி அரசு இயக்க உள்ளார்.. இதில் விஷால், துஷாரா விஜயன் இணைந்து நடித்து வருகின்றனர்.. பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது லேட்டஸ்ட்டாக அஞ்சலி இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு விஷாலுடன் மதகஜராஜா படத்தில் இணைந்து அஞ்சலி நடித்து இருந்தார்.. அந்த படம் 13 ஆண்டுகளுக்கு பின் அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது..

இந்த படத்தின் டைட்டில் டீசரை நாளை காலை 11.45 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

கூடுதல் தகவல்.. :

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடிகர் விஷால் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.. அப்போது நடிகர் சங்கம் மற்றும் அவரது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆகஸ்ட் 29 திருமணம் நடைபெறும் அறிவித்திருந்தார்.. ஆனால் அது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

 

Vishal Dushara Anjali joins in Ravi Arasu Direction