60 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு.. முதலமைச்சராகிறார் விஜய்.; காங். – விசிக – கம்யூ. & முஸ்லீம் லீக் ஆதரவு
60 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு.. முதலமைச்சராகிறார் விஜய்.; காங். –
விசிக – கம்யூ. & முஸ்லீம் லீக் ஆதரவு
இன்று மே 9… தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய், பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்களின் கடிதங்களை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்
இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பதால், ஆளுநர் விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களான வீரபாண்டியன் மற்றும் பெ. சண்முகம் இருவரும் கூட்டாக ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் மேலும் கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுப்பதாக அறிவிப்பு.
மேலும் விசிகவும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சூழலில் தவெகவின் 107 உடன் காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 4, விசிக மற்றும் முஸ்லிம் லீக் சேர்ந்து 4 என மொத்தம் தவெகவிற்கு 120 இடங்கள் பெரும்பான்மை கிடைத்துள்ளது..
தனக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் த.வெ.க தலைவர் விஜய்.
த.வெ.க-வுக்கு ஆதரவளித்துள்ள CPI, CPM கட்சியினருக்கு விஜய் நேரில் நன்றி.
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு மட்டுமே கூட்டணி அல்ல என இந்த கட்சிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

நாளை மே 10 தேதி காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்க உள்ளார்.. இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது..
நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.. ஜோசப் விஜய் என்னும் நான் என்று அவர் பேசும் வார்த்தைக்காக அவரது ரசிகர்கள் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்..
ஆனால் இதுவரை கவர்னர் தரப்பில் இருந்து தமிழக வெற்றி கடக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.. அவர் கேரளா செல்வதாக இருந்தது.. ஆனால் திடீரென தனது கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டு விஜய்யை சந்தித்துள்ளார் கவர்னர்.. மே 13ஆம் தேதிக்குள் விஜய் அவரது மெஜாரிட்டி நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார் என்பதும் இங்கே முக்கியமான தகவல் ஆகும்..
இதன் மூலம் 60 ஆண்டு கால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.. தமிழகத்தை இது 60 ஆண்டு காலமாக திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.. 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி ஆட்சி செய்து வந்தது.. தற்போது 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர்வையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது..
Vijay became CM of Tamilnadu with Support of 120 MLAs

