திரௌபதி 2 விமர்சனம் 3.5/5… மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்று தடம்
திரௌபதி 2 விமர்சனம் 3.5/5… மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்று தடம்
நாடகக் காதலை மையமாக வைத்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் திரெளபதி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் மோகன் ஜீ.. அப்போதிலிருந்து இவரது பெயர் தமிழ் சினிமாவில் பேசும் பொருளாக மாறிவிட்டது… (வன்னியர் சாதி தொடர்பாகவே இவரது படங்கள் வருவதால் வன்னியர் முத்திரை இவர் மீது குத்தப்பட்டிருக்கிறது.)
தற்போது அதே பெயரில் ஆனால் வேறொரு கதை களத்தில் இந்த திரௌபதி 2 படத்தை கொடுத்திருக்கிறார்..
ஸ்டோரி…
இந்தியாவில் நுழையும் இஸ்லாமிய மன்னர்கள் இந்து கடவுளை வணங்கும் மக்களை மதம் மாற சொல்கின்றனர்.. தங்களுக்கு வரி கட்ட வேண்டும் இல்லையென்றால் மதம் மாற வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.. இங்கு ஆட்சி செய்யும் குரு நில தமிழ் மன்னர்கள் அவர்களின் மோதல் பிரச்சினையால் பிரிந்து கிடக்க இதை இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வளர்ச்சியில் முன்னோக்கி செல்கின்றனர்..
பெரும்பாலும் வரி கட்ட முடியாத சாமானிய மக்கள் மதம் மாறுகின்றனர்.. இதனால் இஸ்லாமிய மதம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.. மதம் மாற கால அவகாசம் கொடுக்கிறார்கள்.. தங்களுக்குப் பிடித்த பெண் அவள் திருமணமானவராக இருந்தாலும் தங்களின் காம விருந்துக்கு பலியாக்குகின்றனர்..
ஒருவேளை மதம் மாறவில்லை என்றால் பெண்களுக்கு பாலியல் தொல்லை செய்வது.. குழந்தைகளை மிரட்டுவது என செய்வதால் பலரும் வேறு வழியின்றி மாறுகின்றனர்..
இந்த சூழ்நிலையில் மகாராஜா நட்டியின் போர்படை தளபதி ரிச்சர்ட் ரிஷி இந்த மதமாற்றத்தை தடுக்க முயற்சிக்கிறார்.. அவரது முயற்சி பலித்ததா?
இந்த கதை ஒருபுறம் இருக்க… மன்னரை இஸ்லாமியர்கள் கொன்றுவிட அந்தப் பழி ரிச்சர்ட் மீது விழுகிறது.. ஒரு மன்னரை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு ஆனால் நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள் என அவரது மனைவி திரௌபதி அவரை பிரிந்து வாழ்கிறார்..
இப்படியான சூழ்நிலையில் இரண்டு கதைகளையும் இணைத்து வித்தியாசமான 14 ஆம் நூற்றாண்டு நடந்த மன்னர்களின் கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறார் மோகன்ஜி..
தமிழ் மன்னர்களான வீர
வல்லாளன், காடவராயர்கள் வீரத்தை
‘திரௌபதி 2’ படத்தில் பதிவு
செய்துள்ளார் இயக்குனர்..

கேரக்டர்ஸ்…
ரிச்சர்ட் ரிஷி, ரக்க்ஷனா இந்துசூடன், நட்டி
நட்ராஜ், வேல ராமமூர்த்தி, பரணி, தர்மராஜ், ஜாகுவார் நாதன் மற்றும் பலர்..
திரௌபதி என்ற கேரக்டரை தாங்கி நிற்கும் நாயகி என்பதை உணர்ந்து படம் முழுவதும் தன் நடிப்பில் மிரளச் செய்திருக்கிறார் ரக்க்ஷனா.. இவரது உடல் மொழியும் உதட்டு மொழியும் ரசிக்க வைக்கிறது..

ரிச்சர்ட் ரிஷி – தளபதிக்கு ஏற்ப தன்னுடைய உடலை கம்பீரமான தோற்றத்துடன் மெருகேற்றி இருக்கிறார்.. மனைவியை பிரிந்து பரிதவிக்கும் காட்சியிலும் மன்னரின் உத்தரவை செயல்படுத்த நினைக்கும் காட்சியிலும் நடிப்பில் கவர்கிறார்.. ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான முகபாவனைகளை தவிர்த்து இருக்கலாம்..
80 வயது மகாராஜாவாக நட்டி நடராஜ்.. வீச்சிலும் பேச்சிலும் வேகம் தெரிகிறது.. பெரும்பாலும் மன்னர் உடல் கம்பீரத் தோற்றத்தில் இருக்கும்.. இதில் நட்டியின் தோற்றம் கொஞ்சம் பொருந்தவில்லை.. அதை தன் நடிப்பில் ஈடு கட்டி இருக்கிறார்..
பெரும்பாலும் காமெடி கேரக்டரில் பயணித்த பரணிக்கு இதில் ஒரு பக்கா கேரக்டர்.. அவரும் தன் பங்களிப்பில் சிறப்பு..

கதை சொல்லும் சாமியாராக நடித்துள்ள தர்மராஜ் கவனம் பெறுகிறார்.. இன்று வெளியான ஹாட் ஸ்பாட் 2 மச் படத்திலும் அவர் நடித்திருக்கிறார். ஆக ஒரே நாளில் அவர் நடித்த 2 படங்கள் வெளியாகி இருப்பது சிறப்பு.. தர்மராஜ் ஹாப்பி அண்ணாச்சி..
தேவியானி ஷர்மா மற்றும் திவி வைத்தியநாதன் ஆகியோர் கேரக்டராகவே உணர்ந்து நடித்துள்ளனர்..
டெக்னீசியன்ஸ்…
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்,
கலை இயக்குநர்: எஸ். கமல்,
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,
படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்
ஜிப்ரான் இசையில் டூயட் பாடல் ரசிக்க வைக்கிறது.. போர்க்கள பாடல்களும் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது..
ஒளிப்பதிவும் கலைப்பணியும் பாராட்டுக்குரியது.. செஞ்சி பகுதியில் உள்ள கோட்டை & மலைப்பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்..
கலை இயக்குனரின் பணி பாராட்டுக்குரியது.. முக்கியமாக 14 நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் உடை அலங்காரம் சிறப்பு.. ஆயிஷா என்ற கேரக்டரில் வருபவரின் உடைகள் நவீன கால உடை போல அமைந்திருக்கிறது..

திருவண்ணாமலையை கதைக்களமாக
வரலாற்று சிறப்பு வாய்ந்த காவியமாக கொடுத்துள்ளார் இயக்குநர்
மோகன் ஜி… பாராட்டுக்கள்..
14 ஆம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட தமிழ் மன்னர்களின் வரலாறை இந்த படம் சொல்கிறது.. இதில் திரௌபதி தேவியின் கேரக்டர் பெரிதும் சிறப்பு.. இதுபோன்ற வரலாற்று இதிகாச படங்கள் எடுக்கும் போது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தேவைப்படும்.. இந்த படத்தை 40 நாட்களில் முடித்திருக்கிறார் மோகன்ஜி என்பது பாராட்டுக்குரிய விஷயம்.. ஆனால் சில இடங்களில் செட் அமைப்புகள் தெளிவாக தெரிகிறது.. அதை எல்லாம் கொஞ்சம் நிவர்த்தி செய்து இருக்கலாம்..
தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து மாறாக திரௌபதியை ஒரு வரலாற்று இதிகாசமாக எடுத்திருக்கிறார்.. இதில் அடுத்த பாகமும் தொடரும்..
Draupathi 2 movie review

