பகல் கனவு விமர்சனம்… FRAUD YOU TUBERS

பகல் கனவு விமர்சனம்… FRAUD YOU TUBERS

 

பகல் கனவு விமர்சனம்… FRAUD YOU TUBERS

 

ஸ்டோரி…

தொழிலில் பலமுனை போட்டிகளை பார்த்திருப்போம்.. இது தற்போது youtube காலம்… எனவே யூட்யூபில் மற்ற சேனலை முறியடிக்க இன்னொரு சேனல் போடும் சதியாட்டம் தான் இந்த படம்..

பைசல்ராஜ் தன் நண்பன் கராத்தே ராஜன், காதலி அதிரா உதவியுடன் யூ டியூப் சேனல் நடத்துகிகிறார்.. ஒரு கட்டத்தில் சர்ச்சையான வீடியோக்களை பதிவிட முடிவு இருக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் கூல் சுரேஷ் வருகிறார்

அப்பொழுதுதான் வீடியோவின் வருமானமும் ஏறும்.. பல லட்சம் பார்வையாளர்கள் பார்ப்பார்கள் என்று திட்டம் போடுகின்றனர்.. பேய் பற்றிய வீடியோவை போட்டால் நிறைய பேர் பார்ப்பார்கள் என்பதால் இவர்களே பேய் செட்டப் செய்து வீடியோ போட திட்டமிடுகின்றனர்..

ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது.. அப்படி என்ன நடந்தது என்பதுதான் இந்த மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….

நாயகனாக பைசல்ராஜ் சிறப்பு.. youtube டிரெண்டுக்கு ஏற்ப இவர் போடும் திட்டங்கள் சபாஷ் ரகம்..

அதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் ஆகியோரும் உண்டு.. இதில் ஸ்கூல் சுரேஷ் மற்றும் கராத்தே ராஜா இருவரும் நமக்கு நன்கு அறிமுகமான நடிகர்கள்..

 

டெக்னீசியன்ஸ்…

உனக்கும் எனக்கும் இடையில் தூரம்… என்ற பாடலும் அதன் வரிகளும் நம்மிடம் கவனம் பெறுகின்றன.. சுரேஷ் நந்தனின் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓகே ரகம்.. ஆனால் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

இயக்குநர் பைசல்ராஜ்
யூ டியூப்பர்களின் பேராசையை ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக கொடுத்துள்ளார்.. நாம் youtube-யில் பார்க்கும் அனைத்து உண்மையல்ல எனவே அதை பொழுது போக்காக பார்த்து கடந்து செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்..

 

Pagal Kanavu movie review