தந்த்ரா விமர்சனம்.. தீயவற்றை செய்ய நல்ல உடலை தேடும் ஆவி
தந்த்ரா விமர்சனம்.. தீயவற்றை செய்ய நல்ல உடலை தேடும் ஆவி
ஸ்டோரி…
நிழல்கள் ரவியின் மகன் அன்புமயில்சாமி.. ஜாலியான பேர்வழி.. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மாமா சாமிநாதன் ஊருக்கு செல்கிறார்.
அங்கு நாயகி மீனாவை சந்திக்கிறார் நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்கிறது.. ஒரு கட்டத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில்… நாயகியின் தோழி இந்த திருமணம் நடக்கக்கூடாது.. நடந்தால் மணமக்கள் உயிருக்கு ஆபத்து என்று வாக்கு சொல்கிறார்..
இதனால் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.. திருமண நடந்தால் என்ன பிரச்சனை? என்பது குறித்து ஆராய்ச்சியில் இறங்குகின்றனர்.. அப்போது அவர்களுக்கு புதுப்புது தகவல்கள் கிடைக்கிறது.. அது என்ன அதன்படி நடந்தார்களா அல்லது அதை எடுத்து போராடி திருமணம் செய்து கொண்டார்களா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….
அன்பு மயில், சுவாமிநாநன், ஜாவா சுந்தரேசன், நிழல்கள் ரவி, சசிகுமார், சித்தா தர்ஷன், சுப்ரமணியன், மீனா, பிருந்தா கிருஷ்ணன், நரேஷ் ஜாக் மற்றும் பலர்.
அரட்டை ஆட்டம் பாட்டம் காதல் ரொமான்ஸ் பேய் பதட்டம் என அனைத்தையும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக்க முயற்சித்துள்ளார் மயில்சாமியின் மகன் அன்பு..
நாயகிகள் இருவரும் கிராமத்து பாவாடை தாவணியில் மனங்களை கொள்ளை அடிக்கின்றனர்.. இவர்களுடன் அனுபவிக்க நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
கணேஷ் சந்திரசேகரன் இசை அமைக்க, ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
வேதமணி இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த படம்.. இந்த உலகம் முழுவதும் நல்லதும் இல்லை.. கெட்டதும் இல்லை.. நல்லதும் கெட்டதும் இரண்டும் கலந்து நிறைந்திருப்பது தான் இந்த உலகம் என்பதை வலியுறுத்தியுள்ளது இந்த படம்..

முதல் பாதியில் நாம் பார்த்து பழக்கப்பட்ட கதையாக திரைக்கதை பயணித்தாலும் இரண்டாம் பாதியில் பல கிராபிக்ஸ் காட்சிகளை கொடுத்து நம்மை பயமுறுத்தி உள்ளார் இயக்குனர்.. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..
தீயவற்றை செய்ய நல்ல உடலை தேடும் ஒரு ஆவி ஆன்மாவை பற்றிய வித்தியாசமாக கதை சொல்லி இருக்கிறார்.. அதே சமயம் எதிர்பாராத திருப்புமுனை கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருப்பது சுவாரசியத்தை கூட்டுகிறது..
Thanthra movie review
—

