கேம் சேஞ்சர் விமர்சனம் 3.25/5.. திகட்டும் பிரம்மாண்டத்தில் கலக்கும் கலெக்டர்.!

கேம் சேஞ்சர் விமர்சனம் 3.25/5.. திகட்டும் பிரம்மாண்டத்தில் கலக்கும் கலெக்டர்.!

 

கேம் சேஞ்சர் விமர்சனம் 3.25/5.. திகட்டும் பிரம்மாண்டத்தில் கலக்கும் கலெக்டர்.!

ஸ்டோரி…

நாயகன் ராம்சரண்.. ஒரு கல்லூரி மாணவர்.. அநியாயம் எங்கு நடந்தாலும் அடித்து தூள் கிளப்பும் ஆவேசக்காரர்.. நாயகி கியாரா அத்வானியை பார்த்ததும் காதல் கொள்கிறார்.. காதலியை சுற்றி சுற்றி வரும் போது ‘நீ கோபப்படுவது சரி..ஆனால் உன்னுடைய கோபம் வீணாக கூடாது.. ஒரு அதிகாரத்தில் இருக்கும்போது உன்னுடைய பலருக்கு உதவும்.. எனவே நீ ஒரு கலெக்டர் ஆனால் உன்னுடைய கோவத்திற்கு வலு கூடும்.. நல்லது நடக்கும் என்கிறார்.

அதன்படி கலெக்டர் ஆகி நாட்டுக்கு சேவை செய்து வருகிறார்.. அநியாயங்களை தட்டி கேட்டு மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் படுத்த படுக்கையில் இருக்கும் மாநில முதலமைச்சர் ஸ்ரீகாந்த் ஒரு கட்டத்தில் திடீரென ராம் சரணை தன்னுடைய அரசியல் வாரிசு.. அவர்தான் முதல்வர் என சொல்லி இறந்து விடுகிறார்.

முதலமைச்சர் ஸ்ரீகாந்துக்கு பிள்ளைகள் (SJ சூர்யா) இருக்கும்போது ராம் சரணை அரசியல் வாரிசாக முதல்வராக நியமிக்க என்ன காரணம்.? பின்னணியில் நடந்தது என்ன?:அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? ராம்சரண் முதலமைச்சர் ஆனாரா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

விவசாயி ஐபிஎஸ் ஐஏஎஸ் என மூன்று முகம் காட்டி ஆக்சன் மற்றும் ஆக்டிங்கில் அதிரவிட்டிருக்கிறார் ராம்சரண்.. ராம்சரனின் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் டைரக்டர்..

கியார அத்வானி நாயகி பாடலுக்கும் ஓரிரு காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்.. கவர்ச்சியாகவும் கிக்கேற்றி வந்து செல்கிறார் கியாரா..

நேராக நடக்காமல் ஒரு பக்கம் சைடாக நடக்கும் சுனில் கேரக்டர் தேவையற்றது.. அந்த கேரக்டர் அப்படி காட்டப்பட்டிருப்பதும் தேவையில்லை .. காமெடி என்ற பெயரில் கடுப்பேத்தி இருக்கிறார்.. மாவீரன் கேரக்டரில் வரும் ஜெயராமின் கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. ஸ்ரீகாந்த் மற்றும் சமுத்திரனி கேரக்டர் படத்திற்கு பலம்.. ஆனால் சமுத்திரக்கனி படத்தில் மொத்தம் 5 வார்த்தைகள் மட்டும் தான் பேசி இருப்பார் போல..

அப்பா ராம்சரனின் மனைவியாக வரும் அஞ்சலி அழுத்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.. பிரம்மாண்டம் படத்தில் பிரம்மானந்தம் வேண்டும் என்பது போல ஒரு காட்சியில் வந்து செல்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் திரு காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் இன்ச் பை இன்சாக கொடுத்திருக்கிறார்.. ஷங்கர் படங்களில் பிரம்மாண்டம் இருந்தாலும் நிதானம் இருக்கும்.. ஆனால் இதில் இயக்குனர் ஹரியின் வேகத்தை போல காட்சிகளை காட்டி இருக்கிறார்..

இதுவரை ஷங்கர் படங்களுக்கு ரகுமான் அனிருத் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களே இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் முதன்முறையாக தமன் இசையமைத்துள்ளார்.. ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு ஈடு கொடுத்து பின்னணி இசையில் தெறிக்க விட்டாலும் பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..

சாதாரண கதை கிடைத்தாலே பிரம்மாண்டமாக படம் எடுப்பவர் இயக்குனர் ஷங்கர்.. அப்படி இருக்கையில் அரசியல் முதலமைச்சர் ஐபிஎஸ் ஐஏஎஸ் என கதையே பிரமாண்டமாக இருக்கும் போது விட்டுவிடுவாரா.? ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை திகட்ட கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.

இவரின் முந்தைய படங்களான முதல்வன், சிவாஜி, இந்தியன், அந்நியன் உள்ளிட்ட அனைத்து படங்களையும் மாற்றம் செய்து படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. எனவே இந்த கேம் சேன்ஜ்ர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..

ஊழல் அரசியல்வாதியின் பிடியில் கலெக்டர் சிக்காமல் அவருக்கான அதிகாரத்தை சொல்வதும்.. கலெக்டர்கான எல்லை? பதவியின் வலிமை? எவ்வளவு என்பதை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்திருக்கிறார். முக்கியமாக மக்களின் வலியாக உதயமான அரசியல் கட்சி.. அதில் ஏற்படும் உட்கட்சி பூசல் என அனைத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஷங்கர்..

Shankars Game Changer movie review