வட்டக்கானல் விமர்சனம்… ராஜ போதையில் ராஜ நடை போடும் நவீன சமூகம்

வட்டக்கானல் விமர்சனம்… ராஜ போதையில் ராஜ நடை போடும் நவீன சமூகம்

வட்டக்கானல் விமர்சனம்… ராஜ போதையில் ராஜ நடை போடும் நவீன சமூகம்

 

ஸ்டோரி..

சமூகத்தில் போதை பொருள்கள் அதிகமாக இருந்தாலும் ராஜ போதை எனப்படும் காளான் கொடைக்கானலில் இருக்கிறது..

இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு பணக்கார குடும்பத்திடம் கைவசம் இருக்கிறது.. இந்த குடும்பத்தின் தலைவர் மனோ இறந்த பிறகு அவரது மகள் மீனாட்சியிடம் இந்த சொத்து உரிமை இருக்கிறது..

எனவே இந்த நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார் வில்லன் ஆர் கே சுரேஷ்.. இவர் தத்தெடுத்து வளர்க்கும் மூன்று மகன்கள் இதற்கு உதவியாக இருக்கின்றனர்..

ஒரு கட்டத்தில் சுரேஷ் மூத்த மகன் துருவன் மீனாட்சியை காதலிக்கிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது.? வில்லன் திட்டப்படி அந்த நிலத்தை இவர்கள் கைப்பற்றினார்களா.? அல்லது காதலிக்காக அந்த பக்கம் துருவன் சாய்ந்து சென்றாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே சுரேஷ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், கபாலி விஸ்வந்த், சரத்  & பலர்..

பாடகர் மனோவின் மகன்தான் துருவன்.. படத்தில் துருவன் காதலியின் அப்பாவாக நடித்துள்ளார் மனோ.. ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் அதை அழகான புன்னகை முகத்தோடு..!

துருவன் செம ஸ்மார்ட்.. நீண்ட தாடியுடன் முகத்தை மூடி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.. வாய் பேச முடியாதவராக மீனாட்சி.. இவர் மீது பரிதாபம் வருகிறது.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லன் வேடத்தில் ஆர் கே சுரேஷ்.. இவரது கெட்டப் உடல் மொழி அனைத்தும் மிரட்டல் ரகம்..

ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் ஆகியோர் தங்கள் பங்களிப்பில் சிறப்பு.. கிளைமாக்ஸ் இல் வித்யாவின் வில்லத்தனம் வேற லெவல்..

கபாலி விஸ்வந்த்.. வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கவனம் பெறுகிறார்.. இவரிடம் சரத்-தும் கொஞ்சம் கலகலப்புக்கு உதவி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

MPR Films மற்றும் Skyline Cinemas சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, பித்தக் புகழேந்தி இயக்கி இருக்கும் படம் வட்டக்கானல்.

எம்எம் ஆனந்தின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகை திரையில் காணமுடிகிறது.. இசையமைப்பாளர் மாரீஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம்..

டான் அசோக் சண்டைக் காட்சிகள் கொடைக்கானலில் கூட அனல் பறக்கிறது..

புகழேந்தி இயக்கியிருக்கிறார் வட்டக்கானல்.. கானல் என்றால் காடு என்று அர்த்தம்.. போதை பழக்கத்தால் சீரழியும் சமூகத்தை சாடி இருக்கிறார்.. இன்றைய இளைஞர்களின் போதை மோகத்தையும் சொல்லி அதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்..

 

Vattakaanal movie review