விஜய்யை சந்தித்த விஷாலின் வித்தியாசமான சிந்தனை..; மற்ற நட்சத்திரங்கள் செய்வார்களா.?
விஜய்யை சந்தித்த விஷாலின் வித்தியாசமான சிந்தனை..; மற்ற நட்சத்திரங்கள் செய்வார்களா.?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலமைச்சர் ஆனார் (நடிகர்) விஜய்.
கடந்த மே மாதம் பத்தாம் தேதி தமிழகத்தில் முதலமைச்சர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. எனவே விஜய்யை பலரும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..
முக்கியமாக சமீப காலங்களில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரை சங்கங்களும் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களில் கமல்ஹாசன், நடிகர் பிரசாந்த் அவர் தந்தை தியாகராஜன், சினேகா பிரசன்னா ஜோடி, குஷ்பூ சுந்தர் ஜோடி, சிம்ரன் அவரது கணவர், நடிகர் சிம்பு நடிகர் விஷால், நடிகர் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..
பெரும்பாலும் விஜய்யை சந்தித்த பலரும் அவருக்கு பூங்காத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..
எப்போது வித்தியாசமான சிந்தனையுடன் அணுகும் நடிகர் பார்த்திபன் விஜய்யின் பெரிய உருவ படத்தை வரைந்து விஜய் பேரரசு என்ற வாழ்த்தி இருந்தார்..

இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால் வித்தியாசமான விஷயத்தை மேற்கொண்டுள்ளார்..
தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்துள்ள நடிகர் விஷால், வழக்கமாக வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பொன்னாடைக்குப் பதிலாக, அந்தப் பணத்தைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று மாணவிகளின் கல்வி உதவித்தொகையாக முதல்வர் விஜய்யிடம் வழங்கியுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.. நடிகர் விஷாலை போல மற்றவர்களும் செய்வார்களா.?
#CMVijay | #ActorVishal
Vishal met CM Vijay and he done good Gesture for students

