வங்காள விரிகுடா திரை விமர்சனம்..; ஏலே சொல்லு மக்கா.. மெரினா கடற்கரை.. இனி திராவிட கடற்கரையா.??

வங்காள விரிகுடா திரை விமர்சனம்..; ஏலே சொல்லு மக்கா.. மெரினா கடற்கரை.. இனி திராவிட கடற்கரையா.??

 

வங்காள விரிகுடா விமர்சனம்..; ஏலே சொல்லு மக்கா.. மெரினா கடற்கரை.. இனி திராவிட கடற்கரையா.??

 

ஸ்டோரி…

தூத்துக்குடியின் முரட்டு ஆம்பளை அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்).. அடிதடி வெட்டு குத்து நல்லது கெட்டது என எதிலும் முன்னிலையில் இருப்பவர் இவர்.. இவர் மீது அழகான பெண்களுக்கு ஒரு கண்.. இப்படியான சூழ்நிலையில் இவரின் நண்பர் வாசு மகள் இவரை காதலிக்கிறார்.. மகள் ஆசைப்பட்டதால் தன் வயது உள்ள குகன் அண்ணாச்சிக்கு மகளை மணம் முடிக்கிறார்.

ஆனால் அவளோ 5 வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்.. இதனால் தனக்கு வாரிசு இல்லை என்று கவலையில் இருக்கிறார்..

இந்த சூழ்நிலையில் இவரின் முன்னாள் காதலிக்கு ஒரு பிரச்சனை.. அவர் தற்கொலைக்கு முயலும் போது அவரை காப்பாற்றுகிறார்… ஆக 2 பெண்களும் அண்ணாச்சி வாழ்வில் வந்த நிலையில் முன்னாள் காதலியின் இறந்து போன கணவர் அடிக்கடி போன் செய்கிறார்..

அப்படி என்றால் அவர் இறக்கவில்லையா.? அல்லது அவர் பெயரில் யாரோ அழைக்கிறார்களா.? அதை எல்லாம் தேடி பிரச்சினைக்கு தீர்வு காண முயல்கிறார் அண்ணாச்சி.. இறுதியில் நடந்தது என்ன என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா

1980களில் வந்த மாஸ் ஆக்சன் படங்களை பார்த்த உணர்வு.. விஜயகாந்த் போல நல்லது செய்வதும் ரஜினி போல ஆக்ஷன் செய்வதும் இப்படியாக படத்தை நகர்த்திருக்கிறார்.. இடையில் குத்து பாட்டு.. அடி வெட்டு குத்து இப்படியும் நகர்த்திருக்கிறார்.. திருநங்கையாக வையாபுரி கொஞ்சம் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் வாசு விக்ரம் அண்ணா சிக்கன் நண்பனாக வந்து நிற்கிறார்.. நாயகிகள் கவர்ச்சியில் கவர்கிறார்கள்..

டெக்னீசியன்..

பெரும்பாலும் டெக்னீசியன் பெயரை குறிப்பிடும் போது யாராவது ஒரு பெயரை மறந்திருப்போம்.. ஆனால் இதில் அந்த பிரச்சனை இல்லை.. ஏனென்றால் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் தயாரிப்பு சண்டை பயிற்சி கலை இயக்குனர் படத்தொகுப்பு பாடலாசிரியர் என கிட்டத்தட்ட 21 துறைகளில் ஒருவரே.. அவர் தான் குகன் சக்கரவர்த்தியார்..

தன் மீது அபார நம்பிக்கை வைத்த ஒருவரால் மட்டுமே இது சாத்தியமாகும்.. அதற்காகவே அவருக்கு மிகப்பெரிய சபாஷ்.. தானே எல்லா துறைகளும் கையாளத் தெரிந்தவருக்கு இன்னும் திரைக்கதையிலும் ஆழமாக பதிவு செய்திருக்கலாம்.. அதை விடுத்து ஒரு தெலுங்கு படத்தை பார்ப்பது போன்ற இப்போதெல்லாம் தெலுங்கு படங்கள் தமிழை விட நன்றாக இருக்கிறது.. பழைய காலத்து தெலுங்கு படங்களைப் போலவே மசாலா அரைத்திருக்கிறார்..

திடீரென ஆக்சன்.. திடீரென பாட்டு.. திடீரென சென்டிமென்ட் இப்படியாக அனைத்தையும் கலந்து வங்காள விரிகுடாவை கொடுத்திருக்கிறார் இந்த குகன் சக்கரவர்த்தியார்..

இல்ல இல்ல என்று ஒரு பாடல் வருகிறது அதில் அண்ணா இல்லை பெரியார் இல்லை அம்பேத்கர் இல்லை.. ரஜினி கமல் இல்லை என்று சொல்லி கடைசி தனுஷ் சிம்பு வரை நான் இல்லை… நானில்லை என்கிறார்.. இப்படியாக எல்லா நடிகர்கள் & அரசியல் தலைவர்களையும் காட்டி பாட்டு வைத்திருக்கிறார்..

வேஷ்டிக்கு ஷூ போட்டு நடித்திருக்கிறார்.. பெரும்பாலும் பார்ட்டி பங்ஷன் காலங்களில் பேண்ட் சட்டை அணிந்து பிளேசர் உடை அணிவார்கள்.. ஆனால் இவர் முதல் முறையாக வேஷ்டி சட்டைக்கு பிளேசர் அணிந்திருக்கிறார்.. ஹீரோயின்க்கு ஒரு பிரச்சனை என்றால் ஹெலிகாப்டர் தான் பறந்து வருகிறார்.. இது உலக சினிமாவில் இப்படி ஒரு காட்சி அமைந்திருக்குமா மக்கா..??

 

அதெல்லாம் சரிதான் வங்காள விரிகுடாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம்.. இவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் சோகம் வந்தால் கடற்கரையில் படுத்து கொள்வார்.. அப்போது அவருக்கு ஆறுதல் கிடைப்பதாக அவர் இந்த திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்.

மேலும் மறைந்த ஏபிஜே அப்துல் கலாமின் கல்லறை வங்காள விரிவுடாவை ஒட்டி இருக்கிறது.. அதுபோல மறைந்த தமிழக தலைவர்கள் அண்ணாதுரை கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் கல்லறைகளும் மெரினா கடற்கரையில் இருப்பதால் இனி வங்காள விரிகுடாவை மெரினா கடற்கரையை திராவிட கடற்கரையாக அழைக்கலாம் என ஒரு கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்..

 

Vangala Viriguda movie review