வணங்கான் விமர்சனம் 4/5… விருதுகளை வெல்வான்
வணங்கான் விமர்சனம் 4/5… விருதுகளை வெல்வான்
ஸ்டோரி….
நாயகன் அருண் விஜய்.. வாய் பேச முடியாதவர்.. காது கேளாதவர். ஆனால் அநியாயங்களை தட்டிக் கேட்க குரல் கொடுப்பவர்.. இதனால் அடிக்கடி காவல் நிலையம் பஞ்சாயத்து என இவரது வாழ்க்கை நகர்த்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு ஒரு தங்கை.. அண்ணனின் குரலாக இருப்பவர்..
இந்த சூழ்நிலையில் கண் பார்வையற்ற ஆதரவற்றோர் விடுதியில் வேலைக்கு செல்கிறார் அருண்.. அங்கு செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.. அங்கு உள்ள குழந்தைகளிடம் அன்பாக பழகுகிறார்.
ஒரு நாள் பார்வையில்லாத 6 பெண்கள் தனித்தனியாக குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.. அவர்களுக்கே தெரியாமல் அங்கு வேலை செய்யும் ஆண் செக்யூரிட்டிகள் உள்ளே நுழைந்து பெண்களை முழுவதுமாக ஆடையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனை அறிந்த அருண் விஜய் அவர்களைக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்து விடுகிறார்..
ஆனால் தான் கொலை செய்ய என்ன காரணம் என்பதை போலீசில் சொல்ல மறுக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? இவர் சொல்ல மறுப்பது ஏன்? போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது.? இவர் இல்லாத தங்கை என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
‘வணங்கான்’ படத்தை எந்த தயக்கமும் இல்லாமல் தேர்ந்தெடுத்ததற்காக நாயகன் அருண் விஜயை அளவற்ற அளவில் பாராட்ட வேண்டும்.. தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் ஊமை கேரக்டரை தேர்ந்தெடுத்த அருண் விஜய்க்கு அப்ளாஸ் கொடுக்க வேண்டும்..
ஹீரோயினுடன் ரொமான்ஸ் பேசி.. ஆக்ஷனில் பன்ச் டயலாக் பேசி என சினிமா ஹீரோ பார்முலாவை உடைத்து தன் ஊமை கேரக்டரை பேச வைத்திருக்கிறார் அருண் விஜய்.. இதுதான் உண்மையான பாடி லாங்குவேஜ் என்பதை உணர வைக்கும் அளவுக்கு நடிப்பில் அதிரவிட்டிருக்கிறார் அருண் விஜய்..
சினிமா ஜட்ஜ் ஆக இல்லாமல் எதார்த்த ஜட்ஜ் ஆக வருகிறார் மிஷ்கின்.. அவருக்கான வசனங்களும் காட்சிகளும் படத்திற்கு பலம்.. சமுத்திரக்கனி சில காட்சிகள் வந்தாலும் சபாஷ் பெறுகிறார்.
அருண் விஜய்க்கு நிகராக போட்டி போட்டு நடித்திருக்கிறார் அவரது தங்கை ரிதா.. தங்கை பேசும் காட்சிகள் அழும் காட்சிகளில் நிச்சயம் நீங்களும் அவர் உணர்வுடன் கலந்து இருப்பீர்கள்..
நாயகி ரோஷினி பிரகாஷ் தன் நடிப்பில் ஜொலிக்கிறார்.. இடைவேளை வரை இவர் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது.. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் இன்டெர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சி அதிர வைக்கிறது..
நாயகியின் அப்பா அம்மா கேரக்டர்கள் படத்தில் பெரிதாக ஒட்டவில்லை.. சர்ச் பாதர் கேரக்டர் சிவாஜி கெட்டப் ரசிக்க வைக்கிறது.. போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் நடிப்பு கவனம் பெறுகிறது..
டெக்னீசியன்ஸ்…
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அருமை.. மனதில் இடம் பிடிக்கும் வரிகளுடன் தெளிவாக இருப்பது சிறப்பு..
ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையில் மிரள விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்..
கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ்..
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா மற்றும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஷில்வா ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது.. ஆக்சன் காட்சிகள் படத்திற்கு பெரும்பலத்தை கொடுத்திருக்கிறது..
பாலா படங்களுக்கு என்று ஒரு ஃபார்முலா இருக்கும்.. அந்த டெம்ப்ளேட் கதையை மாற்றவில்லை… நாயகியை வேண்டாம் வெறுப்பாக எப்போதும் ஹீரோ அடித்துக் கொண்டே இருப்பது தேவையில்லாதது.. அது போல Co2 விடும் காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது..
அதுபோல கிளைமாக்ஸ் முடிவு சோகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.. அந்த முடிவும் தேவையில்லை.. அதற்கான விளக்கமும் படத்தில் இல்லை.
ஆனால் பாலா படங்களில் ஒரு விஷயத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.. பாடலில் ஹீரோ ஃபாரின் செல்லாமல் அந்த கிராமத்திலேயே கேரக்டர் இருப்பது போல பாடல் காட்சியிலும் இருப்பது சிறப்பு.. இயக்குனருக்கு ஏற்ப இசையை ஆழமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்..
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களையும் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் கடுமையான தண்டனைகள் வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் பாலா..
படத்தின் கதை களத்திற்கு ஏற்ப பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..
அன்பைக் கூட அதிரடியாக ஆக்ஷன் ஆக சொல்லும் அனுபவம் பெற்றவர் பாலா.. இந்த படமும் விதிவிலக்கல்ல..
ஆக இந்த வணங்கான்… இயக்குனர் பாலா அருண் விஜய். ரிதா மற்றும் ரோஷினி ஆகியோர்களுக்கு விருதுகளை பெற்று தரும் என உறுதியாக சொல்லலாம்..
Vanangaan movie review

